ஞாயிறு, 5 ஜூலை, 2015

கடக இராசி :Crab and its qualities

கடக இராசியில் பிறந்தவர்கள்  துணிச்சலும் திடமனமும் உடையவர்கள் என்று கணியர்கள் (சோதிடர்கள்) கூறுவர்.  திடமும் திறமும் உடையாரை எளிதில்  கடந்துவிட இயலாதன்றோ?

நண்டு என்ற  உயிரி,  கடினமான ஓட்டினுள் வாழ்கிறது.   ஓடு கடினமானது;  அந்தக் கடு வெளி  ஓட்டின்  அகத்து (உள்ளே)  அது வாழ்கிறது.  எத்துணை கடின ஓடாயினும் அதை மடக்கிப் பிடித்து மனிதன் உண்டுவிடுகிறான் என்றாலும்,  இதனால் ஓடு கடுமை என்பதும் அகத்தே நண்டு வாழ்கிறதென்பதும் மறுத்தற்கொண்ணாத உண்மைகளே.

கடு+  அகம் = கடகம்.

இங்ஙனம் நண்டுக்கு மற்றொரு பெயர் அமைந்தது.  இது மிக்கப் பொருத்தமாய் அமைந்த பெயராகும்.

கட + அகம் :  வென்று உட்புக அரியது என்றும் பொருள்.

கடம்:  <  கட.

இதனை வேங்கடம் என்ற சொல்லுடன் வைத்து நோக்குக.

கடத்தல் - வெல்லுதல் என்றும் பொருள்படும்.

கடக  இராசி 

வியாழன், 2 ஜூலை, 2015

போருக்குப் புறப்படுமுன் .........

அரசன் ஒருவன்  போருக்குப்     புறப்பட எண்ணுகின்றான்.  அவன் என்ன செய்யவேண்டும்?  இதற்கான விடை யாரும் அறிந்ததுதானே! "போருக்குப் புறப்படுங்கள் " என்று உரத்த குரலில் கட்டளையிடவேண்டும். திரைப்படங்களில் அப்படித்தான் காட்டுவார்கள். காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்குக் கட்டளை யிட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

சிறந்த போர்க்கலை மன்னர்கள், பல முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். அதிலொன்று படைகளைப் பலவிதத்திலும் தயார்ப்படுத்துவது. அதில் ஒரு "விதம்": வரிசையறிந்து படையுறுப்பினர்களுக்கு விழுமிய பொருள்பல வழங்கிச் சிறப்பிப்பது.

முன் போரில் பல வெற்றிச் செயல்கள் புரிந்து தன் நாட்டுப் பற்றையும் அரசுப் பற்றையும் மெய்ப்பித்தவர்களுக்குச் செயல்தகுதிக்கேற்பப் பொருள்வழங்க வேண்டும்.  இதைத்தான் "வரிசையறிந்து" என்று சொன்னோம்.
பொருளுடன் பட்டம், பதவி முதலியவும் வரும்.

மறவர் சிலருக்குக் குதிரைகள் கிடைத்தன.  வேறு சிலருக்கு யானைகள்.
நிலங்கள் பரிசாகப் பெற்றோரும் உண்டு. இன்னும் சிலருக்குப் பொன்னும் மணியும். இப்படிப் போருக்குமுன் அளிக்கும் நிகழ்வுக்குத்  "தலையளி" என்றனர். அளிக்கும் மருத நிலத்துக்குத் "தண்ணடை" என்று பெயர்.

இதைக்கூறும் பாடலைத்  தும்பைத்திணை, தும்பை அரவத் துறை என்று வகைப்படுத்துவார்கள்.

பொன் புனைந்த கழலடியோன் 
தன்படையைத் தலையளித்தன்று.

என்பது கொளு. தலையளித்தன்று = தலையளித்தது .( புறப் பொருள் வெண்பாமாலை .)

சிவ பெருமானே முப்புரம் எரிக்கப்  ( போருக்குப்) புறப்படுமுன் புறப்பொருள் இலக்கணப் படி செய்வன செய்துதான் புறப்பட்டாராம்.    

அத்தகு சிறப்பு உடையது தமிழனின் புறப்பொருள் இலக்கணம். (என்பர் புலவர் )







திங்கள், 29 ஜூன், 2015

Why Sanskrit is Indo-European?

மொழி நூலறிஞர் சட்டர்ஜியின் ஆய்வுமுடிவின் படி, சமஸ்கிருதம் திராவிடமொழிகளின் ஒலியமைப்பையே உடையது.   மேலை நாட்டு மொழிகளில் ஒலியமைப்பை எவ்வகையிலும் ஒத்திருக்கவில்லை. இந்நிலையில் உங்கள் மனத்தில் என்ன கேள்வி எழவேண்டுமென்றால். அது எப்படி ஐரோப்பிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழி ஆனது என்பதுதான்.

மேலை நாட்டு மொழிகள் அளவிறந்த இந்தியச் சொற்களைக் கடன்கொண்டுள்ளன. சமஸ்கிருதத்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்றால்,   கடன் என்பதை நல்லபடியாக மறைத்துவிடலாம். தாய்-சேய் உறவு கற்பித்து,  கடன்  என்பது பிள்ளைகட்கு  பிற்காலத்தில் விட்டுச் செல்லும் விழுநிதியம் போல் ஆகிவிடும்.

தமிழில் போலவே  சமஸ்கிருதத்திலும் அ-  ஆ;  இ- ஈ; உ- ஊ; ஏ;  ஐ:  ஒ- ஔ  என்று வருகிறது .(  இடைநின்ற  ரு - ரூ - லு, பின் வரும் அம் ஆகியவை தவிர்க்கப்பட்டன. ) இவை தமிழ் நெடுங்கணக்கில் ,  அம் தவிர,  வேறு வரிசையில் வருபவை என்றாலும், மேலை நாட்டு மொழிகளில் வேறிடங்களில் உள்ளவைதாம்.

உரோமன் நெடுங்கணக்கில் ஏ-பி-சி-டி என்றல்லவா வருகின்றன?  ஐரோப்பியச் சேய்களெல்லாம் ஏன் சமஸ்கிருதத் தாயைப் பின்பற்றவில்லை? கிடைத்த சொற்களைமட்டும் வாரிச் சுருட்டி வைத்துக்கொண்டார்களோ?

மொழியில் உறவு கொண்டாடி  இந்தியாவைத் தம்வசமே வைத்துக்கொள்ளவும் திருட்டை மறைக்கவும்  இது ஒருதந்திர நடவடிக்கைதான்.  மொழியாய்வு முடிபுகள் தங்கிவிட்டன; இந்தியத் துணைக்கண்டம் கைவிட்டுச் சென்ற தோல்வியே அவர்களுக்கு மிஞ்சியது.

தமிழை ஐரோப்பியத்தின்  தாய் என்று சொல்லப்  போதுமான சொற்கள் கிடைக்கும்.  முன்பு  இணையத்தில் ஒருவர் ஆய்வு செய்து  இதை  வெளியிட்டிருந்தார்.  அப்படி இருந்தும்  ஏன்  தமிழை அணைத்துக்கொள்ளவில்லை?    அப்படி  அணைத்துக்கொண்டால்  ,  அதில் வெள்ளையர் அரசுக்கு என்ன அரசியல் ஆதாயம் கிட்டி  யிருக்கக் கூடும் ?  தமிழிலிருந்து  வெள்ளையருக்கு  எந்தப்  பயனும்  கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது.