புதன், 11 மார்ச், 2020

பேச்சில் வக்கணை.

கடிதத்தில் வக்கணையை முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.

https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_11.html


அதன் பொருத்தணை மேலே உள்ளது,  ( link )

பேசும்போது நேரிய முறையில் பேசாமல் வழுக்கலாகவும் தேவைக்கதிகமான முறையிலும் பொருத்தமின்றியும் சொற்களைப் பொழிவது வக்கணை. இது விளக்கம் தான்; வரையறவு அன்று.

வழுக்கலாகச் சொற்களைச் சேர்ப்பிப்பது அல்லது அணைப்பிப்பதுதான்  வழுக்கணை ஆதலின்

வழுக்கு + அணை =  வழுக்கணை

இது வக்கணை என்று ழுகரம் இடைக்குறைந்தது.

ழகர ஒற்றும் வருக்கமும் இடைக்குறைவது மிகுதி.

வழு + கண் =  வழுக்கண்,  வழுக்கண்+ அம் = வழுக்கணம்;  வழுக்கண்+ ஐ = வழுக்கணை, பின்  ுகரம் இடைக்குறை எனலும் இன்னொரு விளக்கம். எனினும் இதில் , அண் என்பதற்குக் கண் ( பொருள் :  இடம் ) மாற்று.

வழு -  குற்றம் ;  வழுக்கு என்பது வழு என்று வருவது மற்றொரு நோக்கில் கடைக்குறை.

வழுக்கு+ அண்
வழு + கண்.

வழு என்ற அடியில்‌  வினைச்சொற்கள்:

வழு > வழுவுதல்
வழு > வழுக்குதல்

ழுகரம் இடைக்குறைதல்:

வழுத்துதல்
வாழ்த்துதல்.
சிற்றூர்களில் முன் இதை வாத்துவது என்பர்.

வாழ்த்தியம்   வாழ்த்தி இசைக்கப்படும் இயம்.

வாத்தியம் ஆனது காண்க.

இவை திரிபுச் சொற்கள்.

இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல் என்று தொடங்கும் ஒரு
தொல்காப்பிய நூற்பா,  அதை மனப்பாடம் செய்யுங்கள்.  நூற்பா எண் மறதி.

வக்கணை -   புகழுரை பின் காண்போம்.

(இதிற் சில  தட்டச்சுப் பிறழ்ச்சிகள் சரிசெய்யப்பட்டன.  15.3.2020.
பின் மறு பார்வை பெறும்.)
Note:
We are in the fear of  grip of covid19 ( corona virus). But will try to function normally.  Flu is also in circulation.


கடிதத்தில் வக்கணை.

ஒரு கடிதம் எழுதினால் அது யாருக்காக எங்கு செல்வதற்காக எழுதப்படுகிறது என்பதைத் தெளிவாக எழுதவேண்டும்.  இல்லாவிட்டால் இதைச் சுமந்து சென்று கொடுப்பவன் யாரிடம் சேர்ப்பது என்று திணறுவான்.

கடிதத்தை இடைவருவோனிடமிருந்து பெற்றுக்கொள்பவனும் அது தனக்குத்தான் என்று  அறிந்துகொள்ள அதற்கான முன் அறிகுறிகளை அறிந்துதான்  அதைப் படிக்கத் தொடங்குவான்.


இவ்வாறு கடிதங்களை வகுத்து அணைப்பிக்க வேண்டும்.  அணைப்பித்தலாவது சேர்ப்பித்தல்.

அண்முதல் - நெருங்குதல். சேர்தல்.
அண்டுதல் -   அடுத்துச்செல்லுதல்.
அண்மை
அணிமை.
எனப் பல சொற்கள்.  இவற்றின் அடிச்சொல் அண் என்பது.

அண் >( அணு )> அணுகு > அணுகு(தல்).
அண் > அன் > அனு>  அனுப்பு > அனுப்பு(தல்)
அண் >  அணை > அணைதல்  ( கப்பல் துறையில் அணைதல் )

இவற்றில் சேர்தல் கருத்து,   தொடர்வதை அறிந்துகொள்ளுங்கள்.

வகுக்கும்  அணை.

மாட்சிமை  பொருந்திய மாமன்னரே!.

இது அணை வாக்கியம்.  அணைக்கும் வாக்கியம்.

வகுக்கு(ம்)  அணை>  வகுக்கணை > வக்கணை.

இடையில் கு என்ற எழுத்து மறைந்து இடைக்குறையானது.

வக்கணை என்பதற்கு வேறுபொருளும் உண்டு. இது பல்பொருளொரு சொல்.

பிற பொருள்  :  அவற்றை அடுத்தடுத்து அறிந்து மகிழ்வோம்.

வக்கணை = கடித முகப்புக் குறிப்புரைகள்.

சனி, 7 மார்ச், 2020

பைசா என்ற சொல்.

பைசா என்ற சொல் பாதம் + அம்சா  என்ற இருசொற்களின் இணைப்பு என்று கூறினாருளர். அப்புறம் பாதம் என்பதைக் கால் என்று பொருள்கூறினர்.  பாதம் கால் ஆனால், கால் என்பது நாலில் ஒருபகுதி என்றனர்.  ஆனால் கால் என்பது தமிழ்ச்சொல்.  நடக்கு காலும் கால்; நாலில் ஒன்றும் கால்தான்,

சிறிய மதிப்புள்ள சிறு காசுகளைப் பைக்குள் போட்டுப் பெட்டிக்குள் வைத்தனர்.   பெட்டி - கல்லாப்பெட்டி.

பைக்குள் வைக்க  (பை).  சாத்தி வைத்தபடியால்  (.சா)

ஓரிடத்தில் வைக்கப்பட்ட சிறு காசுகள்.   பை - சா.

பா (பாதம் ) அம்சா என்பதினும்  பெ (பெட்டி)  + சா ( சாத்திவை)  என்பது இன்னும் பொருத்தமாகும்.

பெ + சா > பை சா.   பெட்டிக்குள் சாத்திவைப்பது.  பெ  சா > பெய்சா > பைசா.
பை + சா > பைசா.   பைக்குள் இட்டுச் சாத்திவைப்பது. மற்ற மதிப்பு நாணயங்களுடன் கலக்காமல்.
பா + சா > பாசா.        பாதத்தின் அம்சம். பாதம் = கால்.  ஆக கால் மதிப்பு.  

பெட்டிக்குள் கண்டபடி கிடக்காமல் பைக்குள் இட்டுச் சாத்துவது பைசா.
பைக்காசு என்பதாம்.

காத்து வைப்பதே காசு. பெட்டி அல்லது பைக்குள் இடுவது காத்துவைப்பதே ஆகும். பைசா பல மதிப்பினது ஆதலின் கால் மதிப்பு என்பது முழுப்பொருள் தரவில்லை.

உருவம்  =    ரூபம்   > -  ரூபாய்.
அரசனின்  முகம்  அல்லது அரசினருடைய முத்திரை உடைய நாணயம்.

தட்டச்சு மறுபார்வை பின்.