ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

"Disproportionate Assets."......

"Disproportionate Assets.".......  என்பதை  "சொத்துக் குவிப்பு" என்றே ஊடகங்கள் மொழிபெயர்த்துக் கூறுகின்றன. இதை இன்னும் சிறப்புறச் செய்யவேண்டுமானால், வருமானத்தை மிஞ்சிய.." என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதுவும் அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. ஆகவே வருமான விழுக்காட்டினை மிஞ்சிய சொத்து வைத்திருத்தல் என்று கூறலாம்.
இதெல்லாம் தேவையில்லை. "குவிப்பு" என்ற சொல்லில் இந்தப் பொருளெல்லாம் அடங்கிவிட்டது  என்று வாதிடலாம்,
உங்கள் கருத்துக்களை வந்து வெளியிடலாம்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பிரபு

பிரபு என்ற சொல்.

பிரபு என்றால் பெரியோன் என்று பொருள். எல்லா உயர்வு குறிக்கும் சொற்களும் எந்த மொழியிலும் பெருமை குறிக்கும் அடியிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்று ஒருவன் ஐயுற்றுத்  தெளிதல் வேண்டும், பகவன். பகவான்   
என்பன பகுத்தளிப்பவன் என்று பொருள்படுமாறு பகு என்பதனடிப் பிறந்தவை.
ஆகவே, பெருமைக் கருத்துக்கு விதிவிலக்குகள் உள.

பெரு> பெரியான் > பெரியோன்.

பெரு > பெருபு > பிரபு.  

பு என்பது தொழிற்பெயர் விகுதி. எ‍-டு: திரிபு, ஒழிபு. இழிபு.

இவை வேறாகத் தெரிந்தாலும்,  திரிவு, ஒழிவு, இழிவு போன்றவைதாம் எனினும் நுண்பொருள் வேறுபாடு உடையனவாம்.

மகிழ் > மகிழ்பு > மகிழ்பன் > மகிபன். (ழகர ஒற்று கெட்டது).

அகழ்ந்த இடத்திலிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு என்ன பெயர் வைப்பது.

அகழ் >  அகழ்பு > அகழ்பன் (உடனே ழகர ஒற்றை ஒழித்துக் கட்டினால் ) > அகபன்.

இதை வேறு மொழிக்குக் கொடுப்பதானால், அன் என்ற ஆண்பால் விகுதி தேவைப்படாது. அகபு என்று வைத்துவிடலாம். அரபு மொழியார்க்குத் தருவதானால் அகப் (AHAB)  என்றே நிறுத்திவிடலாம்,


Incidentally: click  to read:

The Demoniacal: Ahab-Spirit


வியாழன், 25 செப்டம்பர், 2014

நிரப்புவது பிறப்புகளை............


பிறப்பினிலே உயர்வில்லை தாழ்வும் இல்லை;
பிரபுவென்றும் அல்லனென்றும் பேதம் இல்லை;

நிரப்புவது பிறப்புகளை நில்லாக் செல்வம்;
நிரப்பியவ‌ர் பிரபுகளென் றேறி நின்றார்;

குறைப்பட்ட ஏழைகளே கீழே சென்றார்
கொள்வறுமைக் கோடெழுந்து யர்ந்தா ரில்லை;

அரைப்பகுதி அறிவுடையார் இன்னும் பாதி
அடையாமல் அதுபோற்றி மேலும் தாழ்ந்தார்

விளக்கம்:

உடலை "இடும்பைக் கொள்கலம் " என்கின்றன  இலக்கியங்கள். பிறப்பில் இது செல்வங்களால்  நிரப்பப்  பெற்றால்,  அப்போதுதான் "பிரபு" ஆகிறான் ஒருவன். அல்லாதவன்  அதற்குத் தகுதி  இல்லாதவன்       இதுவே  உலகச்  சூழல்..