வெள்ளி, 24 ஜனவரி, 2025

ரோகிணி என்ற சொல்லமைப்பு

 ஓங்கு என்ற தமிழ்ச்சொல்  ஒரு மெய்யெழுத்துக் குன்றி,  ஓகு என்று வரும். ஓங்கு என்பதன் பொருள்  "கூடுதல்" ஆவதுதான்.  நடப்பவன் ஓடும்போது அவன் இடத்தை அடையும் நேரம் குறைகிறது.  குறைந்த நேரத்தில் கூடுதலான இடப்பெயர்ச்சியை அடைகிறான். ஆகவேதான்  டு என்னும் வினையாக்க விகுதி பெற்று  ஓ+டு என்பது ஒரு சொல்லாகிறது. இடம் அடைதல் குறிக்கும் கு விகுதி பெற்று ஓ+கு >  ஓங்கு ஙகர மெய்பெற்று மென்மை அடைந்த சொல்லாகும். வேண்டியாங்கு இந்த இடைத்தோன்றிய ஒற்று நீங்கு  இடைக்குறையாவதும் ஒலிநூல் பொருத்தமுடைய  அமைப்பே ஆகும்,

ரோகிணி நட்சத்திரத்தின் பெயரில்  இடையிலிருக்கும் சொல்தான் ஓங்கு> ஓகு என்பது.

தன்வினை பிறவினை என்று வினைகளைப் பாகுபடுத்துவர். வீழ்தல் என்பது தன்வினை. வீழ்த்தல் என்பது பிறவினை.  புதிய வீரனை பழைய படைவீரன் வீழ்த்தினான் என்பது, தானே வீழாமல் இன்னொருவனை விழச்செய்தல் என்பது தெளிவாகக் காட்டப்பெறுகிறது.  ஓங்கு என்ற சொல் இவ்வாறே ஓக்கு என்று பிறவினைப்படுத்தப்படும். ஓக்கு என்ற வினைச்சொல் தொல்காப்பியத்திலும் இலக்கியங்களிலும் கிடைக்கிறது.  இன்றைக் கவிதைகளில் இச்சொல் வருவதில்லை.

ஆகவே இடைக்குறையானால் ஓங்கு ஓக்கு என்ற இரண்டுமே  ஓகு என்று வருவதால்  தன்வினை பிறவினைப் பேதத்தை இவற்றுள் பொருளை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்கவேண்டும்.

ஓகு என்பது அம் விகுதியை மேற்கொண்டு ஓகம் என்றாகி  நீர் ஓங்குதலைக் குறிக்கும்:  அதாவது வெள்ளப்பெருக்கு.  நீர்கூடுதலாவது என்று முன்சொன்னசொல்லைப் பயன்படுத்தி  விளக்கலாம், கம்பநாடன் இதைப் படைப்பெருக்குக்குப் பயன்படுத்தியுள்ளான்.

உருவில் அழகாக இருக்கும் நட்சத்திரம் அல்லது விண்மீன்  தான்  இது.  உரு+ ஓகு+ இணி > உரோகிணி  ஆகிறது.  இன் என்ற சொல்லும் இண் என்ற சொல்லும் எதுவந்தாலும் இப்பெயர் அமைந்துவிடும்.  இண் என்பது இணைப்புக் குறிக்கும் அடிச்சொல்.  இன் என்பதும் இணைப்பையே குறிக்கவல்லது,   கண்ணின் கருமணி என்னும்போது இன் என்ற உருபு வந்து இணைப்பைக் காட்டுவதை அறிந்துகொள்ளுங்கள்.

இலக்கிய மேற்கொள்களை விலக்கி எழுதியுள்ளோம்.  இவை வேண்டுமானால் எழுதுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


செவ்வாய், 21 ஜனவரி, 2025

நமஸ்காரம் என்பதன் பொருள். தமிழா?

 நலமோங்குக >  இதைச் சுருக்கினால்  நலமோ >   இதிலி ல என்ற எழுத்தை விடுத்தால்  நமோ.

நலமது கருத்து > 

இதில்  அது> அஸ்.

கருத்து>  கரு ( கரு+ அம் ) > கார் >  கார் அம் > காரம்.

நலமஸ்காரம்> நமஸ்காரம்.

பாணமக்கள் பாடல்களுக்குச் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினர்.  பலவிடங்களிலும் வழங்கி  ஆங்காங்கிருந்த பாகதங்கள் என்னும் வட்டார மொழிகளிலிருந்தும் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன.  சீனமொழிச் சொற்களும் உள்ளன. 

ஆரியன் மேரியன் யாரும் இல்லை.


ஞாயிறு, 19 ஜனவரி, 2025

ஒன்றிலிருந்து வயிறு விட்டு இறங்கிக் கால்வழி வெளிப்படுவது காப்பி.

 இன்று நாம் காப்பி என்ற சொல்லை ஆய்வு செய்யவிருக்கிறோம்.

காப்பி என்பது copy  என்ற ஆங்கிலச் சொல்தான்.  ஒன்றிலிருந்து மிகுதியாகச் செய்யப்பட்டது என்ற கருத்தினால்தான் காப்பி என்ற சொல் தோன்றியது என்று ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர்.   இதுவும் ஓரளவு பொருந்துவதாகவே தெரிந்தாலும் இதை இன்னொரு கோணத்தில் பார்த்துப் பொருள் அறிந்தால், தமிழிலிருந்து தோன்றியதாகவும் கூறமுடியும். இப்போது எப்படி என்று பார்ப்போம்.

மனிதன் பிறப்பது பெண்ணின் கால்களுக்கு இடையிலிருந்துதான் பிறக்கிறான். பாலூட்டு விலங்குகளும்  தம் பின்னங்கால்களின் இடைவழியாகவே தங்கள் குட்டிகளை ஈனுகின்றன.  வயிற்றிற் பிறந்த மகன் மகள் என்று சொல்வது வழக்கமானாலும்  பிறப்பு உறுப்புகள் கால்களுக்கிடையிலேதாம் இருப்பனவாதலால்  மனிதன் ஒரு கா-பி தான். 

மனிதன் என்பவன் அதனால் ஒரு கா-பி  தான்.  வாக்கியத்தின் முதலெழுத்துக்களை மட்டும் வைத்துப் பேசி உணர்த்துவது தமிழகச் சிற்றூராருக்கு வழக்கமாகவே இருந்திருக்கிறது.  சில இடக்கர்ச் சொற்களை எழுத்தெழுத்தாகப் பிய்த்துக் ககர முதலாகவோ பகர முதலாகவோ சொல்வது பழக்கம்.

தலையெழுத்துக்களை மட்டும் இணைத்துச் சொல் போல அமைப்பதும் உண்டு.

பிள்ளை குட்டிகள் என்போர் "கான்முளை" என்பது தமிழ் நெறியாகும். கால்வழி வெளிப்பட்டு வந்தவர்கள் தாம் குழந்தைகள்.

கால்வழி இறங்குவதுதான்  கா-பி ஆகும்.  மனிதன் தன் முன்னோரின் காபி என்பதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.  பிறக்கும் வழியால் மட்டுமன்று இன்னும் பல காரணங்களாலும் மனிதன் தன் முன்னோரைப் படிபலிப்பவன்தான்.

 படிபலித்தல் என்றால் படியமைந்து பலவாதல். படி என்றால் ஒன்றன் படி அமைதல்.

பலித்தல் என்றால் பல் (பல)  இறங்குதல்.  பல் இ > பலி> பலித்தல்.

உணர்ந்துகொள்ள இவை எளிய கருத்துக்களே.

சொற்களை அறிய நன்கு சிந்திக்க வேண்டும்.

ஒன்றன் அடித்தோன்றுவது அதன் போன்மையில் அமைவதுதான்.

 ஓர்  எழுத்தின்படி இன்னொன்று அமைவதும் "கால் பிறப்பு" ஆகிய கா-பி தான்.

காலுதல் என்ற வினைச்சொல்லும் பொருள்சிறந்ததே ஆகும்.  ஒன்றிலிருந்து இன்னொன்று  ( வாயிலிருந்து எச்சில்போல)  வெளிப்படுதல் என்பதையும் குறிக்கும், கையில் வெட்டுக்காயத்திலிருந்து  "கான்ற"  அரத்தம் அல்லது குருதி என்று வாக்கியத்தில் வரும்,  கால்> கான்றது,  கால்கிறது, காலும் என்பவை செய்தது, செய்கின்றது, செய்யும் என்றபடி முக்காலத்துக்கும் வினைமுற்றுக்களாக அமைவனவாகும்.  ஆகவே கால் பி என்பது காப்பி என்றாவது உண்மையே என்றறிக.  பு விகுதி பெற்று காற்பு > காற்பு இ > காற்பி> காப்பி என்று இலக்கியமுறையிலும் சரிவருகிறது.

வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வந்து கற்றுக்கொண்டவை பல.   முன்னர் இருந்த பிரித்தானிய மொழி  அழிந்துவிட்டது.  அதிலிருந்து சொற்களை எடுத்து ஏன் புதியன படைத்துக்கொள்ளவில்லை,  ஏன் புதிய ஆங்கிலோ செக்சன் மொழி வந்தது என்பவெல்லாம் வரலாற்று ஆய்வுக்குரிய கேள்விகள்.

கட்டையராய்ச் சுருளை முடியும் உள்ளவர்களான வெள்ளை இனத்தவர் அழிக்கப்பட்டுவிட்டாலும் அவர்களுடைய பழஞ்சொற்களை ஆய்வின்மூலம் அறிந்துள்ளனர்.  என்ன செய்வது.  அவர்கள் பாவம்.  உரோமப் பேரரசு இவர்களை அடக்கியதும் சரிதான்.  இவர்களுக்கும் வேண்டும்.  ஆனால் பின் இவர்கள் ஆசியாவிற்கு வந்து நம்மை ஆண்டனர்.  இது சோகமே.

காபி என்ற ஆங்கிலச் சொல் 1530க்குப் பின் வழக்குக்கு வந்ததென்று அறிகிறோம்.  அப்போது அவர்கள் இங்கிருந்து பலவற்றை அறிந்துகொண்டு விட்டனர் என்று தெரிகிறது.

நன்னூலைச் செர்மனிக்குக் கொண்டுபோய் மொழிபெயர்த்துக் கொண்ட னர்.

தமிழ் உலகச்செம்மொழி என்பது இவர்கள் சொல்வதனால் அன்றி, நமக்கும் இவர்கள் சொல்லாவிட்டாலும் அறிந்துகொள்வது என்று அறிக.

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்றில்லாமல் சொந்த ஆய்வினால் கண்டுபிடியுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.