திங்கள், 30 மார்ச், 2015

Sleep: "Niththirai"

உறக்கம் என்பது  அலை அலையாக வருவது.

ஓர்  அலை வருகிறது.  அதில் அமிழ்ந்து உறங்குகிறீர்.  ஆழ்ந்த உறக்கம்  சற்று மாறி  இன்னோர் அலை வருகிறது.  மீண்டும் உம்மை  அழுத்துகிறது.  அதில் அமிழ்ந்து தொடர்ந்து தூங்குகிறீர்.  இப்படிப் பல் அலை அமிழ்வுதான் உறக்கம் ஆகும்.

இப்போது நித்திரை என்ற சொல்லைக் காண்போம்.

நி என்பது நில் என்பதன் கடைக்குறை.   நில்>   நி.   திரை என்பது அலை என்று  பொருள்படும்.  அது ஒரு விகுதியுமாகும்.

நி + திரை = நித்திரை.

நில் + திரை =  நிற்றிரை > நித்திரை  எனினுமாம்.

இதன் பொருள் ,  "நிற்கும் அலை " என்பது:  அலையாக வந்து உறக்கத்தில் அமிழ்த்தி  நின்றுவிடுகிறது.   நிற்றலே உறக்கத்தின் தொடக்கம்  அல்லது தொடர்தல்.   Sleep comes in circles  என்று  பிறரும் கூறுவர்.    இதை நம் முற்கால மனிதரும்  உணர்ந்திருந்தனர்.  அதனால்தான் இச்சொல் இப்படி அமைந்துள்ளது.

தமிழில் உள்ள சொற்கள் சிலவற்றை ஆய்ந்தால்  பிறமொழியில் புரியாதது
புரிந்துவிடுகிறது  என்று ஸ்ரீ  அரவிந்தர் சொன்னதன் உண்மை இப்போது புலனாகும்.

நீங்கள் அங்கிருப்பதாகவே நாங்கள் சொல்வோம்

வீடு  கட்டிக்கொடுத்தார்,  வீதி  போட்டுக் கொடுத்தார்,  காடு அழித்துக் கால்பந்துத்  திடல் அமைத்தார்,  கழனியே இல்லாத நாட்டில் கால்வயிறு என்று யாரும் கழறாமல் முழு நிறைவான உணவு கிடைக்க முன்னுரிமை தந்தார்,  போக்குவரத்துத் துறையில் புதுமைகள் செய்தார்,   தாக்கும் வெயிலைக் குறைக்கத்  தக்க மரங்கள் நட்டுப்  பூக்கும் அழகுப் பூந்தோட்ட நகரம்  நிறுவினார்,   ................(இத்யாதி  இத்யாதி...)   அவர்  செய்து முடித்தவை எல்லாம்  அடுக்கி எழுத,  இந் நாள்  போதாது;  பன்னாள்  வேண்டும்..

ஆனாலும் இவையெல்லாம்  இங்குள்ள மக்கள் சொல்பவைதாம்.   அவர்தம் பன்முகப் புகழில் ஒரு பகுதிதான்.  அவர் அரசியல் அறிஞர். அதை முழுமையாகப்  பேச , நமக்கும்  அரசியற் கலையும்  உலக அரசியலும் தெரிந்திருக்கவேண்டும்.

உலக அரசியலில் அவர் மன்னன்.

இப்போது அவர் மறைந்துவிட்டார்.   அவர் கருத்துப்படி,   அவர் மறைந்தபின் அவர் இல்லை. அவர் மனைவியும் இன்றில்லை.  சொர்க்கம்  நரகம் கடவுள் 
என்பவை  அவர்தம் அக்கறையில் இல்லை.  இதில் சிலர் மெத்த வருத்தம் கொள்கின்றனர்.  "  உங்கள் தொண்டுள்ளத்திற்கு  நீங்கள் சொர்க்கவாசியாய் இருக்கவேண்டும்; "  என்கின்றனர். " நீங்கள் இல்லை யென்றாலும்  நீங்கள்  அங்கிருப்பதாகவே நாங்கள் சொல்வோம் "  என்று சிலர் தெளிவாகச் சொல்கின்றனர். ...............

வெள்ளி, 27 மார்ச், 2015

Tamil for vinegar and sandpaper.

பத்தசாரம் -   சீமைக்காடி.  ( English:  vinegar ).

பட்டச்சீலை   -   sandpaper.  ("மணற்காகிதம் ")


If there are other translations of these product names, please share with us. (Pl  use the comments feature ).

Preceding generations of Tamils might have had Tamil names for these products  but these may have fallen into disuse.  Should we not search, collect and bring them into use again?