வடகிழக்கு இந்தியாவிலும் வாகை!
சிறந்த தலைவருள் சீரால் உயர்ந்தார்
விரைந்தவர் பால்செல வேண்டி விழைந்தவர்
நாட்டில் பலரே நயம்பயில் பெண்டிர்க்கு
வீட்டின் நலங்களைக் கூட்டியே தந்தவர்.
தேயம் கெடுக்கிற தீயது பொய்ப்பணம்
மாய ஒழித்த மதிசேர் மகுடம்
தலையலங் காரம் நிலைபெய
ராத
சிலையெனச் சீர்த்த வலம்பெறு மேன்மையர்.
இந்து நிலங்களில் இன் கொடி நாட்டினர்
பிந்திப் பிறமா நிலங்களில் நீட்டி
அனைத்துத் தரப்பும் அரியராய் ஏற்க
நினைத்த படியே நெட்டொளி வீசினர்.
நேர்மைக் குணங்கள் நிலைபடு சிந்தனை;
கூர்மை அரசியல் பண்புகள் கொண்டார்
பெரும்பழ இந்தியா சிங்கையைப் போலும்
உரியன செய்ய உயர்வழி காட்டும்
தலைமை அமைச்சுந ரேந்த்ரக்
கலைசார் மோடியில் மக்கள் மயக்கமே.