இது தமிழன்று என்று தமிழாசிரியர் கூறுவர்.
உடல் உயிர்வாழ்க்கைக்கு உகந்த நிலையே சுகம்.
உக >உகத்தல்
உக >உகப்பு.
உக > சுக > சுக+அம் = சுகம்.
உ > சு திரிபுக்கு எடுத்துக்காட்டு:
உலவு > சுலவு (வினைச்சொல)
இதுபோலவே உக > சுக என்பதும்.
ஆதாரம் என்பது செல்வம் தந்து போற்றுதல். ஆ முன்காலத்தில் செல்வம்.
ஆ தருதல் - ஆதாரம்,
பிற்காலத்தில் அது பிறவகைத் தரவுகளையும் குறித்தது.
இங்ஙனம் சுகம், சுகாதாரம் என்ற சொற்கள் தமிழ் மூலமுடையனவாகலாம்.
====================================================================
உயிர் முதலாகிய சொற்கள், அவ்வுயிர் சகர மெய் பெற்றுத் திரிதல் இயல்பு.
அடுதல் = சுடுதல், சமைத்தல்.
அடு+இ =( அட்டி) > (ச்+அட்டி) > சட்டி.
ஏமம் > சேமம்.
ஏண் > சேண்.
அமையம் > சமையம்,
அமைதல் > சமைதல்.
சில திரிபுகளில் நுண்பொருள் வேறுபட்டு, தொடர்புடைய வேறு பொருள் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக