ஆத்தி என்று பெண்பால் குறிக்கும் ஒரு பின்னொட்டாக வரும் என்பர். எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்படுவது : வண் + ஆத்தி என்பதாகும்.
அச்ச உணர்வை அல்லது வியப்பைக் குறிக்க ஆத்தி என்று சொல்வதுண்டு. அடி ஆத்தி என்று இணைத்துச் சொல்வதும் உண்டு.
ஆதியந்தம் என்ற கூட்டுச்சொல் ஆத்தியந்தம் என்று வருவதுமுண்டு, வரின், வலி மிக்கு வந்ததென்க. (வலித்தல் விகாரம் ).
உண்மையில் வீட்டிலுள்ள இன்னொரு பெண்ணை விளித்துச் சொல்லும் சொல். அகம் + தி > அகத்தி > ( திரிந்து ) ஆத்தி ஆனது. முதலெழுத்தை அடுத்து ஒரு ககர எழுத்து அல்லது அதன் வருக்கம் வந்தால், அ என்ற முதல் ஆ என்று திரியும். எடுத்துக்காட்டு: பகல் > பால்.
அகத்தில் உள்ள இன்னோர் பெண்ணை கூப்பிட்டுச் சொல்வது இது என்பது கூறினோம். அய்யன், அய்யா என்பது ஐயோ என்று ஓலமிடு சொல்லாக வருவதுபோலுமே இதுவாகும்.
அகத்துக்காரி ஆத்துக்காரி போல வருவது இத்திரிபு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.