இறைப்பற்றை ஒரு முறைப்பற்றாய்ப் பின்பற்றிக் கொண்டாடும் உலக மக்களில் சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் உயர்ந்த இடம் எப்போதும் உண்டு என்பதே எம் துணிபு ஆகும். அதனைக் காட்சிப்படுத்தும் வண்ணமாக இந்தப் படங்கள் அமைந்துவிட்டன. கண்டு மகிழுங்கள்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
புதன், 24 ஜனவரி, 2024
திங்கள், 22 ஜனவரி, 2024
இராமர் எப்படி......?
இராமர் எப்படித் தியாகி, எப்படித் தெய்வம் என்று வினவலாம்
இராமர் ஓர் அரசர். பட்டத்துக்கும் பதவிக்கும் இடையூறு வரும் நிலையில் போட்டியாளனைப் பிடித்துச் சிறையில் போடாமலும் தந்தைக்கு எதிர்வினை எதுவும் ஆற்றாமலும் பொறுமையுடனும் வனவாழ்வே தனவாழ்வென்று போய்விட்டார். தியாகமும் தந்தை சொல்லுக்கு மதிப்பளித்தலும் துன்பம் கண்டு துவளா நெஞ்சுரமும் அவருக்கு. .அடி எடுத்து வைத்ததுமே மனித நிலையைக் கடந்துவிடுகிறார். எல்லாம் எனக்கே என்று எதுவும் சொல்லவில்லை .அவருக்கு எதுவும் வேண்டும் என்று ஓலமிட வில்லை. அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லார். இறைப்பண்பின் வெளிபாடு இது. வள்ளுவனும் பாடிய பண்பு.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
இப்படியே வால்மிகியையோ கம்பனையோ படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Sumangalip Pujai kuzhuvinar
வசூலில் வந்த பணத்தையும் பயப்பற்று டன் பூசைக்கே பயன்படுத்தினார்கள்.
வசூல் பணம் வரவில்லை என்று சொல்லி அடகுக்கடையில் நகையை வைத்து ஈடு செய்யும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமலும் பிறழாமலும் இருந்த காரணத்தால் இவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
தலைமை தாங்குகிறவர்களுக்குப் பிறழச்சிகளால் பல துன்பங்களும் நோயும் கூட ஏற்பட்டு விடும்.
இறைப்பற்றும் தொண்டுள்ளமும் வாழ்க.
எல்லாப்புகழும் அம்மனுக்கே.
இராம நாமம் ஒங்குக.