கோவிட் இல் லாவிடத்தில் கூட்டம் இல்லை,
இல்லைகூட்டம் எனிலங்கு கோவிட் இல்லை.
எல்லாத் தெய் வங்களுமே செய்த நன்மை
நன்மைஒன்றும் செய்யாத தெய்வம் இல்லை
ஞாலமிதில் அறியுண்மை தொல்லை இல்லை
இல்லையிது தவிரஏதும் உண்மை எல்லை.
அரும்பொருள்:
கோவிட் இல்லாவிடத்தில் ---- கோவிட் என்னும் கிருமி இல்லாத தலத்திலே, கூட்டம் இல்லை --- மக்கள்திரள் எனற்பாலது காண்வியலாது; இல்லை கூட்டம் எனில் - -- மக்கள்திரள் காணவியலாத நிலை எனில், கோவிட் இல்லை - கோவிட் என்னும் நோய்நுண்மி அறிவியல் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்க இயலாது; எல்லாத் தெய்வங்களுமே செய்த நன்மை --- இதுவே எல்லா மதத்தின் பலபெயர்கள் உள்ள தெய்வங்களும் நமக்குச் செய்த நன்மை ஆகும்; நன்மை ஒன்றும் செய்யாத தெய்வம் இல்லை -- எந்த நன்மை செய்யாத ஒன்றை நாமும் தெய்வம் என்று குறிப்பிடுவதில்லை! , ஞாலமிதில் - இந்த உலகத்தில், அறி உண்மை - இந்த உண்மையை அறிந்துகொள்வாயாக; தொல்லை இல்லை - அறிந்துகொண்டுவிடில் அதனால் உனக்கு தொந்தரவுகள் இரா; உண்மை எல்லை - உளமையின் இறுதிக்கோடு, இல்லை இதுதவிர ஏதும் -- இது தவிர ஏதும் காணமுடியாது என்றவாறு.