புதன், 19 செப்டம்பர், 2018

காமாக்கியா என்பது என்ன தெய்வம்?

மேகாலயாவில் காமாக்கியா பீடம் என்று ஓர் அம்மனைப் போற்றுமிடம் உள்ளது,  இச்சொல் யாது என்பதை இப்போது அறிந்துகொள்வோம்,

காமாட்சி என்பது ஒரு தெய்வத்தின் பெயர்.

காஞ்சி காமாட்சி அம்மையை உங்களுக்குத் தெரியும்.

இந்தச் சொல்லை இருவகையாகப் பிரிக்கலாம்.

மக்களைக் காக்கும் மாண்பினை உடையாள் என்பது ஒரு வகை.

கா :  காக்கும்;
மாட்சி :  மாண்பு.

இது தெய்வத்தைக் குறிப்பதால்  மாண்பு என்பதை மாண்பு உடையாள் என்று பொருள் கூறல் வேண்டும்.

கா+  மாட்சி  =  காக்கும் மாட்சி (உடையவள்.)

இனி இதனைக் காமம்+  ஆட்சி என்றும் பிரிக்கமுடியும்.

காமம் + ஆட்சி
=  காம +  ஆட்சி .  இதில் முதல் சொல்லில்  ( நிலை மொழியில்) உள்ள  இறுதி அகரம் கெடும் அல்லது விடப்படும்.   காம்+  ஆட்சி =  காமாட்சி ஆகிவிடும்.

காமாட்சிக்கு  ஓர் ~ ஆள் பெண்பால் விகுதி சேர்த்தால்:

காமாட்சியாள் என்றாகும்.

ஆட்சி என்பது ஆக்கி என்று திரியும்.   இன்னொரு சொல் எடுத்துக்காட்டாக:
பட்சி > பக்கி.

ஆகவே  ஆக்கியாள் என்று மாறிவிடும்.

காமாக்கியாள்.  இந்த ஆள் விகுதியில் உள்ள ள் பிற மொழிகளில் வருவதில்லை.

காமாக்கியாள்  >  காமாக்கியா.

முடிவு:  மேகாலயா முதலான மாநிலங்களில்  காமாக்கிய(/யா) என்றே வழங்கும்  இவ்வம்மனின் பெயர்.

அம்மனின் பெயர்:  எப்படிச் சொன்னாலும் முழுநிறைவே :  பூரணமே.
எல்லோரையும் வாழ்விக்க வேண்டும்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

effective, x.e~. = கேட்கும் xகேட்காது. ( colloq.)


ஒரு மருந்து நோயைக் கட்டுப்படுத்தவல்லது,  சரிப்படுத்திவிடும் என்றெல்லாம் எழுத்தில் குறிப்பிடுவார்கள். இந்தக் கடினப் பதங்களையெல்லாம் மக்கள் இயல்பான பேச்சில் கையாளுவதில்லை.

உனக்குச் சோகை பிடித்திருந்தால் இந்த மருந்து கேட்கும் என்று பேச்சில் சொல்வர்.  அகராதிகளைப் பொருத்தவரை,  காதால் கேட்கப்படுவதைத் தான் கேட்கும் என்போம்.

ஆனால் மருந்து நோயைக் கேட்கிறது என்பதை நீங்கள் அறிந்ததுண்டோ?

சோகை நோயில் இரத்த ( அரத்த )  சோகை என்பது கடின வகை என்று கூறுவதுண்டு.  சோகை பிடித்தவன் எப்போதும் உடல் வலிமை குன்றிக் காணப்படுவான். இப்படிப் பேசிக்கொள்வார்கள். நோயைப் பற்றி அறிய வேண்டின் மருத்துவரை நாடவும்.  இப்போது சோகை என்ற சொல்லைக் காண்போம்.

சோர்வு என்பதே நமக்குச் சொல்லப்படும் அறிகுறி.

சோர்தல் >  சோர்கை >  சோகை.  இதில் ஒரு ரகர ஒற்று மறைந்தது.

சோகை என்பது ஒரு நோயின் பெயராய் ஆகிவிட்டது. இதற்கு ஆங்கிலத்தில் எனிமியா என்பர்.  இது நோயோ அல்லது நோயின் அறிகுறியோ என்பதை மருத்துவர்பால் உசாவி அறிக.

ரகர ஒற்று மறைந்த சொற்களை முன் இடுகைகளில் கண்டி மகிழவும்,



B12. Mecobalamin. Neromethyn.  Peripheral Neuropathies.

திருத்தம் பின்.

திங்கள், 17 செப்டம்பர், 2018

மோடிக்கு வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும்  மோடியார்க்  கோர்நற்
சிறந்த பரிசுசீர் ஞாலத்தில்  செப்பின்
வருந்தேர்தல் வெற்றி வழங்குவ தன்றி
அருந்தொண்டிற் கானது சொல்.

எல்லாம் நலமேதான் சூழ்கென்று தொண்டாற்றும்
வல்லார் திருமோடி வாழ்கவாழ் கெந்நாளும்
மக்கள் நலத்திட்டம் மாணுக மாறாமல்
தக்கதே தாவிக் கணம்.

வழங்கவ தன்றி = வழங்க + அதன்றி = வழங்க அது
அன்றி; 
வழங்குவதன்றி எனினும் இதற்கு இணையான 
பொருள் தரும்.

மாணுக :  சிறக்க.

தா இக்கணம் :  தாவிக்கணம்  -  தாவிக்  கணம்..

கணம் என்பது  திரட்சியுமாம்.   தாவி = இடம் மாறி  
மக்கள் திரட்சி -   கணம்   -   ஆகும் என்பதுமாம் .