வெள்ளி, 27 செப்டம்பர், 2024

சன் என்ற ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு

 இன்று சன்(sun) என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழ்மொழிக்கும் என்ன தொடர்பு என்பதை மெல்லவே ஆய்வு செய்வோம்.

எல்லா மனித மொழிகளும் எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானவை. இவற்றை எல்லாம் உண்டாக்கிக்கொண்ட மனிதற்கும் இன்று இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டைப் பயன்படுத்தி நாடுகளிடை அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொணரப் பேசும் பல்வேறு மானிடர்களுக்கும்  மொழிகள் கருவிகளாகிவிட்டன. இதற்கு நாம் மிக்க நன்றியை மொழிகளை ஆதியில் புனைந்திட்ட யாவருக்கும் சொல்லி அமைவோமாக.

அனல் என்ற சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துவதில்லை.  நாம் பயன்படுத்தும் நீர் கொதிப்பு  மற்றும் ஆக்கும் கருவிகள் அனலைக் கக்கவில்லை. தங்கள் இயக்கத்தினால் வேலையைக் குறித்தபடி முடிக்கவேண்டிய சூட்டினையே அவை வெளிப்படுத்துகின்றன. சூடு அதிகமானல் எல்லை மீறிவிடாமல் இயங்க  மட்டுறுக்கைகளும் அவற்றில் உட்பொருத்தப் பட்டுள்ளன.  இப்படியே காலம் போகுமானால்  அனல் என்ற சொல்லை மறந்துவிடுவோம். அனல் என்ற சொல்லுடன் கனல் என்ற சொல்லும் நம் கருத்தில் உள்ளது,  அன் > அனல்.  அன் என்பதே அடிச்சொல். இதுவும் தமிழில் உள்ள மூலச்சொல்லே ஆகும்.  அனல் என்பது கனல் என்று திரிந்து  அதே பொருளைத் தருகிறது, 

ரூபி என்ற ஆங்கிலச்சொல்லுக்குக் கெம்புக்கல், கனல்நிறக்கல் என்பர். தமிழில் மாணிக்கம் என்ற சொல் ரூபியைக் குறிப்பதாகும்

அணுகினால் அறியப்  படுவதாகுவதாகிய,    தீ எரிந்து  கொண்டிருக்கும் இடத்தில் உள்ள வெப்பம்  அனல்.  அணுகு<  அண்> அன்> அனல்.  இது தீயையும் குறிக்கவல்ல சொல்.  அன் > சன் . இது திரிசொல். அனல் என்ற சொல்லின் ஆக்கக் கருத்து அணுகுதல் ஆகும்.

சன் என்ற சொல்லை சுவென் என்று இந்தோ ஐரோப்பிய மூல அகரவரிசையில் பதிவு செய்துள்ளனர், ஆனால் சன், சன்னி என்பதன் திரிபுகள் ஐரோப்பியமொழிகளில்காணப்படுபவைதாம்.

அன் ( அனல் )  என்ற மூலவடி, திரிபு விதிகளின் படி சன் என்பதை நேரடியாகவே பிறப்பிக்கும். மற்ற ஐரோப்பிய மொழிகட்குச் செல்லவேண்டியதில்லை. ஆகவே இந்தத் திரிபு  ஆங்கிலத்திலிருந்து ஐரோப்பிய மொழிகட்குப் பரவிற்றா அல்லது ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் வழங்கித் தேய்வுற்று ஆங்கிலத்துக்கு வந்து சேர்ந்ததா என்பதை அவர்களிடமே விட்டுவிடலாம். ஏனென்றால் ஆங்கிலேயர்களே இந்தியாவில் நீண்ட நெடுநாள் இருந்து தொடர்பில் இருந்துள்ளனர்.  சாவல் என்ற இன்னொரு இ.ஐ  மூலமானது சன்+வல் அல்லது அன்-வல்   ( அனல் வலிமை)  என்பதில் சற்றுத் திரிந்து  பதிவுற்றுள்ளது என்றும் கருதலாம்.

இவ்வடிகள் நோர்ஸ், செக்சன் மற்றும் ஜெர்மானிக் முதலியவற்றில் உள்ளன. இலத்தீனத்தில் காணமுடியவில்லை.  ஆகவே இலத்தீனத்தில் இருந்தாலே காலம் நீட்சியானதென்பதை( பழமையை)  க் காட்டும். 

அனலிலிருந்து அன்> சன் என்பதை அறிந்து மகிழ்வோமாக.

அனலின் காரணமாகச் சன் என்ற சொல் தோற்றுவாய் பெறுமாயின், சூடு காரணமாகச் சூடியன்> சூரியன் என்ற சொல் தோன்றியிருத்தலும் கண்கூடு ஆகிவிடும்.  மடி> மரி என்பது திரிபுவாய்பாடு ஆதலின். அடு > அரு என்பதும் தெளிவின் மேற்றே யாவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்






>



==========================

சமாதானம் ---  சமம்  ஆகும் தானம் >  சம  ஆ(கும்)  தான் அம் > சமாதானம்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

மழுங்குணி. மழுங்குனி, மழுகுதல்.

 இன்று மழுங்குணி என்ற சொல்லையும் தொடர்புடைய சிலவற்றையும் கவனிப்போம்.

மழுங்குணி என்ற சொல் மழுங்குதல் என்ற வினைச்சொல்லினின்று வந்தது என்பது பெரிதும் ஆராயமலே தட்டுப்படுவது ஆகும். மழுங்கு என்பதனோடு உண் என்ற துணைவினையும் இணைந்து இகர விகுதி பெற்று இச்சொல் அமைகின்றது. உண் என்பது உள் என்பதன் திரிபே ஆகும்.  உட்கொள்வது , ஆயிருப்பது  என்பவெல்லாம் இவற்றின் பயன்பாட்டு நெறிகாட்டிகளாகும்.

பேச்சில் இது மழுங்குனி என்று ஒலிப்புறுகிறது. இது : " மழுங்கு நீ" என்பதிலிருந்து அமைந்தும் இருத்தல்  கூடுமாதலின் இருபிறப்பி  ஆகும், அவ்வாறாயின் இது பழம்நீ என்பது போலும் ஓர் அமைப்புடைய சொல்லாகும். பழம்நீ > பழநி என்றும் கூறுவர்.

மழுகுதல் என்ற வினையே பெரும்பாலும் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகிறது. பின்னர் இது இடையில் ஒரு மெய்யெழுத்துப் பெற்று மழுங்குதல்  ஆயிற்று.  மெழுகுதல், அழுகுதல் என்பன போல அமைந்த சொல்லே மழுகுதல். பொருண்மையில் ஏதும் வேறுபாடு ஏற்படவில்லை. விழு> விழுங்கு எனற்பாலவற்றில் பொருண்மை வேறுபாடு வந்துள்ளமை கண்டுகொள்க.

மழுங்குணி என்பது இந்தியில் பப்பு என்பதுபோலும் ஒரு நகைத்தாக்குச் சொல்லாகும், இது மங்கிணி என்றும் திரியும்.  இது இடைக்குறையும் திரிபும்  ஆகும்,  ழுகரம் குறைந்தது.   குகரம் கிகரம் ஆனது.  தெலுங்கில் மங்கு என்று இன்னும் சுருங்கியுள்ளது. மழுங்குணிமாங்கொட்டை என்பதும் அது,  எள்ளிநகையாட்டுச்சொல்.

மழுக்கம் எனின் அறிவின்மை. அறிவுக் கூர்மை இன்மை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

திங்கள், 23 செப்டம்பர், 2024

தென்றல் வந்தது

 உனைக் காணவில்லை

அணி  பூணவில்லை

அணுகி நீவந்து  தொட்டாய்.


பணி மாறவில்லை

நலம் சோரவில்லை

தனியே நீ கூடிவிட்டாய்


குரு  விகள் குறுகுறு

புற   வுகள் பறபற

ஒலிகளில் யானறிந்தாலும்


வருவதன் முன் அறி

தருவது  நெஞ்சினைக்

குறுகிய தொரு நிலை  கலையே. 


சூழ்ந்தனை முழுமையும்

ஆழ்ந்தனை மேனியுள்

வீழ்ந்திடு களைப்பினைக் களைந்தாய்


வாழ்ந்திடும் புள்ளிசை

வளர்ந்திட அள்ளினை

தளர்ந்திடும் குருவியுள் துளிர்த்தாய்

( ஒரு விடுகதை போல் எழுதப்பட்டிருந்தாலும் தலைப்பினாலிது தெளிவாகிவிடும். கொஞ்ச விளக்கம் தான் தரப்படுகிறது)

தென்றல் வந்தபோது யான் சட்டை அணிந்திருக்கவில்லை. தென்றலும் தயங்காமல் என்னைத் தொட்டுக் கிளர்ச்சி செய்ததை இக்கவி கூறுகிறது. 

புள்ளிசை குருவிகளின் பாட்டு

"அள்ளினை"   -குருவிகளைக் கொள்ளை கொண்டது: 

துளிர்த்தாய் - குருவிக்குள் சென்று மேல்வந்தது.

உடலுக்குள்ளும் சென்று களைப்பினை மாற்றியது.

நான் மேல் உடை அணிந்திருக்காவிட்டாலும் உன் வேலை மாறவில்லை என்பது கவிதை.

நெஞ்சினுள் குறுகியது -  உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

குறுகியது - வந்தது என்பதுமாம்.

அறிக மகிழ்க.