வசூல் என்பது உருதுச்சொல் அன்று. அதன் தொடக்கத்தைப் பார்த்தாலே அதில் வருதல் குறிக்கும் வ என்ற ஒலி உள்ளது. அது உண்மையில் சொற்பிறப்பால் உருது அன்று. ஒரே எழுத்தைக் கொண்டு எப்படித் தமிழ் என்று முடிவு செய்கிறீர் என்னலாம். வந்தான் என்ற சொல்லிலும் வ மட்டுமே வருதலைக் குறிக்கும் நிலையைக் காட்டுகிறது. அதில் ருகரம் கூட இல்லையே!
வந்தான் என்ற வினைமுற்றில் வகரத்துக்கு அடுத்து ருகரம் வரவில்லை என்றாலும், வந்தான் என்று அமைந்ததே சரி. வருந்தான் என்றால் வருந்தமாட்டான் என்று வேறொரு பொருண்மை காட்டுவதாக ஆகிவிடும். அதுபோலவே இச்சொல்லானது "வருசூல்" என்று அமைந்திருப்பின் வருகின்ற கர்ப்பம் என்று பொருள் மாறிவிடும். அதனால் இச்சொல்லை அமைத்த அறிவாளிகள் இதை வருசூல் என்று அமைக்காமல் வசூல் என்றே அமைத்தனர். இவ்வாறு செய்ததன் மூலம் தமிழில் வந்தாள், வந்தான் என்று அமைந்த சொற்களின் அமைப்பையே வசூல் என்ற சொல்லும் பின்பற்றி, தமிழ்ச் சொல்லமைபினோடு இயைபு பட்டுள்ளதாக இருக்கிறது. அதனால் இது பொருளமைதியிற் பொலிந்த சொல்லாகும்.
எச்சொல்லும் பின்வழக்கினால் ஒரு மொழிக்கு உரித்தாகலாம். இவ்வாறு உருதுக்குள் வழக்குப்பெற்றிருந்தால் அது உருதுச்சொல்.
ஆயினும் மஜ்முவா, ஜக்கேர, ரிசால என்ற சொற்கள், பணப்பெறவுக்கு (collection) உருதுமொழியில் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வசூல் என்றொரு சொல் வழங்கப்படவில்லை. எனவே தென்னாட்டில் எழுந்த சொல்லாகவே இது தெரிகிறது.
ஜமா கர்னா, அய்க்ஹத கர்னா, ஏக்சத் லானா, ஹாசில் கர்னா இருசொல் தொடர்களும் வசூல் என்பதனோடு பொருந்தவில்லை. The word hasil is used also in Malaysia and Indonesia. It means( yeild of) property (to collect).
அந்தக்
காலத்தில் பணத்தைப் புதைத்து வைத்துத்தான் காத்தனர். வங்கி என்னும் பணப்பொதிவகங்கள் ஏதும் இல்லை. அரசனின் ஆணைச் சேவகர்கள் வந்து தோண்டி எடுத்துத்தான் ஆய்தல் செய்தனர். சூலுதல் என்றால் தோண்டுதல்.
வந்து தோண்டி எடுத்துச் சென்றனர் என்பதை வசூல் என்ற சொல் காட்டுகிறது.
வருசூல் > வசூல். வருசூல் என்பது வினைத்தொகை. வசூல் என்பது அதில் திரிந்த சொல். (திரிசொல்).
முன் செய்த ஆய்வுகளையும் படித்தறிக: [ சொடுக்கி இவ்விடுகைகளுக்குச் செல்லவும் ]
1 https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_53.html
2 https://sivamaalaa.blogspot.com/2017/03/vasool.html
3 https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_31.html
வேற்றுமொழிச் சொற்கள் தமிழிற் கலந்து தமிழ்மொழி கெட்டுவிடும் என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டு, தமிழ்ச் சொற்களையும் தமிழல்ல என்று ஒதுக்கிவிடுதல் ஏற்பட்டுவிட்ட நிலையையே இது காட்டுகிறது. இவ்விடுகை இதைத் தெளிவு படுத்துகிறது. உங்கள் கருத்தையும் கருத்துப் பதிவுப் பகுதியில் இடுவதை வரவேற்கிறோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்