புதன், 14 மார்ச், 2018

தீரம் தீவு கரை



தீர் (வினை):  தீரம், தீவு முதலிய.

நிலத்தின் வழியாக ஒரு கடற்கரைக்குப் புறப்பட்ட ஒருவன்  அங்கு போய்ச் சேர்ந்தவுடன்,  நிலம் தீர்ந்து கடல் தொடங்குதலைக் காண்கிறான். கடல் கரையிலிருந்தே தொடங்குவதாக அவனுக்குத் தெரிகிறது. கடல் தொடங்கிய இடத்தில்தான் நிலமும் முடிகிறது.  ஆகவே  கரையை அவன் “தீரம்” என்பது மிக்கப் பொருத்தமான சொல்லமைப்பு ஆகும்.

உலகில் முன்னாளில் கடலைப் பார்க்காமலே செத்துப்போனவர்கள் பலர்.  கடலை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று போய்க் கடலைக் கண்டு இறும்பூது எய்தியோரும் பலர். அந்த நீரில் கொஞ்சம் குளித்துவிடலாம் என்று இறங்கி மூழ்கி இறந்தோர் பலர். கடல் கரையை அரித்து நிலப்பகுதியைக் குறுக்குகிறது என்பதைச் சிங்கப்பூரில் அறிந்துகொண்டு  கடலுக்கு நல்ல கரையை அமைத்து,  கரைக்குக் காரையிட்டுக் கரையையும் பாதுகாத்தனர்.  கரை, கரை, கரை!  கரைந்து குறைந்து போவதை உடையதே கரை ஆயிற்று.
ஆற்றின் நிலப்பகுதி தீருமிடம் தீரம்.
அது கரையுமிடம் கரை.

  தீரம் என்பது தீரும் இடமால்
தீராக் கரையாய்த் தீர்ப்பது கடனே.

சுற்றிலும் கரையாய், தீரமாய் இருந்துவிட்டால்,  நிலம் அத்துடன் தீர்ந்துவிட்டது என்று பொருள். கடலடியிலும் நிலம் இருந்தாலும் அதை நிலமென்று வாங்க யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் அடித்துக்கொள்ளவில்லை.  சீனா எனின் தென்சீனக் கடலிலும் ஒரு தீவினை உண்டாக்கும் வல்லமை படைத்த நாடாம்.

சுற்றிலும் முற்றிலும் நிலம்  தீர்ந்துவிட்ட ஓரிடத்தைத்  தீர்வு என்று குறித்தது தீர புத்தியே ஆகும்.  அது இயற்கைத் தீர்வு.  பின் இடைக்குறைந்து தீவு ஆயினது தீர்வே ஆகும் தில்லுமுல்லு அன்று.

தீர்  > தீர்வு > தீவு.  (   இடைக்குறை).

தீரம் ஓர் அழகிய சொல்லே.  இல்லாவிட்டால்  கபீர்தாஸ் ஏன் அதை இட்டுப்
பாடுகிறார்:

“மந்தஸ மீரே ஏ ஜமுனா தீரே!!”

மனிதர்களில் சிலர் உலகச்சேவை செய்கிறார்கள். சிலர் நாட்டுச் சேவை புரிகிறார்கள். இன்னும் சிலரோவெனின் வீட்டுச்சேவையில் வியன் திறன் விளைக்கின்றனர்.  சொற்களும் விலக்கல்லவே விதி இதற்கு.

Please do not pronounce thIram and thIvu as dhIram and
dhIvu when speaking Tamil. 




ஆக்கின்ஸ் அறிவியலறிஞர் மறைவு.

அறிவியலார் ஆக்கின்சும் அகிலம் நீத்தார்.
நீத்தலின்முன் யாத்தநூல்கள் அறிவூற்றுக்கள்.
தெரிவியலால் தேர்ந்தபலர் சூழ்ந்து போற்றித்
திறம்கண்டு சிரம்தாழ்ந்தே அறிவைப் பெற்றார்.
உருவுடைய உலகம்வான் வெளியென் றெல்லாம்
ஓவாதிவ் வுலகிற்கு யாதென் றாய்ந்து
நிறைவுறவே போதித்த ஆசான் சென்றார்
நெஞ்சார இரங்கலுமே விஞ்ச லேச்சே.

http://www.bbc.com/news/world-43395807 

செவ்வாய், 13 மார்ச், 2018

உடும்புக்கறி கேட்டாளோ தலைவி?



ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் .....................(275)
 

இறையனார் அகப்பொருள் உதாரணப் பாடல்.

 கன்றே அமையும் என்றது:  கன்றைத் தலைமகள் உண்ணும்பொருட்டுத் தலைவன் தந்துசென்றான் என்று கொள்வதாயின், வந்தவன் அமையும் என்று சொன்னது, தலைமகளுக்கு வேறு உணவுகளும் வேண்டும் என்று கேட்டதுபோலவும் ஆனால் கன்றை மட்டும் உண்க; அது உனக்குப் போதும் என்று அமைதிப்படுத்துவது போலவும் வருகிறது. இது பாடலை முற்றும் கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.   தலைவி வீட்டினர் யாவரும் சாப்பாட்டுத் தடியர்களா என்ன? மாட்டுக்கறி உண்பவர்களா? வேறு உடும்புக்கறியும் வேண்டுமென்றாளோ தலைவி?

இதுவா பிரிவுத் துன்பத்தை வெளிப்படுத்தும் விதம்?

 கன்று  உணவுக்குத் தரப்படவில்லை என்பது தெளிவு.