இன்று தைலம், தயிர் முதலிய சொற்களை நுணுகி ஆய்ந்து அறிந்து அகமிக மகிழ்வோமாக.
தடவு என்ற சொல்லை நோக்குங்கள். நம் கையானது சென்று இன்னொரு பொருளைப் பொருந்துதலையே தடவு என்பது குறிக்கிறது. தடவு என்பதில் இறுதியில் நிற்கும் ~வு என்ற இறுதி, ஒரு வினையாக்க விகுதியாகும். இவ்விகுதி வினைகளை உருவாக்கவும் வரும். பெயர்ச்சொல்லாக்கத்திலும் வரும். எடுத்துக்காட்டு: உறவு. ( உறு+ வு : இதில் று என்பது உகரத்தை இழந்து அகரமாகி வுகரமுடன் இணைந்து சொல்லமைகிறது காண்க.)
தடவு என்பதன் அடிச்சொல்: தட என்பதுதான். தள்> தடு> தட.
தள் என்பது தய் என்றும் திரியும். தய் பின் தை என்றும் உருக்கொள்ளும்.
இதன் அடிப்படைச் சொல்லாக்கப் பொருளானது பொருந்துதல் என்பது. நான் என் முகத்தைத் தடவும்போது, என் விரல்கள் அல்லது உள்ளங்கை சென்று முகத்துடன் பொருந்துகிறது. பொருந்தாவிடில் தடவுதல் என்ற வினை நிகழ்வதில்லை.
பாலின் உள்ளீடு தயிராகிறது. எப்படி என்றால் பாலில் பொருந்தாமல் விரிந்து நின்ற கண்ணறியாத அணுத்திரள்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திவிடுகின்றன. ஆகவே இத்திரள்கள் பொருந்திவிடுகின்றன. கட்டியாகித் தயிர் உருவாகிறது. உண்மையில் இச்சிறு திரள்கள் தைத்துக் கொள்கின்றன. தைத்தலாவது பொருந்துதல்.
தய் > தயிர். ( இர் என்பது சொல்லாக்க விகுதி).
தய் > தை. அதாவது தய் = தை.
இதனைத் தை+இர் என்று காட்டி, தய்+இர் என்று உருப்படுத்தி, தயிர் என்று முடித்தாலுமொன்றும் வேறுபடுதல் இல்லை.
பைம்மை > பசுமை.
பை+ இர் = பையிர் > பயிர்.
ஐகாரத்துக்கு அகரம் நின்று நிகர்தரும். செய்யுளில் இது நிகழ்வதை அறிந்த தொல்காப்பிய முனி, ஐகாரம் குறுகி ஒலிக்குமென்றார். இது சொல்லாக்கத்திலும் நிகழ்வது ஆகும்.
தைலம் தேய்க்கும்போதும் கை தேய்க்குமிடத்துப் பொருந்துகிறது. தேய்பெறும் எண்ணெய் போலும் பொருள் தைலம் ஆகிறது.
தை= தய். தய்+ இல் + அம் = தயிலம் > தைலம்.
தைவருதல்: தேய்த்தல். "தைவரு மன்னே!" - ஔவையார், புறநானூறு.
தை: பொருந்துதல். தையல்: துணிகளைப் பொருந்த இணைப்பவனின் செயல்.
தையல் = பெண். பொருந்தும் மறுபாதி.
தை > தைமாதம் : எல்லாம் பொருந்திவரும் மாதம்.
தய் = தை எனப்பட்டதேனும் மரபுப்படியே எழுதுதல் வேண்டும். தைலம் தைலமென்றே எழுதுக. தயிர் அவ்வாறு எழுதுக. தைர் என்று எழுத ஏதும் உரிமம் வழங்கப்படவில்லை என்பதை அறிக.
---------------------------------
அடிக்குறிப்புகள்:
தை+ இல் + அம் = தய்+ இல் + அம்.
தை = தேய்த்தல். தள் > தை > தய்.
இல் = இடம்.
மரம் : மரத்தில் என்றால் மரமாகிய இடத்தின்`கண்
என்பது பொருள.
அதுபோல, தை இல் என்றால் தேய்க்கும் இடத்தில்.
அம் என்பது அமைதல் குறிக்கும் ஒரு விகுதி.
பிற்காலத்தில் இது வெறும் விகுதியாகிவிட்டது இயல்பு தான்.
தை இல் அம் = தேய்க்கும் இடத்து ஒட்டிக்கொள்வது.
அதுவே தைலம். தேய்ப்பிடத்தில் பொருந்திக்கொள்ளும் இளகுபொருள்.
தை இல் அம் > தை + ல் + அம் = தைலம். இகரம் கெட்டது.
இதுவுமது: தய் இல் அம் > தயிலம்.> தைலம். இகரம் கெட்டது.
தை என்பது தய் என்பதே ஆதலின் இகரம் தேவை இழந்தது.
.
---------------------------------
அடிக்குறிப்புகள்:
தை+ இல் + அம் = தய்+ இல் + அம்.
தை = தேய்த்தல். தள் > தை > தய்.
இல் = இடம்.
மரம் : மரத்தில் என்றால் மரமாகிய இடத்தின்`கண்
என்பது பொருள.
அதுபோல, தை இல் என்றால் தேய்க்கும் இடத்தில்.
அம் என்பது அமைதல் குறிக்கும் ஒரு விகுதி.
பிற்காலத்தில் இது வெறும் விகுதியாகிவிட்டது இயல்பு தான்.
தை இல் அம் = தேய்க்கும் இடத்து ஒட்டிக்கொள்வது.
அதுவே தைலம். தேய்ப்பிடத்தில் பொருந்திக்கொள்ளும் இளகுபொருள்.
தை இல் அம் > தை + ல் + அம் = தைலம். இகரம் கெட்டது.
இதுவுமது: தய் இல் அம் > தயிலம்.> தைலம். இகரம் கெட்டது.
தை என்பது தய் என்பதே ஆதலின் இகரம் தேவை இழந்தது.
.