"இங்கே பப்பு வேகாது , நாம் வேறு கடையில் போய்ப் பார்ப்போம்" என்று ஒருவன் இன்னொருவனிடம் சொல்லும்போது பப்பு என்பது நமக்கு என்னவென்று தெரிகிறது. பருப்பு என்ற சொல்லைத்தான் பப்பு என்று பேசினவன் குறுக்கிச் சொல்கிறான்.
பருப்பு என்ற சொல்லின் எழுத்து ஒன்று : ரு - இச்சொல்லில் மறைந்து பப்பு என்று வருவது காணலாம், வேகாது என்ற சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது.
சில வேளைகளில் இடைக்குறைகள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை.
மண்ணுதல் என்பது கழுவுதலை அல்லது குளித்தலைக் குறிக்கும். ஒளிவீசும் மணிக்குப் பெயர் அமைத்தகாலை அதனை மண்ணி என்றுதான் சிந்தித்திருப்பர். காரணம் இந்தக் கல் தேய்த்துப் பளபளபாக்கப்பட்டுக் கழுவப்பெற்றதால் ஒளிவீசத் தொடங்கிய கல். அது பின் மணி என்று சுருங்கிவிட்டது. இச்சொல் பிறவியில் ஓர் இடைக்குறை. அதன் முழுவடிவம் மறைந்துவிட்டது.
BROADBAND DISRUPTION, WILL CONTINUE WHEN RESTORED