சனி, 3 மார்ச், 2018

ஆண்டாள் அடிவீழ்வாய்




ஆண்டாள் அடிவீழ்வாய்  அம்மாவே மன்னிஎன்
றீண்டுநீ வேண்டிடில் தாண்டுவை ----மாண்டாலும்
உன்றன் வினைக்கடல்; ஒண்ஞாலம் பின்வருமே
கன்றுநிலை காண்மாறும் மாடு.




நன்கொடை பல்கலையின் நற்றமிழ்  நாற்காலிக்

கென்கோ தமிழ்மக்காள் இன்னிசையே ---- முன்காலே

சேற்றில்  அதைமீட்டுச் சேர்ந்திடுக கோதையடி;

மாற்றிப் பிறத்தலது மாண்பு.
 

உரை:

பாடல் 1:

ஆண்டாள் அடிவீழ்வாய் -  ஆண்டாள் அம்மையை
விழுந்து வணங்கு;
அம்மாவே மன்னி என்று -  என் தாயே என்னை
மன்னித்துவிடு என;
உன்றன் வினைக்கடல் -  கடல் போன்ற விரிந்த உன்
தீவினைகளை;
ஈண்டு நீ வேண்டிடில் - இங்கே நீ இவ்வாறு வேண்டிக்
கொண்டாய் என்றால்;
மாண்டாலும் - பின் நீ மாண்டுவிட்டாலும்;
தாண்டுவை - நீ மாற்றிக்கொள்ளுதல் ஆகும்.
ஒண்ஞாலம் - ஒளிபொருந்திய இவ்வுலகமானது;
பின் வருமே -  உன்னைப் புகழ்ந்து உன் பின்னால்
வரும் நிலை அடைவாய்;
கன்று நிலை மாறும் மாடு -  ஒரு மாடு கன்றாய்
இருந்து வளர்வது போல.
இறுதியடி முழு விளக்கம் இங்கு, காணச்
சொடுக்குக:
http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_53.html


பாடல் 2:


நன்கொடை பல்கலையின் நற்றமிழ்  நாற்காலிக்
கென்கோ - (இவர்) பல்கலைக்கழகத்துக்குத்
தமிழ் வளர்க்க நன்`கொடை  அளித்திருப்பது;

தமிழ்மக்காள் இன்னிசையே -  செவிகட்கு இனிய
இசையே ஆகிறது,  தமிழ் மக்களே!

முன்காலே  சேற்றில் -  ஆனால் (இவர்) முன் கால் சேற்றில்
மாட்டிக்கொண்டுள்ளது;

அதைமீட்டுச் சேர்ந்திடுக கோதையடி - (இவர்க்குச்
 சொல்வது)
 அக்காலைத் திருப்பி எடுத்துக் கோதை நாய்ச்சியாரின்
திருவடிகளில் (வீழ்ந்து )  முதலில் சேவித்துணர்வாய்.
என்றபடி.

This commentary is suspended.
(Third party suspected of causing 
computer to hang.)
Used retrieval procedures to save.
First publ: 31.1.18 2.27 am.
edited:  9.16 am on 3.3.18


tamil nadu newspapers



தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல் செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும் யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த் தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம் செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்  வாங்கிப் பார்க்க!
மணிக்குட்த்துள் யாவினையும் திணிக்கினது போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும் யாவும் உண்மை

வெள்ளி, 2 மார்ச், 2018

வெண்பா இறுதி: கன்றுநிலை மாறும் மாடு என்பது:

 ஒரு கவிதையில்:  " கன்றுநிலை காண்மாறும் மாடு"  என்று
முடித்திருந்தோம்.   அந்தக் கவிதை இங்கே இருக்கிறது:

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_31.html

இதற்கான பொருள் யாது என்றார்க்கு இப்போது இங்கு
பொருளைத் தருகிறோம்.

இத்தொடரை,  மாடு கன்றுநிலை மாறும்,  காண்  என்று
முதலில் மாற்றிக்கொள்ளுவீர்.

பொருள்:

மாடு:  ஒரு வளர்ந்துவிட்ட பசுவோ (ஆவோ)  காளையோ;

கன்றுநிலை:  ஒன்றுமறியாத, எது தனக்கு நன்மை அல்லது
எது தனக்குத் தீமை என்று தெரிந்து செயல்பட முடியாத
நிலையில் இருத்தல்;  (  அப்படி இருந்தால் );

மாறும் :    அஃது  மாற்றமடையும்

காண் :   தெரிந்துகொள்வாய்,  என்றவாறு.

கன்று என்பதைப் பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டால்:
இது மாட்டின் இளம்பருவத்தைக்  குறிக்கிறது,  எனவே
கன்று நிலை - அறியாமையுடன் இளம்பருவத்து
வீண்சேட்டைகளையும் உட்படுத்துகிறது.

கன்றுதல் என்ற வினையாக எடுத்துக்கொண்டால்:
வாட்டம், அடிபடும் நிலை,  கருகுதல், பிறர் இரங்கு
நிலை என்றும் பொருள்தரும்.  கன் என்ற அடிச்சொல்
கனல் என்பதையும் பிறப்பித்துள்ளது;  கன்று என்ற
வினையும் உண்டுபண்ணி யுள்ளது.  பொருந்துமாறு
உரைத்துக்கொளக. ஈண்டு  கன்றுநிலை
வினைத்தொகை ஆகும்.

மாட்டைப் பிறர் கண்டு சினக்கும் நிலை மாறும் என்பதும்
பொருந்தும். தொக்க உருபுகளை வருவித்துக்கொள்க.