ரோடா என்றொரு சொல் உள்ளது. இதற்குச் சக்கரம் என்று பொருள். தமிழில் இன்னொரு சொல் வேண்டுமானால் "உருளை" எனில் பொருளொக்குமென் றறிக.
ரோடா என்பது தமிழில் ரோதை என்று சற்று ஒலிவன்மை குறைந்து இயலும்.
தொடர்புடைய வேறு பொருள்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன,
https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_50.html
டா என்ற ஒலிக்கு தா என்பது சற்று மென்மை; இருப்பினும் இரண்டும் தமிழ் இலக்கணியரால் வல்லினம் என்றே அடையாளம் காணப்பட்டவை.
ரோதையும் ரோடாவும் தமிழன்று என்பது தமிழ் ஆய்வாளர் நமக்குச் சொல்வது.
இருக்கட்டும். இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் காண்போம்.
உருளுவதும் ஓடுவதும் உருளையின் அடைவுகள். "த ப்ராப்பர்டீஸ்" ( the properties / characterestics ) என்பர்.
அடைவு என்பது: ஒரு பொருளை அடைந்து அல்லது சென்றுசேர்ந்து அப்பொருளின் தன்மையாகிவிட்ட சிறப்பமைவுகள் . யாம் அடைவு என்றால் அதற்கு இதுவே பொருள்.
உருள் + ஓடு + ஆ= உரு + ஓடு + ஆ= உரோடா > ரோடா
உருள் என்ற சொல்லைத் தலையும் வாலும் வெட்டிப் புகுத்தியுள்ளனர்.
ஆ இறுதிநிலை பெற்ற சொற்கள்:
நில் > நிலா
பல் > பலா ( பல சுளைகள் உள்ள பெரிய பழம் )
கல் > கலா ( கற்றுச் செய்யப்படுவது ) கலை.
வில் > விலா ( வளைவு)
உல் > உலா.
செல் > செலா ( செலாவணி )
இவ்விகுதி வினைச்சொற்களிலும் அல்லாதனவிலும் வரும்.
ளகர ஒற்று வீழ்ந்த இன்னொரு சொல்:
இருள் + வசி= இருள்வசி > இருசி.> இருடி.
காட்டிருளில் வாழும் தபசி. இவர்கள் பெரும்பாலும் ஊர்வாணரை வெறுத்ததால் " கெட்ட இருசி" என்று குறிக்கப்பெற்றனர்.
உருள் என்பது முதலில் தன் ளகர ஒற்றை இழந்தது. சொல்லமைந்த பின் உகரத்தை இழந்தது.
ரோட் என்பதனுடன் தொடர்புடைய இந்தோ ஐரோப்பியச் சொற்கள் பல. அவற்றை ஈண்டு பட்டியற்படுத்தவில்லை.
ரோதை என்பது திரிபு.
உருள் - தமிழ்
ஓடு - தமிழ்.
ஆ - தமிழ் விகுதி .
இரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டால் அது போர்த்துக்கீசியச் சொல் ஆகிவிடுகிறது.
இந்த ரோடா இங்கிருந்தால் என்ன? உருண்டு அடுத்தவீட்டுக்கு ஓடிவிட்டால்தான் என்ன? எங்கிருந்தாலும் வாழ்க.