உருது என்பது புதுமொழியாகத் தோன்றி வளர்ச்சி பெற்றுள்ளது. இம்மொழியில் பல தந்திரங்களைக் கையாண்டு சொற்கள் உண்டாக்கப்பட்டன. இதனை உண்டாக்கிக்கொண்ட மக்கள், நம் தென்னிந்திய முஸ்லீம்கள். அரபி எழுத்துக்களைப் பயன்படுத்தியதால், இம்மொழி எழுத்துக்கள் தெரிந்தால், அரபியில் எழுதப்பட்ட நூல்களையும் ஏனைப் பதிப்புகளையும் வாசிக்கலாம். மலேசியாவில் உருது அரபி வாசிக்கத் தெரிந்த சீனர்களும் மற்றோரும் பலர் இருந்தனர். அதிலொருவர் தண்டனைச் சட்டங்களை ( Penal Code) ஆங்கிலத்திலிருந்து உருது, மலாய் மொழிக்கு மொழிபெயர்த்தார். உருது மொழியில் இசையும் நன்கு வளர்ச்சிபெற்று இனிய இராகங்களும் உருவாயின.
முதன் முதலாக மலாய் மொழியில் உருது எழுத்துக்களால் நூல்கள் எழுதியவர் அப்துல்லா என்ற தமிழர். இவருடைய தன்வரலாறு, "ஹிக்காயத் அப்துல்லா" என்ற பெயரில் வெளிவந்துள்ளது. மேல்படிவ வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது..
பல உருதுச் சொற்கள், நம் முஸ்லீம் தமிழர்களால் படைக்கப்பட்டன. பழைய தமிழிசையை ஒட்டிய புது இராகங்களும் உண்டாக்கப்பட்டன. மொகலாய அரசர்கள், யோண்புரி ( ஜோன்புரி) இராகத்தையும் இதுபோல் பிறவற்றையும் விருப்பத்துடன் கேட்டு மகிழ்ந்தனர் என்று கூறுவர். சில தமிழ் மூலங்களையும் பயன்படுத்தி, சொற்களை உண்டாக்கியுள்ளனர். இவற்றை - முஸ்லிம்களால் படைக்கப்பட்டமையின் உருது என்றும், தமிழ் மூலங்கள் உடைமையால் தமிழ் என்றும் கூறுதல் கூடும்.
இரஸ்தா என்பது இருதிசையிலும் செல்லும் வண்டிகளையும் நடையர்களையும் கொண்ட வழிப்பாதை அல்லது சாலை என்னலாம். இது படைக்கப்பட்டது இவ்வாறு:
இரு அசை தா - இரசைதா > இரஸ்தா. ( இரு என்பதன் ஈற்று உகரம் கெடுத்தும் சை என்பதன் ஐகாரத்தைக் குறுக்கியும் சொற்புனைவு நடாத்தப்பெற்றது).
இருதிசை அசைவுச் சாலை என்பது. (இருதிசை அசைவு - போக்கு வரத்து)
இருதிசையினும் அசைதருதல் என்ற தொடர்நோக்கி அமைந்த சொல், இரசுதா (இரஸ்தா ) ஆகும்.
வரு(தல்) - வரத்து என்பதில் வரு+ து > வரத்து என்று ருகரத்தின் உகரம் ஒழிந்ததையும் காண்க. து என்பதும் தொழிற்பெயர் விகுதியாய் வரும்.
இதற்கொரு போன்மை காட்டுவோம்.
இறு என்பது இறுதி ( கடைசி) என்பதன் அடிச்சொல். இறைவனே எல்லாவற்றிற்கும் இறுதியானவன்.
அதாவது இறைவன் என்போன், அதனில் தொடங்கி அதனிலே முடிவாய் இருப்போன்.
இறு > இறை > இறைவர் > இஷ்வர் > ஈஸ்வர் ( நாவொலிக்க எளிதாக்கம்).
வடவொலிகள் என்று சுட்டப்பட்டவற்றைத் தமிழ் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது பழைய இலக்கணங்களால் தெளிவுறுத்தப்படவில்லை. இவ்வொலிகள் பலமொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடின ஒலிகளை மெதுவாக்க இவ்வொலிகளைப் பயன்படுத்தினர் என்று தெரிகிறது. ச என்பது கடின ஒலி. ஸ எனற்பாலது எளிய ஒலி.
வடவெழுத்து ஒரீஇ உரிய தமிழ் எழுத்துடன் புணர்த்தால், அது தமிழாகிவிடுகிறது. இது ஏன் அப்படி என்றால், தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றீடுகளை உள்செருகித்தான், இவ் அயற்சொற்களைப் படைத்தனர். பயணத்தின் எதிர்த்திசையில் சென்றால், தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுதல் என்பதுதான் இங்கு பயன்படுத்தப்படும் உத்தியின் உட்பொருள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
சில திருத்தங்க்ள் 1127 12012022