வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அவம், வருத்தம்

அவர்த்தி என்பது சங்கதத்தில் வறுமை என்று பொருள்படும் சொல். கடுந்துன்பம் என்ற பொருளும் உள்ளது.

அவம், வருத்தம் என்ற இரு சொற்கள் சுருங்கி இணைந்தால் "அவர்த்தி" என்னும் சொல்  தோன்றும். வருத்தம் > வருத்தி.

அவம்+ வருத்தி  = அவ + வருத்தி = அவர்த்தி.

வருத்தம் மேலிடும் கெடுதலான நிலை.

அவி+அம் = அவம், இங்கு இகரம் கெட்டது. 

abject poverty of Tamil pundits



தமிழில் புலவர் என்றிடினும்
தகுந்த மேலணி தரித்திரமோ?
இமிழும் கடலாம் அறிவினிலே
எனவே பலரும் போற்றிடினும்
அமுதே படைக்கும் அடியவளாம்
துணையைத் துவட்டும் நோயினுக்கோ
அமைவாய் மருந்தை அளித்திடவே
அதற்கும் பொருளே இலரானார்!



பட்டம் பலவே அளிப்பதினும்
பண்படு புலவர் அவரென்றால்
ஒட்டி வயிறும் உலர்வறுமை
ஓட்டும் வழியே  ஒன்றுதவி
நெட்ட நெடுகலும் அரசுதர
நிதியைத் திங்கள் ஒவ்வொன்றிலும்
கட்டி முடியாய்க் கொடுப்பதிலே
கழறும் தவறும் காண்பதுண்டோ?

புதன், 12 பிப்ரவரி, 2014

அற்றம் அறம்

கறார்  என்ற சொல் கீழே வி்ளக்கப்பட்டது.  கறு என்பது அடிச்சொல்.

இங்கு "று"   > "ற்று" ( ற்றா) என   இரட்டிக்கக்வில்லை. கற்றார் எனில் பொருள் வேறுபடும் . மறு + ஆர் என்பதோ   மற்றார்  என்று இரட்டிக்கும்.

சிறு + ஆர் எனில் சிறார்  என இரட்டிக்காது வரும். 

இனி அறு  என்பதனுடன் அம்  சேர என்னாகும்.?


அறு + அம்  = அறம் என்றாகும். அறுத்துப்  பெரியோரால் நிலை நிறுத்தப் பட்டது என்று பொருள் . (வரையறுக்கப் பட்டது.)  அறம் , பொருள்  இன்பம் என்பவற்றில் முதல் ஆவது .

அறு + அம்  = அற்றம் .  இப்படி இரட்டித்தால் "தருணம்" என்று பொருள்.

இங்கு இருவகையாகவும் வந்தது காண்க. ஆனால் பொருள் வேறுபட்டது.