ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

பண்பட்ட அறிவாளர் ஆவது எப்படி

செய்தியை  அறிந்துகொளப்  பறந்த சென்று

அறிந்தபின்பு  ஒருவாறு  அடங்கி நின்று 

மறுநாளில் எழுச்சிதரும்  செய்தி  இல்லை

என்பதனை  அறிந்ததபின்  எழுச்சி  குன்றி

ஒன்றுமிலை என்றபடி குன்றி நிற்போம்!

ஆர்வத்தை அடக்கிடவே  கற்றுக்கொண்டால்

உலகத்தில் நின்றாகும மனிதர்தம்மில்

பலகற்றுக் கொள்வாரை    நாமும் காண்போம்.

சீராகச் செலவேண்டும் வாழ்க்கை  ஓடம்!


ஆர்வமென்ற ஒன்றினையே கூட்டிக் கொள்ள,

கூட்டினது மிகுந்துவிடிற் குறைத்துக் கொள்ள, 

வேண்டியவா றமைந்திடவே ஈண்டு கொண்டால்

என்றுமின்றும் நன்றுகிட்டும் வாழ்வில்  சீரே.


சீரான வாழ்வினையே  காண்போம் நாமும்

செம்மையென்ப தொன்றுளதே வாழ்வுநன்றே.


ஆர்வத்தை மட்டுறுத்தக் கற்றுக்  கொள்வீர்

தீவிரங்கள் தாமேயாய்  உதிரந்து போமே.

நீரேஎன்   றென்றும்   இங்கிருக்க மாட்டீர்

இவ்வுலகம் பழமண்ணே மறந்தி டாமல்

செவ்வைதனை வாழ்வுதனில் ஒட்டி நிற்பீர்.


அறிக மகிழ்க.

மீள்பார்வை:  பின்.


சனி, 23 ஏப்ரல், 2022

காபிக்குத் தமிழ்ப்பெயர்.

 இன்னும்  ஒருவாழ்வு  இருந்தாலும்  நல்லதுதான்,

மன்னும்  புவியில்போல் பாலிட்ட -----  இன் தேறல்

நல்ல  குளம்பரி  என்போம்  அயலிலதை

வல்லாரோ  காபிஎன் பார்.

ஆயிரம் என்ற சொல்லின் அருமையும் அடைவும்.


ஆ என்று மனிதன் வாய்பிளந்து நோக்கும் பல பொருள்களும் உண்மையில் மிக்க விரிவுடையனவே.  இதனை மெல்லச் சிந்தித்து   ஓய்வாக இருந்து எண்ணி அறிந்தாலே  முடியும்.  எம் பரிந்துரை யாதெனின்  பெரிதும் தனியாய் இருந்து சிந்திக்க வேண்டும்.  தோன்றும் கருத்துக்களைப் படம்பிடிப்பதுபோல் எழுதி வைத்துக்கொண்டு சிந்தித்து முடிவு செய்யவேண்டும்..  

காயம் என்ற சொல் தொல்காப்பியர் கால முதல்கொண்டே தமிழில் உள்ளது.  காயம் என்றால்,  சூரியன்,  நிலா,  உடுக்கள் முதலியவை " காயும் இடம்.  அதன் விரிவை உணர்த்த,   அது பின்  ஆகாயம் என்று விரிக்கப்பட்டது.   ஆ + காயம் > ஆகாயம் என்பதுதான் சொல்.   ஆஹாய, என்பதில்லை.  ஆஹாய என்பது திரிபு  ஆகும்.

மேல் விரிந்த வானமான இடத்துக்கு   ஆ+ காய என்று பெயர் அமைந்தது போலவே,  கடலுக்கும்   ஆழி   என்று பெயர் வந்தது.    ஆ>  ஆழ் > ஆழ்தல் என்ற வினைச்சொல் தமிழில் மிக்க இயற்கையாக அமைந்த சொல்..


ஆயிரம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர்கள் எப்படி அறிந்தனர் அல்லது அமைத்துக்கொண்டனர்?


தாமே அமைத்தற்குத் திறமோ அறிவோ முயற்சியோ இல்லாதவிடத்து, அல்லது அமைத்துப் பயனோ பயன்படு தருணங்களோ இல்லாதவிடத்து, அல்லது குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுமிடத்து அமைக்கமாட்டார்கள். அங்கனம் இல்லையாயின் அமைத்திருப்பர்.


காட்டிலோ, கரையிலோ காலங்கழித்துக்கொண்டிருந்த முந்தியல் மாந்தனுக்கு, ஆயிரமென்பது ஒரு பெருந்தொகையே. பத்தும் நூறும் அறிந்தபின்பே அவன் ஆயிரத்தை எட்டமுடியும்.


ஒன்றை அறிந்து பழகியபின் இரண்டு அறிந்தகாலை அவன் அதைப் பெரிது என்று கருதினான். இரு என்ற சொல்லுக்கு இன்னும் பெரிது என்ற பொருள் தமிழில் இருக்கிறது.

இம்மாம்பெரிது  என்று கூறுகையில்  "ஈ"  வந்துவிடுகிறது..  இரு என்பது பெரிது என்று பொருள் தந்ததில் என்ன வியப்பு?  


ஒன்பதின் பின் பத்து என்பது பலவாகத் தெரிந்தது. அங்கனமே பொருள்படுஞ் சொல்லை அவன் அதற்கு ஏற்படுத்தினான்.


ஆயிரமென்பது ஆகப் பெரிதாகத் தோன்றிய எண்.
ஆ = வியப்பும் குறிக்கும் சொல். ஆக என்பது இறுதியும் குறிக்கும்.
இரு= பெரியது.
அம் : விகுதி.
இச்சொல்லின் பொருளும் “ ஆகப் பெரிது” என்பதுதான்.
ஆ+ இரு + அம் = ஆயிரம்.
ஆ என்று வியத்தகு பெரிதாய ஓர் எண்.
இலக்கம் கோடி என்பன கண்டகாலை, ஆயிரம் சிறிதாகிவிட்டது.