நெகிழிப்பை இதனாலே நேர்த்தியான துலகென்று
நேருரைகாண் உதிர்ப்பாரும் உளரே --- இங்கு
திகழும்சொல் இதுவென்று தீர்ப்பொன்று தீட்டாதார்
தெருளுரையில் இதுவொன்றும் உளதே..
வேண்டாத குப்பைதனை ப் பைக்குள்ளே நாமிட்டுக்
களைகின்ற போதேநோய் நுண்மி---அதைத்
தூண்டாத காற்றங்கு இல்லாத காரணியால்
தூங்கிவிடும் படிந்துள்ளின் அடைவே.
நாறுதலும் மேலெழுந்து நாசிகளைத் துளைத்தெடுக்கும்
நரகொன்று எழலங்கு இலதே----பாரும்,
வேறுபல முன்னறியாத் தேரவிடாப் புதுவலையில்
சிக்குவித்தல் இதுவொன்று தொலைவே.
( என்றாலும், அவற்றை ஒழுங்கான குப்பைத் தொட்டிகளில் இட்டு, முறையாக அப்புறப்படுத்துங்கள். வீதிகள், நடைபாதைகள், திடல்கள், கடற்கரைகள் முதலிய இடங்களில் வீசியெறிதலெனல் ஒரு அறியாமையும் பொறுப்பின்மையுமாகும். தூய்மைப் பணிகளுக்கு உதவுங்கள். அல்லது குப்பைகளை அதிக மாக்காம லாவது வாழ்வது கடமை)