திங்கள், 27 அக்டோபர், 2014

வாஸ்து

வாயிலும் (வாசலும்)சுற்றும்  (மேல், கீழ், பக்கச் சுவர்கள்) யாவும் ஒரு வீட்டுக்கு முறைப்படி அமையவேண்டும்.இடர் தருவதாக இருத்தலாகாது.

வாயிலும் சுற்றும் > வாயிற் சுற்று  > வாசுற்று >  வாஸ்து என்றானது.

இவை  போல்வன  வழக்கமான திரிபுகளே.  

உயர்த்தி  >  ஒசத்தி  >  ஒஸ்தி . என்னும்  திரிபைக் கவனத்தில் கொள்ளவும்

அந்தச் கற்று >  அந்தச் சுத்து  > அந்தஸ்து.  அந்த என்பது   அரசனைக் குறிக்கும் கமுக்கக்  குறிப்பு.  பின்னர்   மேன்மக்களாகிய பிறரையும் குறித்தது.

இதேபோல் அந்தப்புறம் > அந்தப்புரம்.   அரசனின் அலுவலறைக்குப்  புறமாகிய பகுதி.  .


ஞாயிறு, 26 அக்டோபர், 2014

காதல் உலகம்

எல்லையில் இந்தியா பாக்கிஸ்தானி‍‍‍===படைக்குள்
ஏற்பட்ட சண்டையில் இடர்கள் உண்டு.
நெல்லையில் கிட்டாது பசுமதியென் பதனாலே
நீயுண்ணத் தடையுண்டோ பாக்கின் அரி?

கொல்லையில் காய்த்திட்ட கத்திரி வெண்டைகள்
குழம்புக்குக் கிட்டாத் கோலம் நேர,
வல்லை நீ வாங்கினை சீனத்துக் காய்கறி
வைத்திட்ட சாம்பரில்  வான்மை கண்டாய்.

அழகான பாக்கிப்பெண் அவள்மேலே மெய்க்காதல்
அதனால்சேர் இந்து ஆண் திருமணத்தில்
முழங்காதோ இன்னிசை வாத்தியங் கள்பந்தி
முழுவதும் புன்னகை குறைகள் உண்டோ?

பாக்கின் = பாக்கிஸ்தானின்.

அரி  :   அரிசி .

வல்லை  =  விரைவாக 

பாக்கிப்பெண் =  பாக்கிஸ்தான் பெண்..

தும்பை : தானை மறம்

தும்பைத்  திணையில்  புலவர்  ஒரு வேந்தனின் படைப்பலத்தைப்  புகழ்ந்துரைப்பார்.  அதே பாடலில் பகை அரசானது வலிமையின்மைக்கும் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கும் தோல்விக்கும் அதனால் ஏற்படும்  கேட்டிற்கும் மனம் .இரங்குவார்  .

இதைக் கூறும் துறைக்குத்  "தானைமறம் "  என்று குறிப்பர் இலக்கணியர்.

(தன்னிகர் இல்லாத் தானை மறமே )
வேற்றானை மறங்கூறி 
மாற்றார் அழிபு  இரங்கினும்
ஆற்றின் உணரின்
அத்துறை  ஆகும். 
(ஓம்படுத்த உயர்பு கூறின்று.)  

இது கொளு. பிறைக்கோட்டினுள் உள்ளவை வேறு பாடலின்று தருவிக்கப் பட்டவை.

உயர்பு மட்டும் கூறினும் துறை அதுவாம்.

உருள் பெருந்தேர் ! வெல்லும் குதிரைகள்!  தலை சிறந்த மத யானைகள்!  வீரமிக்க மன்னனும் படை வீரர்களும்.  இந்தப் படையை வெல்ல வேறு உண்டோ  என்று பாடினால் .........தும்பைத் திணை ; தானை மறம் என்னும் துறை.

இப்பொருள் பற்றிய புறப் பாடல் வரின் கண்டின்புறுக.