பவர் ஐயர்
( Rev Dr Henry Bower . D.D. ) என்ற
ஆங்கிலப் பாதிரியார் 1848
வாக்கில், நன்னூல்
இலக்கணத்தின்பால் கொண்ட
பெருமதிப்பினால், அதனை
ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து அச்சிட்டார்.
இது ஜெர்மனியில்
வெளியிடப்பட்டது.
இவர்
தமிழில் வல்லவராக விளங்கினார்.
இவருடைய ஆசிரியர்
ஒரு தமிழ்ப்புலமை வாய்ந்த
சமண முனிவர்.
இவர் சி ந்தாமணியை
நச்சினார்க்கினியர் உரையுடனும்
அச்சிட்டு, 1857ல்
வெளியிட்டார்.
பதமஞ்சரி
என்ற பெயரில் ஆங்கிலச் சொற்கள்,
தமிழ்ச் சொற்கள்
இவற்றைத் திரட்டி எழுதிப்
பொருளுடன் வெளியிட்டார்.
கிறித்துவ
சமயத்தைத் தமிழர்களிடம்
பரப்புவதற்காகத் தமிழ்ப்
படித்த
இவர்கள்,
கிறித்துவ நூல்களுடன்
தமிழையும் வளர்த்துள்ளனர்.
ஒன்றும்
செய்யாத
தமிழர்களைவிட இவர்கள் அதிகமே
செய்துள்ளனர்.