திங்கள், 10 ஜூலை, 2023

கவிதை படித்தால் இருமுறை மகிழ்ச்சி

 நம் எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்தவர்கள் ஒரு திருமணத்தில் ஒன்று கூடினால் மகிழ்ச்சி அனைவர் மனத்திலும்.




புனைந்த கவிதை படித்து மகிழ்ந்தனர்

இணைந்த போது மணவிழ வொன்றினில்

அணைந்த படகினர் அடைந்த மகிழ்வென

நினைந்து மீண்டும் கவிதனைச் சூழ்ந்தனர்.

ஒரு கவிதை வடித்தோன்பால் அவன் கவிதையைப் படித்ததும் மகிழ்வு பிறக்கிறது. அதன்  பின் படித்தோர் எல்லாம் ய படகுப் பயணம் போல் தம் வாழ்க்கையில் சென்றுகொண்டிருப்பர்.  அப்புறம் கவிஞனை ஒரு மணவிழாவில் சந்திக்கிற  வாய்ப்பு  நேர்கையில் இன்னொரு மகிழ்வு தோன்றுகிறது.  அந்த இரண்டாம் மகிழ்வை இந்தப் படத்தில் உள்ள சுவைஞர்கள் காட்டி மகிழ்கின்றனர்.  அவர்களுக்கு நம் பணிவும் அன்பும் உரித்தாகுகின்றன.

இந்தக் கவிதையை அவர்களுக்குப் படைக்கிறோம். இதன் பின் எதிர்கொண்ட  ஓர் அம்மையாரும் எம் கவிதையைப் படித்ததைச் சொல்லி மகிழ்ந்தார்.   அவருக்கும் நன்றி நவில்கின்றோம்.

கவி -- கவிஞன்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செல்ல வளர்ப்பு மறைவு.


படத்தில் காணப்படுவது திருமதி  பா. ஷீபா  அவர்களின் செல்ல வளர்ப்பு,  இதைப் பன்னீ  ராண்டுகளாகப் பிள்ளை போல் காத்து வளர்த்து வந்தார். கடந்த மாதம் இப்பூனை முதுமையினால் மறைந்தது.  சுமார் $1500 வெள்ளி செலவு செய்து,  பூனை மற்ற விலங்குகளின் சிறப்பு எரியூட்டு நிலையத்தில் இது எரியூட்டப் பட்டது. பூசைகளும் செய்யப்பட்டன.  பூனையின் பெயர்: ஆஷ்லி ஆகும்.  திருமதி ஷீபா நம்  வலைப்பூங்காவின் கண்காணிப்பாளர் ஆவார்.  இவரிடம் நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆஷ்லியில் ஆன்மசாந்திக்கு  வேண்டிக்கொள்கிறோம்,




 

ஞாயிறு, 9 ஜூலை, 2023

உயிரா ஜீவனா பிறப்பா?

 இதை இழுத்துவிரிக்காமல் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்.

உயிர் என்பது முழுச்சொல்.

யிர் என்பது தலையெழுத்து நீங்கியது. இதனை முதற்குறை என்பர்.

யிகரத்தில் சொற்கள் தொடங்காமையின், மாற்றாக  இர் என்பதை இடுவோம்.  -யிர் என்பது உண்மையில் இர் தான்.  உ =  உள்ளே ;  இர் -  இருப்பது.  இர் என்பது இரு என்பதன் மூலம்.   யாரும் உள்ளே எந்தத் தொங்கலில் உயிர் உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல் எம்மிடம் இல்லை. உங்களிடம் இருப்பின் எம்முடன் பகிர்ந்துகொள்ளுதலை வரவேற்கிறோம்.

உய்  ( உய்தல்) என்பதை முதலாகக் கொள்வர் சிலர்.  ஆனால் உய் என்பதும் உகரச் சுட்டடிச் சொல்லே ஆதலால்  வேறுபாடு ஒன்றுமில்லை.

இர் என்பதன் பொருண்மையை இரை என்பதிலும் கண்டுகொள்ளலாம்


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் (குறள் 946)

இரை என்பது விலங்குணவு பறவை உணவு முதலியன குறிக்கும். கழிபேருணவினனை இங்குக் கழிபேரிரையான் என்று ஏனை உயிரினங்கள் உண்பனபோல் உண்பவன் என்ற பொருள்பட நாயனார் உரைப்பது சிறப்பு.

 இர் - இங்கிருந்து,  அ - அங்குவரை ,  அய் =  அகல இருப்பது. ஐ என்பதும் அது.  அகல அறிவும்  அகல ஆளுமையும் உடைய மனிதரைக் குறிக்க "ஐ" அடிச்சொல்லாய் வரும்.  " ஐயர் யாத்தனர் கரணம் என்ப"  என்ற தொல்காப்பிய நூற்பாவில் ( கற்பியல்  4 )  இச்சொல்லுக்கு இதுவே பொருள்.  இர் அ அய் > இரை,  ( கோழிக்கு இரை முதலிய உணவுகள் ),  இரைத்தல் -  வினைச்சொல்.  இ, அ, அ(ய்) -  இவை சுட்டடிகள். இடையில் அகரமின்றியும் உரைக்கலாம். இடையில் அகரம் புணர்த்திக் கெடுத்தல் பொருளுணர்வுக்கு முழுமை தரும்.

இர் என்பது  சிர் என்று திரியும். யிர் என்பது புணர்ச்சித் திரிபு,  யகர உடம்படு மெய் வந்துள்ளது, 

இதை  அமண் - சமண் என்ற திரிபில் அடக்கிவிடலாம்.  அகரமும் அதன் வருக்கங்களும்  சகரமும் அதன் வருக்கங்களாகத் திரியும்.  இங்கு எல்லாவற்றையும் காட்ட இடமில்லை.  பழைய இடுகைகளில் படித்துப் பட்டியல் மேற்கொள்க.

சிர் என்பது அதற்கு இனமான முதலுடன் ஜிர் என்றும் பின் ஜிவ் என்றும் திரியும்.

ஜிவ்  -- ஜிவ் + அன் >  ஜீவன்   முதனிலை நீண்டு தமிழுக்குரிய அன் விகுதியும் பெற்று  ஜீவன் ஆனது.  தமிழில் இது ஆண்பால் விகுதி.  வேறு மொழிகள் அவற்றை வெற்று விகுதிகளாக்கிக்கொள்ளத் தடை எதுவும் இல்லை.

தமிழிலே கூட இவ்வாறு அன் பொது விகுதியாக வரும்,

உயர்திணை நீங்கிய பிற அணியினவாய உயிர்கள் பிற அணிகள் அல்லது பிரா(அ)ணிகள் >  பிராணிகள்.  அகரம் தொகுந்தது. பிராணியை இயக்குவது அதன் பிராணன்,  இங்கும் அன் விகுதி வந்து அழகு செய்யும். கக்குவான் என்பது நோய்ப்பெயர்,  அதில் ஏன்  ஆன் விகுதி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்