பூர்த்தி என்ற சொல் வழக்கில் உள்ளது. ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடு என்று பேச்சு வாக்கியங்களில் வரும், பூர்(-தல்) என்ற ஏவல் வினையுடன் தி என்ற தொழிற்பெயர் விகுதி வருவதே பூர்த்தி என்ற சொல். வினையில் மிகுந்து அதை நீட்டமாக்கிப் பெயராக்குவதே விகுதி . மிகுதி> விகுதி, இதுபோல் திரிந்த இன்னொரு சொல்: மிஞ்சு> விஞ்சு என்பதாகும், விகுதி என்பது சொல் மிகுதலே.. விகுதி என்பது காரண இடுகுறிபோன்றது, இதற்குக் காரணம் முன்னில் மிகுதலா பின்னில் மிகுதலா என்பது பின்னில்தான் என்று வருவிக்கவேண்டியுள்ளது. விகுதி என்பது பூசை மொழியில் விக்குருதி என்று வரும். ( விக்ருதி). இதை மிக்கு + உரு + தி என்று உணர்ந்தால், மிக்குருதி, விக்குருதி என்று சிந்தனை பெறலாகும். உருவானது மிகுந்து வருவது.
அடிப்படைக் கல்லின் மிக்கு ( மிகுந்து) அழகுடன் செதுக்குற்று பீடத்தில் அமர்த்தப்பட்டிருப்பதே மிக்கு+ இரு + அகம் > மிக்கிரகம் > விக்கிரகம். இங்கும் அடிச்சொல் மிகுதல் என்பதே. கல்லின் மிக்கது விக்கிரகம், அது மிக்கு இரு அகம். அகம் என்பது அ+ கு + அம் : அங்கு சேர்ந்து அழகாயிருப்பது என்று பொருள். அம் அமைதல், அழகு, அம்மை, ( அம்மா) இவற்றுக்கெல்லாம் அடிச்சொல்லும் ஒரு விகுதி அல்லது இறுதிநிலையும் ஆகும்.
இனிப் பூர்தல் என்ற வினையை ஆய்க:
புகு > புகவு > புகர்வு
புகர் > பூர்.
பகுதி என்பது பாதி என்று நீண்டு திரிதலை உணர்க. அதுபோலவே புகு என்ற ஈரெழுத்துக்களும் பூ என்று நீண்டு திரிந்தது.
பூ - பூத்தல் என்ற வினை வேறு.
பூர் > பூர்ந்தது பூர்ந்தான் என்று வினைகளாகி ரகர மெய் இழந்தது பூந்தது மற்றும் பிறவாக வழங்கும்,
தொழுகை மொழியில் சொற்கள் வேகமாக வெளிப்படுத்தப் படுவதாலும் நாவின் சுழற் சி பிறழ்சிகளாலும் திரிபுகள் பல்கி அது தனிமொழியானது. திரிபுகள் மொழிக்கு வளம் சேர்ப்பனவே.
அர் என்பது அருகு, அருகில் என்ற சொற்களில் உள்ள் அர் என்ற அடிச்சொல். அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி. இது வேற்றுமை உருபாகவும் தமிழில் வருவது. புகு + அர் > புகர். இங்கு அர் என்பது நீட்சி. இதனால் புதுப்பொருள் யாதும் ஏற்படாமையின் சாரியை என்னலாம், பூத்தல் ( தோன்றுதல் ) என்ற வினையினின்றும் பூர்தல் என்பதை அர் வேறுபடுத்திற்று என்னலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்