சனி, 12 ஜூலை, 2014

ஆகாரம்

இது வெறுமனே  உணவு என்று மட்டும் பொருள்தரும் சொல் அன்று.
இதை உணர்ந்து கொள்ள வேண்டின்  ஆகு+ ஆரம் என்று பிரிக்கவேண்டும்.

ஆர்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்படும் .(வேறு பொருள்களும் உண்டு எனினும்  அவை இங்கு எழவில்லை.)

ஆர்+அம் =  ஆரம் .  = உணவு.

முன்  நிற்கும்  சொல்   ஆகு.  அதாவது ஆகுதல்.

உணவுக்கு ஆவது ஆகாரம். அதாவது   சாப்பிடக் கூடியது.

Not your regular food, but something that can be eaten in place of or as a supplementary food. Now the word is used only as referring to substitute or additional  food.  titbits.  The word "palam" has lost its meaning.
paza + AkAram  - pazakAram.
 > palakAram.

பழ(ம்) + ஆகாரம் = பழாகாரம்  > பலகாரம்.*

பழம் >  பலம்

இந்தச் சொல் சமஸ்கிருதத்திலும் சென்றுள்ளது.

ஊர்ப்பெயர் :ழ   > ல

(மாம்பழம் )> மாம்பலம்.

Some have tried interpreting as பல  +  காரம்.   பல  many ;   kAram as hot stuff.

----------------------------------------------------------------------------------------------------------------
* மறைமலையடிகள் 

வெள்ளி, 11 ஜூலை, 2014

காதற் கனவு

யாரேனும் வேண்டியவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்போதுதான் நம் சமையல் திறனை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது என்று சொல்லலாம். சுவையாக ஆக்கிப் பரிமாறி இன்புறலாம்.

வந்தது நல்ல கனாவாக இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். நம் இதயத்துக்கு கனியைப் படைத்து மகிழலாம்.  கொஞ்சம் பைத்தியம் வந்துவிட்டால் வாழ்வே சுவையாக மாறிவிடுகிறது.

தெய்வப் புலமைத்  திருவள்ளுவ நாயனாருக்கும் இத்தகு விருந்துகள் இயல்பானவையாகவே தோன்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பாட்டுடைத் தலைவி, தான் கண்ட இன்பக் கனாவுக்கு விருந்து வைக்க முற்படுதல்  கூடுமோ?

கனவில் காதலன் தூது விடுகின்றான். விழித்து எழுந்தவள், தனியே மஞ்சத்தில் இனிய கனவினால் உறக்கம் கலைக்கப்பெற்று, அதனை எண்ணி, இதற்கு என்ன விருந்து வைப்பேனோ வென்று சிந்தனைச் சுழலில் சிக்கிக்கொள்கிறாள். அதுதான் உண்மைக் காதலும் வள்ளுவனார் தந்த இலக்கியக் காதலும் ஆகும்.
அதை இப்போது கண்டு மகிழ்வோம்,

காதலர் தூதொடு  வந்த கனவினுக்கு
யாது  செய்வேன்கொல் விருந்து.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் பாடப்பெற்ற பாடல், உரை தேவையில்லாத அளவுக்கு இன்னும் தெளி நீராய் உள்ளது.

காதற் கனவு

-----------------------------------------

நல்ல கனவுக்கு விருந்து வைக்கவேண்டும்.

(இதை நான் வெண்பா அசைசீர் பிரித்து எழுதவில்லை. வேண்டின் நீங்களே வகையுளி செய்துகொள்ளுங்கள்.  குற்றிகர இலக்கணம் இப்போது வேண்டாம்

வியாழன், 10 ஜூலை, 2014

Our yesterdays Shakespeare translation. from Macbeth.

WILLIAM SHAKESPEARE (Macbeth V.v.)

மொழி பெயர்ப்பு :

(  இணைக் குறள் ஆசிரியப்பா )

நம் நெருந‌ல்கள் யாவும்
தீவட்டி  வெளிச்சத்தில் தெரியும்
கோமாளி மூடர் தம்மைக் கொண்டவை.
புழுதி மூடிய சாவுக்கு வழியே.
மெழுகுக் குறுந்திரியே! அணைந்திடு!
நிழல் நட  மாட்டமே வாழ்வு!
நிமிர்ந்தும் குனிந்தும் திரும்பியும் இசையோடு
இயைந்தும் தன்மணிக்கூ றொழித்துத்தொலையும்
நிலையா ஆடகத் தரமில் பாடகன்!
முட்டாள் வாயிற் கொட்டுபொய்ச் செல்கதை.
ஆங்காரம் ஓசை கூடினும்,
அவையே குறித்தவை அனைத்தும் வெறுமையே.

 நெருநல்கள்   yesterdays
புழுதி மூடிய -  dusty,
மெழுகுக் குறுந்திரி   brief candle
மணிக்கூறு  =  hour
ஆடகம் -  stage
செல்கதை  -  tale;