திங்கள், 5 செப்டம்பர், 2016

வனதாய் > வனிதை. காடு வனம் & கொடுந்தமிழ்

காடு என்பது காக்கப்படுவதாகிய மரங்கள் செடிகள் கொடிகள் அடர்ந்த இடம்.

கா (காத்தல் )  >  காடு.  (டு விகுதி).

ஒப்பு நோக்குக:  மா >  மாடு.  மா‍ = விலங்கு;  மாடு: ஒரு குறிப்பிட்ட‌
விலங்கு;  ஆக்கள்.

கா> கான் > கானம் > கானகம்.   (காடு).

கடு > காடு.  முதனிலை நீண்டசொல்.   கடுமையான (கடத்தற்கரிய இடம்)

கடு > கடம்.  (வேங்கடம்).  கடத்தற்கரிய வெம்மை மிக்க இடம்.

 வல் > வன்  (லகர  னகரத் திரிபு.)

வன் > வனம்.   காக்கப் படும் இடமாகிய காடு.

வனப்பு >  அழகு.   வனம்+ ஆம் + தரம் =  வனாந்தரம்.  (காடு என்னும்
தரமுடைய இடம்).  வனம் ஆகும் தரம்.  ஆகுபெயராய் வனம் குறித்தது.

வனப்பு > வன + தாய் >  வனதா > வனிதா.  

இங்கு அழகு குறிக்கும் வன என்ற அடி வனி  என்று திரிந்தது.

வனதாய் > வனிதை. வலிமிகாச் சொற்புனைவு.

செந்தமிழில் வனத்  தாய் என்று வரவேண்டும் .  கொடுந்தமிழில் வனிதா என்று திரிந்தது.  கொடுந்தமிழில் திரியும்.   கொடு  = வளைவு . கொடுந்தமிழ் = வளைந்த தமிழ் .   ஆயினும் தமிழே.  கொடுந்தமிழ்  மேலும் திரிந்து பாகதங்கள் ஆயின.

காடு வனம் & கொடுந்தமிழ்

அவனி அழகிய தோட்டம்

அவனி என்ற சொல்லைப் பார்ப்போம்.

அவம் =  கெடுதல்.  அவிந்து கெட்டது அவம்.
நி =  நிற்பது.  நில் என்பதன் கடைக்குறை.  நி =னி.

ஆக,மனிதன் இறைவனை அடையக் கெடுதலாக முன் நிற்பது இவ் அவனியாகும்.

இன்னொரு பொருள்:

 அம் > அ.   அழகு.   அ: முதலெழுத்துமாகும்.

வனம் =  அழகு.  வனப்பு = அழகு.

 வனம்  > வனி.   அழகு. பெருந்தோட்டம் அல்லது காடு.    இவற்றை உடையது உலகு.

அவனி =  அழகிய தோட்டம் அல்லது வனம்.

ஆக, இருபொருட் சொல்.

சிக்காவொரு கொடுநோயாம்......

உச்சத்து நாகரிகம்
எத்திக்கும் புகழ்பரப்பி,
மெச்சப்பல அருஞ்செயல்கள்
மெத்தத் திறமையொடு
நிகழ்த்திய சிங்கையிலும்
சிக்கா நோய் நுண்மம்
அகத்துப் புகுந்ததுவே
அஃதொரு பெருவியப்பே!
பரப்பும் கொசுக்களையே
இறப்பில் இடுமுயற்சி
இறப்பக் கடினமேனும்
சிறப்ப அமைதல்வேண்டும்.
சிக்காவொரு கொடுநோயாம்
எக்காலும் அதனுறவே
ஓக்காதே ஒழிந்திடுக.
கொசுக்களின் இனத்தினையே
நசுக்கியே நலம்பெறுக!