ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

தமன்னா Tamanna - how derived?

தமன்னா என்ற சொல்லின் பொருள் யாது?

சங்கதத்தில் : மிகவும் விரும்பப்படுவது என்று பொருள். வேறு பொருள்களும் உள்ளன. இருள், துன்பம் என்றும் பொருளுண்டு.

"நா" என்பது எதிர்மறைப் பொருளும் தரும். ஆனால், நா: இளவரசி, அரசி என்றும் பொருள் தரும்.

1{tamas} (`" the ascending node -mas}) darkness L. ; the point of the foot L. ; (%{A}) f. night
2 tama 2 an affix forming the superl. degree of adjectives and rarely of substantives most desired
3 tAma m. {doSa} L. ; anxiety , distress W.

இப்பொருள்களில் சில இப்பெயருடன் தொடர்புள்ளனவாய் ஏற்றுக்கொள்ள இயலாதவை.


தமிழில்:

தம்+அன்னை > தமன்னை > தமன்னா

ஒ. நோ: தம்+அப்பன் >தமப்பன் ( > தகப்பன். இன்றைய வடிவம்)

"தம் அன்னை" மிக விரும்பப்படுபவள்

் ஆதலின், "தமன்னா" தமிழ் மூலமுடைய சொல் என்று தெரிகிறது. மேலும் இளவரசி, அரசி, பெண்பால் அன்றோ? அன்னைபோல.

( அரசி, இளவரசி முதலியோர், அவர்களுக்குச் சேவை புரிகிறவர்களுக்கு "அன்னை"தான்.
இதுகொண்டு மலைவு கொள்ளவேண்டியதில்லை)

சாதிப்பட்டமாக வழங்கும் "பாத்தியா"வும் வாத்தியார் என்பதன் திரிபே.

ஒ.நோ: பண்டிட் < பண்டிதர். காஷ்மீரில் சாதிப்பெயர்.

வெள்ளி, 31 ஜூலை, 2009

munnu > man முன்னுதல் > மன்

மன்னுயிர் என்ற சொல்வழக்கு தமிழ் நூல்களில் பரவாலாக உள்ள ஒன்றாகும். இது humanity என்று பொருடரும் என்றாலும விலங்குகளையும் குறிக்கும். பொதுவாக உலகத்துயிர்கள் என்றும் பொருள் தரும்.

திருக்குறளில் பல இடங்களில் வந்துள்ளது, மணிமேகலையில்:

மன்னுயிர் முதல்வன் மகர வேலையன்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங்கம்பளத்து ..... தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை:29 : 15-17

இச்சொல்லாட்சியைக் காணலாம்.




வியாழன், 30 ஜூலை, 2009

சுகாதாரம் - தமிழா?

இது தமிழன்று என்று தமிழாசிரியர் கூறுவர்.

உடல் உயிர்வாழ்க்கைக்கு உகந்த நிலையே சுகம்.

உக >உகத்தல்
உக >உகப்பு.

உக > சுக > சுக+அம் = சுகம்.

உ > சு திரிபுக்கு எடுத்துக்காட்டு:

உலவு > சுலவு (வினைச்சொல)

இதுபோலவே உக > சுக என்பதும்.

ஆதாரம் என்பது செல்வம் தந்து போற்றுதல். ஆ முன்காலத்தில் செல்வம்.

ஆ தருதல் - ஆதாரம்,

பிற்காலத்தில் அது பிறவகைத் தரவுகளையும் குறித்தது.

இங்ஙனம் சுகம், சுகாதாரம் என்ற சொற்கள் தமிழ் மூலமுடையனவாகலாம்.
====================================================================
உயிர் முதலாகிய சொற்கள், அவ்வுயிர் சகர மெய் பெற்றுத் திரிதல் இயல்பு.
அடுதல் = சுடுதல், சமைத்தல்.

அடு+இ =( அட்டி) > (ச்+அட்டி) > சட்டி.
ஏமம் > சேமம்.
ஏண் > சேண்.
அமையம் > சமையம்,
அமைதல் > சமைதல்.

சில திரிபுகளில் நுண்பொருள் வேறுபட்டு, தொடர்புடைய வேறு பொருள் தரும்.