கொஞ்ச நாளாகவே நாம் ஐரோப்பிய மொழிகளின் பக்கம் போகவில்லை. அப்போதைக்கப்போது சாளரத்தின் வழியாக அந்த மொழிகளையும் எட்டிப் பார்ப்பது சொல்லாய்வில் நேரிதே ஆகும்.
தாக்கு என்பது தமிழில் ஒரு வினைச்சொல். அதவுதல் என்று இன்னொரு வினைச்சொல்லும் உள்ளது, ஒரு மடுவில் முதலை அந்தப் புலியை அதவிவிட்டது என்று சொல்லலாம், இது கொன்றுவிட்டது என்றும் தாக்கிவிட்டது என்றும் இருபொருளும் தருஞ்சொல் ஆகும். தா என்ற சொல்லின் உறவினை உளப்படுத்த "அ-த" என்று அங்கு தகரம் வருகிறது. தா என்ற நெடில், இன்னொரு சொல்லின் பகுதியாக வருங்கால் த என்று குறிலாகக் குன்றிவிடுவது சொல்லியலில் இயல்பு ஆகும்.
தமிழில் அகரம் முன்னிற்கத் தாக்குதல் குறிக்கும் தகரம் அடுத்து வரல்போலவே attack என்ற சொல்லும் அமைந்துள்ளமை கவனித்தற் குரியதாகும், அட்டாக் என்பதில் உள்ள கு என்பதன் ஒலிபோல வராமல் தமிழில் வினையாக்க விகுதியாக வுகரம் வந்துள்ளது தமிழியல்பு காட்டுவதாகும். எடுத்துக்காட்டு: தாக்கு. இதைத் தாக்(க் +உ ) என்றும் தா(வ்+ உ) அல்லது அ-த+( வ்+ உ) >அதவு என்றும் கண்டுகொள்க. அதவு என்ற சொல் முன்பகுதியில் அட்டாக் என்பதன் முன்பகுதி போலவும் தாக்கு என்ற சொல் அட்டாக்கு என்பதன் பின்பகுதி போலவும் ஐரோப்பிய மொழியில் அமைந்துள்ளது கண்டறியத் தக்கதாகும்,
தாக்கு என்பதில் உள்ள கு என்பது சொல்லாக்கத்தில் வினையாக்க விகுதியாகும், கு என்பதை எடுத்துவிட்டால் சீன மொழியில் உள்ள தா என்ற தாக்குதல் குறிக்கும் சொல்லுடன் இச்சொல் ஒருமை உடையதாகிவிடும்.அதவு என்பதில் உள்ள அகரம் சுட்டுப் பொருளதாகும், அடு> அடி என்பதில் சுட்டிலிருந்தே வினையாக்கம் தொடங்கிவிடுகிறது,
அட்டாச் என்ற ஆங்கிலச்சொல் சகர ககர உறவு உள்ளது ஆகும். இது திரிபுகளில் கேரளம் சேரலம் என்பதுபோலும் தொடர்பினது ஆகும், இவ்விரண்டும் ஒலிஇரட்டைகள் என்று ஐரோப்பியச் சொல்லியலாரும் அறிந்துள்ளனர். தமிழில் திரிபுப்போலிகள் என்போம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
சில மறைந்த வரிகள் மீட்டுத் தரப்பட்டு,
மெய்ப்பு சரிசெய்யப்பட்டது. 21052024 1146