இன்று நம் வாசகர்கள் உரூபனும் சாருகா இருவரும் சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நாம் நம் வாழ்த்துப்பாட்டினை வழங்குகின்றோம்.
பாரினில் பன்னெடுங் காலம் பைந்தமிழ்
வாரியில் உருபன் சாருகை இ ருவரும்
ஓரிணை யாகவே சீருற நீந்தியே
யாரும் அறிந்திடா இன்புடன் வாழ்கவே.
பேறெனப் படும்பதி னாறும் பெறுகமுன்
ஏறியுச் சிம்மலைச் செல்வம் அடைகநல்
ஆறு மாறிடா அன்பு வழியினில்
நூறும் வெல்லுக நுண்மதி ஓங்குக.
சிவமாலா கவி.
பொருள்:
பார் = உலகம்
வாரி - கடல்
ஓரிணை - சோடியாக
இன்புடன் - இன்பமுடன்
பேறு = செல்வங்கள்
ஏறியுச் சிம் மலை--- ஏறி உச்சி மலை
நீட்டம் வேண்டின் ஓரெழுத்துத் தோன்றியது: ம்.
ஆறு - செல்லும் வழி
நூறு மதிப்பெண்கள்