வியாழன், 7 டிசம்பர், 2023

[அ]வித்தை - சொல்லும் தொடர்பினவும்.

சொல்லமைப்பு :  வித்தை அவித்தை.

வித்தைக்கு  எதிர்ச்சொல்  அவித்தை என்பது நீங்கள் அறிந்தது.  வித்தை என்பது கல்வி ஆயின்,  அவித்தை என்பது கல்லாமை,  படிப்பறிவு இன்மை என்று பொருடரும்.  இடனுக்கேற்ப,   ஆன்மிக அறிவின்மையும் இதன் பொருளாகலாம்.  அதாவது, இறையியலிலும்  ( theology  ) இச்சொல்லே பயின்றுள்ளது.

அல் என்பது அல்லாதது.  அல் என்பது அ என்று குறைந்தும் குறையாதும்  அன்மைப் பொருளில் வரும்.  அல் >  அ >  அ+ வித்தை >  அவித்தை ஆகும். அன் என்றும் வருதல் உளது.  எ-டு:  அன்மொழி (த் தொகை).  அன்முறை என்பதில் னகர ஒற்று புண:ர்ச்சித் திரிபு.

அவித்தை என்பது  அவிச்சை ( த - ச திரிபு),  அவிஞ்ஞை,  அவித்தியை என்று   சில வகைகளில் திரிதல் உள்ளது. இவற்றுள் மூல எதிர்மறை வடிவம் அவித்தை என்பதே.  ஐந்து வகை மாயைகளில் அவித்தையும் ஒன்று.  

இறையியல் பொருண்மை  அடைவு:

மற்றவை தமம், மோகம், அநிருதம் என்ப. தமம் என்பது தன் "அம்" விகுதியை இழந்து  சு விகுதி பெற்று. தமசு என்று மாகும். தமம், தமசு ஒரு பொருளன; இருள் என்பதே அது.  சு  :  இது தமிழ் விகுதி:  எ-டு: பரி(தல்) > பரிசு.   மனிதனின் சொந்த மனத்து இருளால் பிறழ உணர்தல். ஒன்று வேறொன்றாய்த் தெரிவது. தம்மிலிருந்தே தோன்றுவதால் தமம் ஆகிறது. அநிருதம் என்பது அல்+ நில்+ உரு+ து + அம் = அ( ல்) + நி ( ல் ) + ( உ) ரு + து அம் > அனிருதம் அல்லது அநிருதம். என்றால்: நில்லாதது, இல்லாதது, பொய்யானது. உருநிலை அற்ற ஒன்று.  அ என்ற முன்னொட்டு அன் என்றும் வரும்.  அன் என்பதைப் பயன்படுத்தினால் பிற ஏற்றபடி மாற்றிக்கொள்க.  இறையியலுக்கான சொற்களைப் படைக்கும்போது,  சொல்லாக்கத்தில் திரிபுகளை உய்த்துக்கொளல் தேவையே ஆகும்.  இவையெல்லாம் இவ்விறைக்கொள்கையில்  இவர்கள் தாமே கண்டு புனைந்தவை ஆதலின்,  சொற்களைத் திரித்தே அமைத்தல் இயலும்.

வித்தை, சொல்லும் முடிவும்:

இனி வித்தை என்ற சொல்லை அறிவோம்.

 அவித்தை என்பது 'வித்தை இன்மை' என்பதால் வித்தை என்பது எப்படி அமைந்தது என்பதையும் அறிதல் வேண்டும். 

இங்கு இது விளக்கப்பட்டுள்ளது.  விரிவு வேண்டின் கருத்து இடுக. 

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

உசிதம் சொல் தரவு

 இச்சொல்லை ஆய்ந்து இன்று வருவழி கண்டறிவோம்,

உய்தல் என்ற சொல் ஓரளவு பயன்பாடு கண்டுள்ள சொற்களில் ஒன்று. இந்த வினையிலிருந்து உசிதம் என்பதை அடைவுசெய்வோம். உய்தல் என்பதன் பொருளாவன: 1. உயிர்வாழ இயலுதல் 2 காப்பாற்றப் படுதல்  3  இடரின் அல்லது துன்பத்தின் நீங்குதல்  என்பது நாம் இயல்பாய் அறிபொருளாம்.  உசிதம் என்பது உய்தல் சொல்லடி வரவினது ஆயின்,  இடர் அல்லது துன்பமின்றி முடித்தல் (3) என்பது மிகப் பொருந்திய சொல்லாக்கப் பொருளாகும்.

இதன் அமைப்பு இவ்வாறு:

உய் + (இ )+ து + அம் எனின் உயிதம் என்றாகும் (அல்லது உய்தம்.)

இ = இங்கு

து =  உடையது  ( உரிய)

அம் -  அமைப்பு.

இதை வாக்கியப்படுத்தினால்:  இந்தச் ( சூழ்நிலையில் )  துன்பம் நீங்கிவிட உரிய அமைப்பு  என்று பொருள் கிட்டுகிறது.

உயிதம் என்ற மூலவடிவு இல்லாதொழிந்தது.  தமிழன் தன் நூல்களனைத்தையும் பாதுகாத்து வைத்திருக்க இயன்றவனாகில்  இருந்திருக்கும். ஆனால் சிறிது காலத்தின் முன் யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகமே எரிந்து சாம்பலானதாகச் செய்தித்தாள்களில் வந்ததே!  என்னென்ன சொற்கள் அழிந்தன என்று  இப்போது சொல்லமுடியுமோ? இவ்வாறு தமிழன் என்ற இவனுக்கு ஏற்பட்ட வரலாற்று இடர்களுக்கெல்லாம் விளக்கம் எவ்வாறு காண்பது.  தென்னாட்டுப் போர்க்களங்க ளெல்லாம்  அளவற்றவை ஆயினவே.  ஆதலின் "உயிதம்" என்பதே மீட்டுருவாக்கம். யகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பதை முன் இடுகைகளில் கொடுத்துள்ளோம்.

உயிதம் -  உசிதம்  ஆகும்.  உய்தம் > உசிதம் எனினும் ஏற்புடைத்து என்க.

இனி, மிக்க உயரத்தில் வைத்துப் போற்றக்கூடியது என்ற பொருளில்:

உச்சி  > உச்சி + து + அம் >  உச்சிதம் , பின் சகர மெய் இடைக்குறைந்து உசிதம் எனினும் சரிதான்.

உ(ச்)சி >  உசி து  அம் > உசிதம் எனினுமாம்.

இங்கு இது அமையும் என்பது இங்கு+ இது + அம் > இங்கிதம் ஆனது நினைவுக்கு வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

சில திருத்தங்கள்: 07122023 2037

Please refrain from making any changes.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

சந்நியாசி என்ற சொல்

 சந்நியாசி  என்பது பொருளுடன் நாடறிந்த சொல்லே  ஆகும்.

இதற்குப் பல்வேறு பொருண்மைகள் இந்திய மொழிகளில் காணலாம், பொதுவாக அறியப்படுவது என்னவென்றால் சந்நியாசிகள் மக்களைச் சார்ந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வர் என்பதுதான். பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆகித் துறந்தவர்கள் என்றும் உள்ளனர்.

எந்த மொழியில் எவ்வாறு  பொருளறியப்பட்டாலும், நாம் தமிழின் மூலமாக இதற்குப் பொருள் அறிவோம்:

சன்னி என்பதை  "தன்னி" எனப் பொருத்துதல்:

தன் -  தன் பிறந்த இடம். தன் சொந்த வாழ்வாதாரங்கள்.

நி  -   நீங்கி,

நீத்தல் -  விட்டு நீங்குதல்  ( உலகுதொடர்பானற்றை விட்டு விலகுதல்) என்றும் பொருள் தரும்.  நீப்பேன் ( விட்டு நீங்குவேன்),  எதிர்மறை:  நீயேன் (விட்டு நீங்கமாட்டேன்) என்ற வடிவங்கள் இப்போது வழங்கவில்லை.  இன்னொரு காட்டு:  காத்தல் (வினை),  காப்பேன்,  காவேன்  என்பன உரியவான வடிவங்கள்.  ஈகார இறுதிக்கு யகர உடம்படுத்தல் வரும்.  நீவு(தல்) என்பது வினையாயின் நீவேன் என்று எதிர்மறையில் வரும். இவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தி உணர்ந்துகொள்க.

பற்றுக்கோடு  அல்லது ஆதரவு:

ஆசு > யாசு>யாசு+ இ >  யாசித்தல்.

ஒ.நோ:  ஆ+ து+ அ + அர் > ஆதவர் ( வகர உடம்படுமெய்),  >  யாதவர்.   ஆவளர்ப்போர் என்பது,  இங்கு ஆ > யா ஆனது. து = உடைமைப் பொருள்.

பற்றுக்கோடு அல்லது ஆதரவு வேண்டுதல். இரத்தல்.

ஆகவே தன் நிலையின் நீங்கிய ஒருவன்  பிறரிடம் யாசித்து வாழ்தல் என்று தமிழ் மூலங்களின் மூலம் பொருள் கிட்டுகிறது.

நீங்குதல் பொருளதான நீ என்பது,  நி என்று குறுகியது,  பழம் + நீ என்பது பழநி என்று குறுகியது போன்றதே.  இளநீர் என்பது எளனி என்று பேச்சில் குறுகி ஒலித்தலும் காண்க.  வாய் நீர் என்பது வாணி (வாணி ஊத்துது என்பர்) என்றும் தண்ணீர் என்பது தண்ணி என்றும் ஆகுதல் தெளிவு. நான் நீ என்ற பதிற்பெயர்களில் நீ என்பதும் தன்னின் நீங்கியோனாய் எதிரில் நிற்போன் என்றே பொருளாதலின் நீக்கக் கருத்தே ஆகும்.

நீ என்பதும் குறுகி  நின்,  நினது,  நின(பன்மை),  நின்றன் ( நின் தன்) என வேற்றுமை வடிவம் படும்.

சந்நியாசி:  இச்சொல் தமிழிலிருந்து புறப்பட்டுப் பிற இடங்களுக்கும் பரவிற்று என்று முடிக்க.

ஆசி என்பது யாசி  என்றானது,  ஆனை > யானை என்பது போலாம்.

சந்நியாசி இறந்துவிட்டால் அவருக்கு நிலக்கொடைகளும் வழங்கினர் என்பதாகத் தெரிகிறது. நினைவிடங்களும் அமைத்தனர். இவற்றுக்கு   ஆண்டிசமாதிகள் என்பர்.  சந்நியாசிகளுக்குத் தமிழ் நாட்டில் ஓர் ஏற்றமிருந்தமை இதனால் பெறப்படும். தமிழ்நாட்டு மக்கள் இறையன்பர் ஆதரவாளர்கள்.  இவ்வாறு இறந்தோரின் அடக்கவிடங்கள்  மலாய் மொழியில் KRAMAT எனப்படும். மதித்துப் போற்றுதற்குரிய இடங்களாக இவை கருதப்படுகின்றன. ( SACRED). இங்கு அடக்கமானவர்களிடம் குறைகளுக்கு மாற்று வேண்டுவோரும் உண்டு.  ( நில் வரத்தி :  நிவர்த்தி)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.