திங்கள், 30 ஏப்ரல், 2018

குடிப்பெயர்கள்

பல நாடுகளில் மக்களுக்குக் குலமும் கோத்திரமும் உள்ளன. இல்லையென்றால்தான் அது ஒரு வியப்புக்குரியதாகத் தெரியும்.  காரணத்தைக் கேளுங்கள். மிகமிகப் பழங்காலத்தில் மனிதர்கள் காட்டிலும் மலைகளிலும் திரிந்து துன்புற்ற அந்தத் துன்ப நாட்களில் இரவு நேரத்தில் ஒரு குடும்பத்தினர் ஒரு மரத்திலோ ஒரு குகையிலோ தங்கினர்.  மரத்திலேற முடியாத நொண்டிகளாய் இருந்தால் மரத்தடியில் கிடப்பர். கரடி புலி முதலியவை வரும், பாம்பு பூரான் முதலியவை தீண்டுமென்று அஞ்சிக்கொண்டேதான் வாழ்ந்தனர்.  ஒரு குடும்பத்துக்கு எப்போதும் ஒரு மரம் தங்குமிடமாகிவிட்டால் தெரியாதவர்களை அந்த மரத்தில் வந்து தங்க ஒப்பார். இந்த நிலையிலிருந்துதான் குலம் கோத்திரம் முதலிய வளர்ந்தன. ஒரு மரத்துக்குரியவர்கள் எதாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு  உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்குத் தெரிந்தவர்கள்  பக்கத்து மரங்களில் தங்கினர்.  அவர்களின் குலத்திற்கு  ஏதாவது ஒரு பெயர் இருந்திருக்கும்.  அந்தக் குலத்தின் தலைவனுக்கு முடி மிகுந்த நீட்டமாய் இருந்திருந்தால்  "  நெட்டுமுடி" என்றோ வேறு எப்படியோ ஒரு பெயர் இருக்கும். அவனைச் சேர்ந்த எல்லோருக்கும் நெட்டுமுடி என்றே குலப்பெயர் இருந்திருக்கும்.  அவர்களில் சிலருக்கு கட்டைமுடி இருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.

குகைகளில் வாழ்ந்தோருள்ளும் இப்படியே குலங்கள் தோன்றின.  குலம் என்றால் சேர்ந்து வாழ்தல்.  குல்> குலை;  குல் > குலம்.  குலை: வாழைகுலை; திராட்சைக் குலை. எல்லோரும் பச்சை இறைச்சி, பழங்கள் தின்று வாழ்ந்ததால் உயர்வு தாழ்வு ஒன்றும் இல்லை.  எல்லோரும் இரைதேடி உண்ணும் குருவிகளே.

அதிபர் கென்னடி என்பவர் அமரிக்காவின் புகழ்ப்பெற்ற அதிபர்.  கென்னடி என்பது அவர் குடும்பப் பெயர். இந்தப் பெயரின் பொருளைச் சிலர் தேடிக் கண்டுபிடித்தனர்.  "கென்னடி " என்றால் அசிங்கத் தலை என்று பொருள்படுவதைக் கண்டு வியந்தனர்.  ஜான் கென்னடி, ரோபர்ட் கென்னடி , எட்வர்ட் கென்னடி என்று இவர்களையெல்லாம் நினைவு கூரும்போது, அசிங்கத்தலை என்று யாரும் எண்ணுவதில்லை. நாளடைவில் சொல்லின் பொருள் மறைந்து அது வெறும் குறியீடாகவே பயன்பட்டது. மேலும் இப்போது பேசும் ஆங்கிலத்தில் கென்னடி என்ற சொல்லுக்கு அத்தகைய பொருள் ஏதும் இல்லை. அதனாலும் அது வழங்க வசதியாகிவிட்டது.  கேமரூன் என்ற பெயருக்குக் கோணல்மூக்கு என்று பொருள். இதைக் குடிப்பெயராக உள்ள இந்நாள் பெரியவருக்கு மூக்கு அழகாக உள்ளது.  ஆகவே அது வெறும் பெயர்தான்.  கோனலி என்ற குடிப்பெயர்க்கு வலியவன் என்று பொருளாம். இப்போது யாருக்கும் அந்தப் பெயரின் பொருள் தெரியாது.  ஏதேனும் ஒரு வரலாற்று நூலைப் பார்த்து என்ன பொருள் என்று யாரும் தேடுவதில்லை.

யாம் சந்தித்த ஒரு தமிழரின் குடும்பப் பெயர் " பம்பையர்" என்று பெயராம். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப் "பம்பு" வைத்திருந்த காரணமா?   பாம்பு வைத்திருந்ததால் பாம்பையர் என்று இருந்து பின் பம்பையர் என்று குறுகிவிட்டதா,  ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பம்பை நதிப் பக்கத்திலிருந்தவர்களா....... என்னவென்று அவர்களுக்கே புரியவில்லை.
ஒன்றும் புரியாத பெயரானால்தான், அதில் ஏதோ புரியாதது இருக்கிறதென்று எல்லோரும் போற்றும்படி நேர்கிறது. இல்லாவிட்டால் கோணல்மூக்கு என்ற பொருள்கூறும் பெயர் குதூகலம் தர வாய்ப்பில்லை.

காந்தி என்ற பெயர் அழகான ஒலி நயம் உடைய பெயரென்றாலும், அதன் பொருள் வாசனை விற்பவர்கள் என்ற பொருளுடையதாம். ஒலியில் உள்ள உயர்வு பொருளில் இருப்பதில்லை.   நேரு என்ற பெயர் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்தவர்கள் என்று  பொருள்தருமாம்.  ஆகவே   நேரு என்பதற்கும் நீர் என்பதற்கும் உள்ள நெருக்கம் புரிகிறது.. ஆறு என்பது நீரோடும்வழியைக் குறிக்கிறது. பொருளால்  அதுவே நேரு என்பது.    நீர்> நீரு.> நேரு.  காசுமீரில் இவர்கள் ஆற்றுப்பக்கத்து வாணர்களாய் இருந்தனராம்.  இங்கு வருமுன் அவர்களின் குடும்பப் பெயர் வேறு என்று தெரிகிறது.  சிலர் கவுல் என்று நினைக்கின்றனர். மிர்சா என்ற முஸ்லீம் குடிப்பெயர்  "அமீர் ஷா" என்பதன் திரிபாம்.  இது கடற்படைத் தலைவர் என்று பொருள்படும் என்பர்.  நல்ல பதவியைக் காட்டும் பெயர்தான். அட்மிரல் என்ற ஆங்கிலச் சொல் அமீர் என்பதிலிருந்து பெறப்பட்ட தாகும்.  காலிங்கராயர் என்ற குடிப்பெயரும் கலிங்க அரசாட்சியில் பங்கு பற்றியோர் என்ற  பொருளைத் தருகிறது.

வால் என்ற சொல் தூய்மை என்ற பொருளுடையது.  மிகி - மிகுந்தோர்.  எனவே வால்மிகி என்பது பொருளின்படி ஓர் முனிவர் என்று பொருள்தரவேண்டும்.  மேலும் முதற் பெருங்கவி அவராதலின்  நல்ல பொருளையே அது தமிழில் தருகிறது. அவர் இராமாயணம் பாடியதற்கு ஏற்ற பெயராகிறது.  அது பின் சாதிப்பெயராய் ஆயிற்றா அல்லது முன்பே அப்பெயரில் அம்மக்கள் இருந்தனரா என்று தெரியாது.  பாணினி பாணன் ஆதலின் அவனும் எடுத்த எடுப்பில் கவிபாடும் ஆற்றல் உள்ளவன் என்றே தெரிகிறது.  இலக்கணம் இயற்றுமளவிற்குப் பேரறிவு படைத்தவன் அக்கவி.

பரஞ்சோதி என்பது இயற்பெயராய்த் தெரிகிறது.   சுவ என்பதி சிவ, சிவப்பு, செகப்பு, செம்மை, என்றும் பொருள்தரும்.  சிவப்பு என்பதைச் சுவப்பு என்று கூறுதல் உண்டு, சொக்கன் என்பது சிவனின் பெயர். சோபித்தல் என்பது ஒளிதருதல். தொடர்புகொண்ட சுவதி என்ற சொல்லே பின்னர் சோதி* என்றானது.  சோனல், சோனாலி என்ற பெயர்களையும் காண்க. பரஞ்சோதி என்றால் இறையொளி. பரஞ்சோதி என்பது இனிய பெயர். ஆனால் குடிப்பெயர் அன்று என்று தெரிகிறது.

சில குடிப்பெயர்கள் நற்பொருளுடையவை.  சில அல்லவெனினும் அவற்றின் பொருள் நோக்குங்கால் அறிய இயலாமையின் அவையும் தொடர்கின்றன.

திருத்தம் பின்.
காணப்பெற்ற பிழைகள் சில, திருத்தப்பெற்றன.  28.12.2018


ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கத்தியும் சத்திரியரும்.

கத்தி என்பது  ஒரு பேச்சுவழக்கில் எழுந்த சொல். இந்தச் சொல் கற்காலத்திலிருந்து தமிழில் வழங்கிவரும் சொல் என்பது  அதன் அமைப்பைப் பார்த்தால் நன்' கு புரிந்துகொள்ளலாம்.

இந்தியக் கற்காலமென்பது ஏறத்தாழ கி.மு. 1200க்கு  முந்தியது  என்பர். ( Before  Circa 1200 BCE -  1000 BCE. ).  முதலில் பொன்னைக் கண்டுபிடித்தார்களா இரும்பைக் கண்டுபிடித்தார்களா என்றால்,  பொன்னையே என்று ஊகிக்க வேண்டும். சொல்லாய்வுப் படி  இரும்பின் பெயர் "இரும் பொன் " என்பதன் திரிபு.  பொன்னை அறிந்தபின் இரும்பை அறிந்தபோது அதைப் பெரிய பொன் என்றனர் தமிழர்.  இரு (ம்) -  பெரிய. பொன் . -  சற்றுக் கலப்பான தங்கம். தூய தங்கம் சீனர்கள் பயன்படுத்துவர் .

இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்த அறியுமுன் தமிழர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.  கூரான கல்லைக் கொண்டு, தமக்கு வேண்டிய பொருள்களைப் பிளந்து துண்டுகளாக்கினார்கள்.  ஒரு பொருளைப் பகுத்துத்  துண்டாக்குவதற்குப் பயன்படுத்திய கல்லே கத்தி ஆனது.

கல் >  கல்+தி >  கல்த்தி >  கத்தி.

கத்தி பிற்காலத்து இரும்பால் செய்யப்பட்டது.  கல் என்ற சொற்பகுதி மறக்கப் பட்டது .  அது நல்லதே.

( சேலை என்ற சொல்லுக்குப் பொருள் மரப்பட்டை என்பது.  இப்போது நூலால் செய்து அணிந்தாலும் பெயர் அதுதான்.)

( சறுக்கி அருகில் செல்வது  சறுக்கரம்.  பின் உருளையால் அமைந்தாலும் அது சறுக்கரம் தான்.  அது சக்கரம் என்று திரிந்தது. )

இச்சொல்லில் இருக்கும் ல் என்ற ஒலி தி என்ற விகுதியின் வரவுக்குப்பின் ஒரு தடைபோலுமிருப்பதால் அது விலக்கப்பட்டது. இப்படித் தகர வரவால் லகர ஒற்று  மறைந்த சொற்கள் பலவாகும். (  நமது முன் இடுகைகளைப் படித்துப் பட்டியல் போட்டுக்கொள்ளலாம் ).

கல்+தி > கற்றி > கத்தி என்று காட்டினும் அதே.

வெற்றி என்ற எழுத்துமொழிச் சொல் வெத்தி என்று பேச்சில் வருவது போலுமாம்.  சிறு அம்பலம் என்பது சிற்றம்பலம் ஆகிப் பின் சித்தம்பலம் > சிதம்பரம் ஆகிவிட்ட திரிபுகளையும் அறிக.  அம்பரம் என்பதை ஈண்டு விரிக்கவில்லை.

கத்தியிலிருந்து யாமெடுத்துக்கொளவது கத்திரியர் என்ற சொல். இதுபின் சத்திரியர் என்று மாறி அயல் நூல்களுக்கும் சென்றது.

கத்தி கொண்டுபோராடும் தொழிலை மேற்கொண்டோர்,  கத்திரியர்.
கத்தி + இரு + இ + அர்.   கத்திரியர்,  பின் சத்திரியர்.   இதன் முன்பொருள் கத்தியுடன் இருப்போர் என்பது.  க - ச  திரிபு .   சேரலர்  >  கேரளர்  என்பது உதாரணம் .

கத்தியுடன் இருப்பவனைக் குமுகம் ஒருகாலத்தில் உயர்வாகக் கருதவில்லை.  இந்தக் காலம் மனுவின் காலத்துக்கு முன் ஆகும்.  மேலும் இறைவனை உணர்ந்தோர் போல் இவர்கள் அமைதியான குணம் உடையவர்களாகவும் இருக்கவில்லை.  கொலை முதலியன செய்ய அவர்கள் தயங்கியதும் இல்லை. "  மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை ஆண்டவர்கள் " என்று கவியரசு கண்ணதாசன் எழுதியது இவர்களைப் பற்றித்தான். ஆனால் சட்டத்துறை அறிஞர்கள் தம் சிந்தனைக் கட்டுரைகளில் சொல்வதுபோல் முதலில் வலக்காரத்தால் நாட்டையே அலைக்கழித்தாலும் இறுதியில் அமைதியை நிலை நாட்டி, ஆட்சியை ஏற்படுத்தி முடி சூடியபின் ஒழுங்கை நிலைநாட்டிவிட்டால் கத்திரியர் ( கத்தி வைத்திருந்தாலும் குண்டுகள் வைத்திருந்தாலும் )  அல்லது ஆயுதபாணிகள்  அரசர்களாய்
உயர்ந்துவிடுகிறார்கள் என்பதை அறியவும். (When social order sets in and peace prevails,  legitimacy returns. )

குழப்பமான காலங்களில் நீதி  சட்டம் ஒழுங்கு என்பவை நிலை நாட்டப் படுதல் பற்றி இங்கிலாந்தின் டென்னிங் பிரபுவும்  பிரபுக்கள் அவையும் தந்த நீதி  முடிபுரைகள் சிந்தனைக்  கருவூலங்கள். (Lord Denning M R in the English Court of Appeal and House of Lords on a Rhodesian case ).  ஒரு காலத்தில் கெட்டது  இன்னொரு காலத்தில் நல்லதாகிவிடும்.

அச்சமே இல்லாதவனுக்குக் கத்தி எதற்கு?  இந்த வகையில், கத்தி இருப்போர் அச்சமுள்ளோர்.   இரிதல்:  அஞ்சுதல்.  இரிபு:  அச்சம். இன்னும் பிற பொருளும் உள்ளன.

ஆகவே கத்தி + இரியர் என்பதை  கத்தியுடன் அஞ்சி நின்றோர் என்றும்  பொருள் கொள்ளவேண்டும்.

இருப்போர் அச்சமுள்ளோர்.  பணம் இருப்போர் அஞ்சுவர்.  கத்தியிருப்போர் அஞ்சுவர்.

கத்தி + இரு  அல்லது கத்தி இரி என்று எப்படிக் கொண்டாலும் பொருள் அதுதான்.  கத்தி வைத்துக்கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள்.

நாம் கத்தி + இரு + இ + அர்  என்பதையே இங்கு கொள்கின்றோம்.

சத்திரியர் என்ற சொல்லுக்குச்  சரியான பொருள் தமிழே தரும்.

In the end:  அச்சத்தைப் போக்கியது  ஆட்சியை ஆக்கியது கத்தி

அறிக மகிழ்க.

மெய்ப்பு  - பின்னர்.

சனி, 28 ஏப்ரல், 2018

சீனாவிலிருந்து கடன்வாங்கிய மொழி இயல்புகள்.


ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இயல்பு அல்லது தன்மை என்பது இருக்கின்றது. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத் சொல்தாவும்போது  இவ்வியல்பின் காரணமாகச் சொல்லானது மாற்றமடைகிறது.   இந்திய மொழிகளில் தருமம் என்ற சொல்,  "^தர்மா" என்று ஒலிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சொல் மலாய் மொழிக்குள் ஏகும்போது  டெர்ம  derma என்று பலுக்கப்படுகிறது. ( மென்டர்ம menderma ).  ஆங்கிலத்திலும் இது டர்மா dharma என்றே ஒலிக்கிறது. இதனை இத்தனை கடின ஒலிகொண்டு வெளிப்படுத்துவது தமிழர்களின் நாவுக்கு ஒத்து வருவதில்லை. தமிழர் அல்லாத அவர்களெல்லாம் ''டர்ம"  என்று ஒலித்து மகிழ்வு கொண்டாலும் நாம் நமக்கு ஒத்தவாறு  "தருமம்"  (தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்) என்றுதான் பேசுகிறோம்.

இதே தருமம் என்ற சொல் இந்திய  எல்லை கடந்து சீனர்களிடையே போகுமானால் டர்மா என்பதுகூடப் பொருந்துவதில்லை. மண்டரின் மொழியின் இயல்புக்கேற்ப   "டம்மா" என்று மாறிவிடுகிறது.  அதாவது இடைஞ்சலாகத் தெரியும் ஒலியை விட்டுவிடுவர்.

"ஊட்லி" என்ற ஆங்கிலச் சொல்லை மண்டரின் மொழிக்குள் கொண்டுசெல்ல வேண்டுமானால்,  "ஊ-லி" என்றுதான் சொல்லவேண்டும்.   டகர ஒற்று  ( ட் ) இடையில் வந்து ஒலியொழுகுதலைத் தடுப்பதுபோலிருப்பதால், அவர்கள் நாவிற்குத் துன்பம் விளைகிறது.  குட் கட் மட் என்றெல்லாம் வல்லெழுத்துக்களைப் போட்டுப் பேசுவது அவர்களுக்குப் பழக்கமில்லை. கடுமையான உச்சரிப்பு.  என்ன குண்டுபோடுவதுபோல் டா டூ என்கிறான்!  என்று சீனப்பாட்டி  கோபித்துக்கொள்வாள்.  "பேசுகிறானா? எதையோ உடைக்கிறானா?......."

நம் பெயர் அவனுக்குக் கட்டமாக (கஷ்டமாக ) இருக்கிறது.  அவன்பெயர் நமக்கு இன்னலாகவும் நாவிடியாகவும் உள்ளது.

ஒருதடவை இங்கு தரப்படும் தகவுடைய  எடுத்துக்காட்டுகளைக் கேட்டுவிட்டால் மொழிகளில் ஒலிமரபு என்பது நன்றாகப் புரிந்துவிடும்.
பேசுவதற்கு முதன்மையானது நாக்கா அல்லது உதடுகளாபல மொழிகளில்உதடுகள் முக்கியமானவை. "Thy own lips hath said....." என்று விவிலிய நூல் மொழிபெயர்ப்பு வருகிறது.

பத்மா என்ற பெயரை Padma  என்று  ஆங்கிலத்தில் எழுதுகிறோம்.   மண்டரின் மொழியில்  "பா-மா" என்று சொல்லவேண்டும். மதுரை என்பதை....? Madura என்று சொல்வர். மண்டரினில்   மதுரையை  " மாராய்"  எனலாம்.   டேவிட் மார்ஷல் என்பதை "தாஹுவே மாஸியாவ்"  என்றுதான் சொல்லவேண்டும்.

கேடுது என்று அமைத்துப் பின் கேது என்று சொல்லாக்கம் செய்வதும்பீடு+ மன் (பீடுபெற்ற மன்னன்) என்பதை  பீமன்வீமன் என்று மாற்றுவதும் தரும என்ற சமஸ்கிருத வடிவத்தை தம்மா என்று பாலிமொழியில் மாற்றுவதும் -- இப்படிப் பட்ட தந்திரம்தான்.   நம்மொழியில் ஒலிமரபுப் படி பீடுமன் என்றே வைத்துக் கொள்ளலாம் என்றாலும்பீமன் என்று மாற்றுவது:  வேற்றுமொழி இயல்புக்கேற்ப மாற்றியமைப்பதாகவே கொள்ளலாம். மாற்றியமைத்தபின் அச்சொல் உருத்தெரியாமல் இருப்பது கதைகளை மறைமுகமாகத் தெரிவிக்கவும் உண்மைப்பெயர்களை  இரகசியப்படுத்துவதற்கும்  அமைத்த விதத்தை அறியமுடியாமல் செய்வதற்கும் நன்`கு பயன்படுவன ஆகும்.

இத்தகு வித்தைகளை நம் முன்னோர் நம் மொழிகளில் நன்`கு கையாண்டிருக்கின்றனர்.

யானைக்குப்  பெயர் ஒன்று வைக்கவேண்டி நேர்ந்தது.  அதாவது ஒரு பொதுப்பெயர்.  முன்னரே பலமொழிகளி லெல்லாம் வழங்கும் பெயர்களைக் கடன்வாங்கியிருக்கலாம்.  என்ன கடன்திருப்பிக் கொடுக்கவேண்டியதில்லையே.  பிறமொழிப் பெயரை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் பெயர் வேண்டும் என்று தீர்மானித்துவிட்டனர். யானையின் முகத்தை நோக்கினால் பல பக்கலிலும் கடைந்து செய்யப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. வாயில் பல் (கொம்பு) நீண்டமைபற்றி பன்றி என்று பெயரிட்ட மரபையே பின்பற்றிகடை+ஜா என்று வைக்கலாம் என்பது கூறப்பட்டது.  டையில் வரும் ஐகாரத்தைக் குறுக்கிகடஜா ஆக்கினர்.   அப்போதும் சரிப்படவில்லை.  டகர வல்லொலி நீங்காமல் நின்றுவிட்டது.  தமிழ் மொழியிலிருந்து எடுத்தால் இது ஒரு வேண்டாத இடர். என்ன செய்வது.  டகரத்தை எடுத்தனர். கடஜா ( முகம் கடைந்து பிறந்தது)  என்ற சொல் கஜா என்று மாறியது. இப்போது எவ்வளவு அருமையாக உள்ளது!!  கடையப்பட்டவனே என்பதினும் கஜனானனே   என்பது அருமை.  இந்திய சரித்திரம் எழுதிய ஜான் கே இப்பொருளைத் தம் நூலில் முன்வைக்கிறார்.

எடுத்துக்காட்டுகள்:

இடு  >  இட்டம் :    இடு > இடுச்சை > இச்சை .
பரி  + இடுச்சை >  பரீட்சை .

படி > பஜி :

முருகனைப் படி மனமே -  திருமால்
மருகனைப் படி மனமே.

படி என்பது பாட்டுப் படி என்று பொருள். படிப்பது வேறு பாடுவது வேறு என்று நீங்கள் வாதிடலாம்.  இரண்டும் அந்தக் காலத்தில் ஒன்றுதான்.  பாட்டுப் பாடு என்பது பாட்டுப் படி என்றாலும் அப்பொருளே தரும். அப்போதெல்லாம் நம் மொழி பாடும் மொழியாகவே இருந்தது.   எல்லா வாத்தியார்களும் தங்கள் பாடங்களைப் பாடியே கற்பித்தனர்.    படி+ அம் = பாடம் என்று கூறப்படினும் அங்கனமின்றி பாடு+அம் என்றாலும் பாடம் என்றே வருதல் காண்க.  பேசு + ஐ = பேசை > பாசை > பாஷை என்றாலும்   பாடு+ ஐ = பாடை> பாஷை என்பதும் பொருந்தியே வருகிறது.  தாயும் மகளும் என்றாலும் மகளும் தாயும் என்றாலும் ஒன்றுதான் என்று கூறுவது இதற்கு சரியாகிறது. இவையெல்லாம் இருபிறப்பிச் சொற்கள் என்றே கொள்ளவேண்டும்.  நிற்க, முருகனைப் படி என்பதில் பாட்டுத்தான் பாடச் சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வோம். எதுவாயினும், வேற்றுமொழிக்கு ஊட்டமாகும்போதுபடி என்பதைப் பஜி என்று மாற்றி

முருகனைப் பஜி மனமே --  திருமால்
மருகனைப் பஜி மனமே

என்பதும் அழகாகவே உள்ளது.   படி  பஜி  அயற்செலவு உருவத்தை ஆராதிப்பீர்களாக.  பஜி என்பதிலிருந்து  பஜி+அன் + ஐ என்று இணக்குவித்து, பஜனை என்று புனையலாம்பஜி+அன் =  பஜன் என்று வனையலாம். எல்லாம் அழகாகவே உள்ளது.

தொல்காப்பியர் சும்மா சொல்லவில்லை.  வலிக்கும்வழி வலிக்கலாம்; மெலிக்கும்வழி மெலிக்கலாம்.  எப்படிச் செய்தால் சொல் அழகாய் அமையுமோ அப்படியே செய் மனமே.  நெடிது வாழ்வாய்.

இந்தமாதிரி தந்திரங்களையெல்லாம் சீனர்களிடமிருந்தோ கற்றனர். நம் சங்கதத்திலும் சீனச்சொற்களும் உள்ளனவே!
 Note:
After writing and completing a draft post the
writer reads through and makes certain changes and
saved them. After posting the computer is switched off. 
When the computer is restarted several hours later 
it is surprising to find  all edits missing and the
unedited version reappearing.  A virus or bug
is performing this unwanted service and increasing our
workload.
Now we have edited again.