வியாக்கியானம்
என்ற சொல்லைப்பற்றி இன்று உரையாடுவோம்.
உரையாடுமுன்,
இது சமஸ்கிருத வழக்குடைய சொல் என்பதை யாம் தெரிவிக்கவேண்டியதில்லை. வியாக்கியானம் எனின் விளக்கம். தெரிந்திருக்க வாய்ப்பில்லாத
ஒரு சொல்லைப் பயன்படுத்தி அதை வழக்குக்குக் கொணர்வோம் என்னும் நோக்கில் திகழ்த்துதல்
என்ற சொல்லையும் சென்ற இடுகையில் புழங்கியிருந்தோம். இவ்வளவு விரைவில் அதை மறந்திருக்க
மாட்டீர்கள் என்னும் துணிபுடையேம்.
வியன்
என்பது ஒரு தமிழ்ச்சொல். “விரிநீர் வியனுலகத்துள் நின்று உடற்றும் பசி “ என்ற திருக்குறள்
தொடரை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். வியன்
என்றால் அகன்ற, விரிந்த என்று பொருள். குறளின்
கருத்துப்படி இவ்வுலகின் கடல்களும் மிக விரிவானவை. ஆகவே விரிநீர் என்றார். உலகம் கடலை உள்ளடக்கியது; எனினும் அதுவும் மிக்க
விரிந்ததே என்னும் பொருளில் வியனுலகு என்றார் ஐயன் வள்ளுவனார். ஆக விய என்ற அடிச்சொல்லை
மறக்கலாகுமோ?
பெரும்பாலான
பாம்புகள் மூன்றடி நான்`கடியே உள்ளனவென்றால் நீங்கள் 20 அடி நீட்டப்பாம்பைப் பார்த்ததாக்ச்
சொன்னால் அதைப் பலரும் வியப்பாகவே கேட்பர்,
கேட்கும் அல்லது நடக்கும் நிலைக்குத் தக்கபடி, பெரிது என்றால் வியப்பர் அல்லரோ?
இப்போது
விய > வியப்பு என்பதன் பொருள் உங்களுக்கு வெட்டவெளிச்சமாகியிருக்கும்.
விய
> வியன்.
விய
> வியப்பு
எனவே
இது விரிதற் கருத்து என்பதைப் புரிந்துகொண்டிருக்கலாம்.
விய
> வியா என்று நீளும்.
ஒரு கடை
ஓரிடத்திலிருந்து செயல்படாமல், நடமாடும் கடையாக
இந்த ஊர், அந்த ஊர், அதற்கடுத்த ஊர் என்று விரிவாக விற்றல் செய்யப்பட்டால் அதுதான் முன்னாளில்
வியாபாரம். வியா= விரிவு. பர+அம் = பாரம் ஆகும். பரந்து செல்லுதல். இது பளு என்றும் பயன்படும். பார் என்ற உலகு குறிக்கும் சொல்லும் பரந்ததாகிய
பூமி என்று போருள்படுவதே. பரந்து விரிந்து செய்யப்படும் வணிகத்தை வியாபாரம் என்றாலும்,
நாளடைவில் சொற்பொருளை மறந்து, ஓரிடத்திலேயே செய்யப்பெறும் வணிகத்துக்கும் வியாபாரம்
என்றே சொன்னபடியால் அச்சொல் அதன் சிறப்புப் பொருளை இழந்ததுடன், அது நம்ம வீட்டுப் பிள்ளை
என்ற உணர்வு மாறி அடுத்தவீட்டுப் பிள்ளைபோலும் கருதப்பட்டதும் உண்மையாகும்.
உடலுக்குள்
உள்ள நீர் உள்ளேயே இருக்காமல் வெப்பத்தின் காரணமாக் வெளிப்பட்டு தோலின் மேற்பரப்பில்
பரவுமானால் அது வியர்வை ஆகிறது. விய என்பதை
மறக்கலாகுமோ?
தக்கபொருள்
எங்கும் பரவுமானால் பயன்படலாம். பால்போன்றவை தரையில் ஒழுகிப் பரவுமானால் எப்படிக் குடிப்பது? சில பொருள் இருக்குமிடத்தில் இருந்தாலே பயன். பரவினால் பயனில்லை. பெண்ணும் ஓரிடத்து அடக்கமாய்
இருந்தால் அது பயன். அது தவறினால் பயன் கேடு.
ஆகவே விய> வியர்க்கம் என்ற சொல்லும் பயனின்மையைக் குறித்தது.
இனித் திறன் என்பது திறல் என்று வருதல்போலவே வியன் என்பது வியல் என்றும் தோன்றும். கண்டு மலைப்புறாதீர். அங்குமிங்கும் ஓடி வேலைசெய்வோன் வியலன்; பயணம் போவோனும் வியலன். வியல் என்ற சொல் பகுதியாதல் அறிக.
விர்>
விய் > விய> வியா; விய் > வியல்
> வியன்.
விர்>
விரி.
இனி வியாக்கியானம்
காண்போம்.
விய ஆக்கிய
ஆன் அம். ஆன் இடைநிலை, ஆன என்பதன் இடுதிரிபு.
மீண்டும்
சந்திப்போம். அளவளாவுவோம்.
Beware of extra dots inserted by
this software. Pl read cautiously.
Will edit.
Beware of extra dots inserted by
this software. Pl read cautiously.
Will edit.
This post has been hacked. We have corrected the induced errors found in
the text. Please report if they reappear or are re-induced.
If a post can be hacked, then it has "bitten".