[ நண்பருக்கு அனுப்பிய வாழ்த்து வணக்கம் தொகுப்பு.]
( கொஞ்சம் மரபுப் பாக்கள் போல் இருப்பினும் இவை புதுக்கவி
வகையின ஆகும்]
புதியன எல்லாம் தருவதும் புதன்,
புத்தொளி வீட்டில் வீசிடும் புதன்,
அதிநலம் உடலில் அளித்திடும் புதன்,
வணங்குவம் : காலை,
வணக்கம் சொல்வோமே.
[ எந்த நேரமானாலும் வணங்கலாம், ஆனால் காலையில் சொல்வது சிறப்பு என்பதே கருத்து, இனி, இறைவனை வணங்குவோம், நண்பருக்கும் காலை வணக்கம் சொல்வோம் என்பதும் கருத்து ஆகும். ]
[இவை வாரத்தின் மற்ற நாட்களுக்கு, சனி ஞாயிறு நாட்களுக்கு முன் இடுகை காண்க ]
திங்கட்கிழமைக்கு:-
எத்திக்கும் இனிதாகத்
தித்திக்கும் திங்களில்
காசி விசுவநாதனின்
ஆசிகள் பெருகிட
கணபதி கருணைசெய்வார்.
காலை வணக்கம்.
செவ்வாய்க்கிழமைக்கு:-
இனிய நாள் செவ்வாய், எழுதரும் வருவாய்!
தனிநலங்கள் எலாம் மலிதரும் தறுவாய்;,
இறையருள் என்றும் உங்கள் இல்லத்தில்
தங்குக காலை வணக்கம் செல்வத்தில்.
புதன்: மேலே காண்க.
பெருமான் அருளால்
புதுமைப் புதனால்
அரிய நலங்கள்
அடைவீர்களாக.
வியாழக்கிழமைக்கு:
விரிந்த உலகில்
சிறந்தவை யாவும்தரும்
வியாழ பகவான் ஆசியுடன்
காலை வணக்கம்.
அம்மன் அருளால்
இந்த நாள் இனிய நாள்.
வெள்ளிகிழமைக்கு:-
மெள்ள மெள்ள வந்திடுமே
மிக்க உறுதி தந்திடுமே,
வெள்ளியில் நலமே சொந்தமினி,
யாவும் செழிக்க உந்தல்தனி,
வெள்ளியில் வெள்ளி முந்திவரும்
இல்லத்தில் தினம் பந்திதரும்,
காலை வணக்கம் தண்கலமாய்
காண்பீர் எம்கவி வெண்கலமாய்.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்னர்
.