வியாழன், 1 மே, 2014

தேவையில்லாமல் பிறந்த வரிக்குதிரையின் கதி

பாவம் அந்த வரிக்குதிரை 
தேவைக்கு  மேலென்று கருதியதால் 
சுட்டுக் கொன்று துண்டு துண்டாய் 
வெட்டித் தீர்த்தனர் சிறுவர்கள்முன்!

இரக்கம்  இலாத மனிதரிடம் 
பிறக்க நேர்ந்தனை வரிக்குதிராய் !

யாரிடம் சென்று முறை யிடுவாய் 
பாரினில் வேறிடம் ஒன்றிலையோ?

ஏழா யிரத்தின் மேலென்கிறார் 
வாழற்கு வேண்டா விலங்கு மொத்தம் 

கூழும் இலைகளும் கொடுத்திருப்பேன் 
என்மனைக் கிங்கு நீ  அடுத்துவந்தால் 

உன்னாவி உறங்க உனக்கிறைவன் 
இந்நாள் அருளும் வழங்கட்டுமே 




notes:
news from:
The Sun, Thursday Feb 13 2014  p14  .Mimi Bechechi  (The Independent)
newsdesk@thesundaily.com.
www,thesundaily.my

  

கொலைவெறி

குண்டுகள் வைத்துக்  கொலைவெறி ஆடுவோன்
கணடிடான் தானோ  கயமையே  தன்னுருவாய்   
யாதும் அறியாச் சிறுமகார் பெண்டிரொடு
தீதில் முதியோர் பிறர்மாள ஈதெலாம்
எத்தனை  நாட்பொறுப்பீர் எம்மிறைவா இங்கினி
இச்செயல்கள் இன்மை அருள்.

ஸ்கந்த : இஸ்கந்தர் ஒலிஒற்றுமை


கந்தன் என்பது் தமிழில் முருகனைக் குறிக்கும் சொல்.

இதன் சங்கத வடிவம் "ஸ்கந்த" என்பது.

மலாய் மொழியில் "இஸ்கந்தர்" (Iskander ) என்பது , மன்னர்
பெயர்களில்வரும். எடுத்துக்காட்டு: "இஸ்கந்தர் ஷா" என்ற
மன்னர் (சுல்தான்) பெயர்.

இது ஒரு பெயராக மட்டுமே இப்போது பயன்படுவதாகத்
தெரிகிறது. 


ஸ்கந்த : இஸ்கந்தர்   ஒலிஒற்றுமை வெகு நன்றாகவே உள்ளது.

மலாய் மக்கள் தாங்கள் முஸ்லீம் ஆவதற்கு முன்னர் இந்துக்களாய் இருந்தனர்.  அப் பழ நாட்களில் இஸ்கந்தர்  பெயர் அவர்களிடையே வழங்கியதற்கான ஆதாரம் கிட்டினால் அது சமஸ்கிருதத்திலிருந்து சென்ற சொல்லாய் ஏற்கலாம்.

இஸ்லாமிய வரலாற்றில் "இஸ்கந்தராமா" என்றொரு நூலில் மாவீரன் அலக்சாந்தரின்   வரலாறு கூறப்படுகிறது. மலாய்க்காரர்கள் இஸ்லாமியத்தைத் தழுவிய பின்னர் அவர்கள் இப்பெயரை மேற்கொண்டிருப்பின்  இது "ஸ்கந்த" என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் தொடர்பு அற்றதென்றே முடிவு செய்யவேண்டும். 


Note:
There is some numismatic evidence, in the form of ancient coins, to identify the Arabic epithet "Dhul-Qarnayn" with Alexander the Great.  Some Muslim scholars do not support that the Koran referred to Alexander the Great by  the name Dhul Qamayun.