In this poem, I am telling a forum friend that I am just a butterfly and he being a fish, I cannot teach him how to swim (meaning, how to write certain poems). But I am flying at a good auspicious time... He was able to learn from other sources how to write a vanchippaa. "podimeen" refers to a young poet aspiring to learn.Butterfly refers to myself. If you still do not get the scenario, I will be pleased to explain further.
எண்ணியாங்கு பாடும் எழுபா வலர்கைக்குள்
வஞ்சி வடித்தால் வரும்.
மனம்போல் பாடல்புனைவீரே
விரைந்தே பாவகைகள் அறிந்தே...
உம்மனம் ஒன்றை நினைத்தால் - அதைத்
திண்ணமாகச் செய்து முடிப்பீர்,
உயர் கல்வி கலைகளில் முயன்றே
உண்மையாய்ப் பண்பினால்.....(மனம்போல்) -
பூச்சியொன்று பறந்தநேரம்
மீன்களுக்கு நல்லநேரம்;
ஆச்சுதென்று குஞ்சுமீனும்
ஆழநீரில் நீச்சலிடும்.
புதுவெள்ளம் இதுவென்று
பொடிமீனோ அஞ்சவில்லை.
நதி நீரின் ஓடுவேகம்
நழுவவில்லை கண்டபின்பும்,
இவை ஒரு இணைய நண்பருக்காக எழுதப்பட்டவை.
அவர் வீட்டு அடுக்களைக்கு வந்த எலியை அவர் நேசித்தார். அது எங்கோ போய்விட்டதாம். பின் ஒரு புறா அவர் வீட்டுக்கு வர, அதை விரும்பினார். அதுவும் பறந்து போயிற்று...பெரிய கவலையில் உள்ளார். அவரைத் தேற்றுவதற்கு.....
எலி சென்று மறைந்ததுவோர் ஏமாற்றமே
வலி நெஞ்சில் கரைந்திடவே வருமாற்றமே
என்றிருந்த நண்பருக்குப் புறவேற்றமே
சென்றமன மகிழ்வினையே மீளேற்றுமே,
இப்படியான் எதிர்பார்த்து நின்றபோதில்
இப்புறவும் பறந்ததுவோ இன்றுகாதில்
செப்பரிய துன்பியல்சேர் செய்திமாதே!
ஒப்பிடவே ஏமாற்றம் இனியொன்றேதே!
எனவாங்கு,
யானுமென் கவலை ஈண்டு பதிவேன்,
ஊணும் உறக்கமும் மீண்டு
காணும் நன்மை அனைத்தும் மீளவே.
புறவு = புறா. புறவேற்றம் - புறா வீட்டிற்குள் வந்து இருந்ததைக் குறிக்கிறது.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
புதன், 18 ஜனவரி, 2012
புதன், 19 அக்டோபர், 2011
எலிப்பாவம்
எலிப்பாவம்
(நகைச்சுவைக் கவிதை)
எலிக்கு உண்ண எதுவும் கிடைக்காதபடி எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பதாக நண்பர் ஒருவர் எழுதினார். அவருக்கு எழுதிய நகைச்சுவைக் கவிதை
எலிப்பாவம் பொல்லாத பாவம் முகமே
சுளிக்காமல் ஊண் ஊட்டு வீர்
தினமும் வரும் எலி தின்னாமல் போனால்
குணமில்லை கூடிவாழ் வார்க்கு.
கூடிவாழ் வார்க்கு.- for the family
(நகைச்சுவைக் கவிதை)
எலிக்கு உண்ண எதுவும் கிடைக்காதபடி எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பதாக நண்பர் ஒருவர் எழுதினார். அவருக்கு எழுதிய நகைச்சுவைக் கவிதை
எலிப்பாவம் பொல்லாத பாவம் முகமே
சுளிக்காமல் ஊண் ஊட்டு வீர்
தினமும் வரும் எலி தின்னாமல் போனால்
குணமில்லை கூடிவாழ் வார்க்கு.
கூடிவாழ் வார்க்கு.- for the family
வெள்ளி, 14 அக்டோபர், 2011
மங்கும்நன் மாலையே வா.
பாலை வனம்காண் பகலோன் எமன்நட்போ?
காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை
இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை
மங்கும்நன் மாலையே வா.
காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை
இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை
மங்கும்நன் மாலையே வா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)