வியாழன், 31 மார்ச், 2022

சுகம் எங்கே - உணர்ந்த நாய்க்குட்டி.

 சுவரில்  சார்த்தி வைத்த  துடைப்பம் தன்னை

சுகம்வேண்டித் தன் தலைமேல் இழுத்துப்போட்டு

இவள்( இந்த நாய்க்குட்டி ) தலை நுழைத்தே

என்ன ஒரு  சுகம் கண்டு  தூங்கு  கின்றாள்?


வாசல்களில் படுத்தபடி வாழ்க்கை தம்மை

வந்த பெரும் பாகமும் முடித்துக்கொண்ட

கூசலிலா வைரவர்கள் கூட்டம் தாமே

கொண்ட சுகம் எங்கே  என்றறிந்துயர்ந்தார்.


சுகமெங்கே என்றே  உகந்தே  அறிந்துவாழ்

வகைதெரிந்த நாய்க்குலமே வாழ்க  நெடுங்காலம்.





சுகம்கண்ட  நாய்க்குட்டியின் படம்:


இந்த விளக்கத்துக்கு நீங்கள்  உங்கள் விளக்கத்தை வரைந்து பின்னூட்டம் இடவும்


மெய்ப்பு  பின்னர்






புடின் அமைதிக்கு வந்துவிடுவார் --- புகழ்பெற.

 வலதுகையை  வீசாத  வண்ணத்  துடனே

வளர்திட  உள்ளத்தர்  வன்மைத்   ----  தலைவரென.

நின்று தயங்கா  நிமிர்நடையர்  புட்டினே

என்று  பலர்கூறு வார்.


ஒருகையை வீசித்தான்   ஒன்றசைக்   காமை

பெறுபுகழ்போல் சண்டைசேர்  பீடும் ---- ஒருபக்கல்

போரெனினும்   ஓர்பக்கல்  ஆரமைதி  தான்நாடிப்

பார்புகழ்தல் தந்துயர்  வார்.


போர்மற மன்னரெனப்  போற்றும் உயர்விலும்

நீர்நிலம் சூழமைதிப்  பேராளாய்ச் ----  சீருறுதல்

உங்கள் புகழுக்  கொருமகுடம் வைத்திடுமே

பொங்கபோ  ரின்மைக்  கதிர்.   


நிமிர்நடையர் -  நிமிர்ந்த நடை உடையவர்

ஒன்றசைக்காமை - ஒரு கையை அசைக்காமல் இருப்பது

பெறுபுகழ்  பொல்- பெற்ற புகழ் ஒப்ப

பக்கல்  -    பக்கம்

பீடு -  பெருமை

ஆரமைதி -  நிறைவான அமைதி

பார் புகழ்தல் -  உலகம் போற்றுகை

மற மன்னர் -  வீரமிக்க ஆட்சியாளர்

சூழமைதி -   சூழும் அமைதி

மகுடம் -  சூட்டும் முடி

பேராள்  -  பிரதிநிதி,   பெரிய ஆள்.

போரின்மை - அமைதி, சமாதானம்


சுவைத்து மகிழ்க.

மீள்பார்வை பின்னர்.

உங்கள் கருத்தை அல்லது காண்பனவற்றைப்

பின்னூட்டம் செய்க.

புதன், 30 மார்ச், 2022

மையம் , இரு கருத்துகள் அடிப்படை

 மையம் என்ற சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அணுகி விளக்கலாம். இதற்கான வசதி தமிழில் மிகுதியாய் உள்ளது.

முன்னரே விளக்கியவற்றை  இங்கு முழுவதுமாகத் தருவிக்காமல்  சில குறிப்பிட்ட பின் மற்றொரு விளக்கத்தை முன்னிறுத்தலாம்.

நடுவில் உள்ள ஓர் இடமோ பொருளோ, நாற்புறமும் உள்ள் இடங்களை மருவி நிற்பதனாலேதான் மையம் ஆகின்றது.  இது நல்லபடியாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டத்தின் மையமானது, அவ்வட்டத்தில் எல்லாப் புள்ளிகளையும் மருவி நிற்கின்றது.

மரு என்பதன் அடி மர் என்பது.

சுருக்கமாக,

மர் > மய்>  மை > மையம் ஆகும்.

இதுபோல் திரிந்த இன்னும் உள்ள சில:

விர் >  விய் > வியன். ( வியனுலகு).  விர்> விரி> விரிவு.

கர் > கை.    கர்> கரம்;    கர்> கை.

அல்லது கை> கர் எனினுமாம்.


மர் > மரு.

மர் > மர் >  மர்த்து.  > மத்து ( இடைக்குறை)  > மத்தியம்.

மர்த்தியம்> மத்தியம் என்பதில்,  இ அம் என்பன இடைநிலையும் விகுதியும்.


மையத்துக்கொல்லை என்பது ஊர்களுக்கு நடுவான இடத்தில் உள்ள புதைகுழி  நிலம் என்று பொருள் விளக்கலாம்.


மாய் >  மய் > மய்யம் > மையம்.  இதில் மாய் , அதாவது இறந்தோரைப் புதைக்கும் இடம் என்று பொருளுரைக்கலாம்.

இங்கு இதை முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர் என்பது சரியாகும்.

ஆகவே சுடுகாடு குறிக்கும் மையம் என்பது முதனிலை குன்றியமைந்தது.

மையம் என்பது இருபிறப்பி ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.