இப்போது ஒரு சொல்லை ( "அகண்" என்பதை ) அணுகி ஆய்வோம்.
இச்சொல் இப்போது பேச்சு வழக்கில் இல்லை. யாம் பேச்சில் என்று
குறிப்பிட்டால், அது ஏறத்தாழ 50 ஆண்டுகட்குமுன் வழங்கியதாக
நம்பப்படுவனவற்றையே குறிக்கும். இன்றையப் பேச்சுவழக்கில் என்று
எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களே விரவி வருகின்றன. ஆக ஆங்கிலத்தையா ஆராய்வது?
அகண் என்பதில் "கண்" இடம் என்று பொருள்படும். அதன்கண், இதன்
கண் என்று வரும் இலக்கியவழக்குகளில், அவ்விடத்து, இவ்விடத்து
என்று பொருள்படுகின்ற நிலையில், கண் என்பது இடம் என்பதை
உணரலாம். முதற்கண் வணக்கம் என்ற தொடரில், முதலிடத்ததாக
என்று பொருள்.
ஆயிடை என்பது அவ்விடத்து என்று பொருள்தரும். இது குறுகும்போது அவ்விடை, அவ்விடம் என்று வரும். ஆ என்பது
அ என்று குறுகுதல்போல், ஆகண் என்பது அகண் என்று குறுகிற்று.
இதில் கவனிக்கத்தக்கது, ஆ+கண் > அகண் என்று வர, அக்கண் என்று வலிமிகவில்லை.
சொல் படைப்பில், வலிமிக்கும் வரலாம். வலி மிகாதும் வரலாம்.
வலி என்பது வல்லெழுத்து.