வெள்ளி, 29 ஏப்ரல், 2022

சித்திரக் குள்ளனோ - சித்திரத்தில் கண்ணுற்ற குள்ளனோ?

 சித்திரக் குள்ளனென்ற சொற்றொடரைக்  கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெயர் "சித்திரம்"  என்ற தமிழில் வழங்கும் சொல்லையும்  நம்முன் கொணர்ந்து நிறுத்துகிறது.

இதன்மூலம் நாம் நினைப்பது என்னவென்றால்,  இந்தக் குள்ளன் சித்திரத்தில் வரும் குள்ளன் போன்று சிறியவனாய் இருப்பான் என்பதுதான்.

ஆனால் சித்திரத்தில் வருபவன், நாம் காணும் சித்திரப் படிகளத்தினை விடப் பெரியவனாய் இருந்துவிட முடியாது.  இந்தச் சித்திரத்தினோடு ஒப்பிடும் வெளியிற் கண்டு நாம் வியந்த குள்ளனோவெனின்,  உருவப் பருமை, உயரம் என இன்ன எல்லாவற்றிலும் வேறுபட்டிருக்கக் கூடும். 

சித்திரக் குள்ளனென்போன் உண்மையில்  சிறுதிறக் குள்ளன் >  சிறுத்திரக்குள்ளன் > ( இது இடைக்குறைந்து )  சித்திரக் குள்ளன் ஆனது.

சிறுத்திருகிற குள்ளன் என்று வாக்கியமாய் வரும்..

இன்னும் சில கேளிக்கைகளயும் சுட்டிக் காட்டலாம் என்று நினைத்தேன். நேரத்தை மிச்சம் செய்வோம்.

சிறுத்தல் என்ற வினையையும் உள்ளிட்டு விளக்குதல் கூடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

திங்கள், 25 ஏப்ரல், 2022

பயணத்தின் போது

(எழுசீர் விருத்தம்).


 மகிழுந்தில் போனாலும்  பேருந்தில்  போனாலும்

மகுடமுகி  தாக்காத  கவசமிட்டு,

நெகிழ்ந்துருகும் உறவுடனே உடன்செல்வ தென்றாலும்

நெட்டணிமை இல்லாத தொலைவு கொண்டும்

வகுதிண்மைத்  திட்டத்தில் நாட்டோடும் ஒன்றாகி

வருநோய்கள்  யாவினையும் வென்றுவாழ்வீர்

தொகுதியும தாவதென்(ன)  அடிப்படைகள் மிகச்சரியேல்

தூயநல  இன்வாழ்வும்   உமதாகுமே!


மகுடமுகி  -   கொரனா வைரஸ்

மகிழுந்து -   உந்துவண்டி 

பேருந்து  ----  பஸ்  என்னும் வாகனம்

நெட்டணிமை,   கிட்ட  இருப்பது,  தூர இருப்பது.  சரியான

இடைத்தொலைவு

தொகுதியுமதாவதென்ன -  நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் என்ன,

அடிப்படைகள் மிகச்சரியேல் -  நீங்கள் கடைப்பிடிப்பது சரி என்றால்

எல்லாம் சரியானால் இனிதாக வாழ்வீர்.


படத்தில் திரு மாசிலாமணி  ( எம் ஆய்வினர்)  பேருந்தில் பயணம் செய்கிறார்.




அறிக மகிழ

மெய்ப்பு:  பின்.


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

க ண்ணாடியிற் கண்டெடுத்த கவி

 முகம்தவிர வெளியுருவைக் காட்டும் ஆனால்

மிகுமுருவும் அதிற்காட்டிச்  சார்பும்காட்டும்! 

மனிதன் கண்ட பொருள்களிலே மாப்பொருள் என்றால்

தனிமேன்மை கொண்டதுகண் ணாடி என்போம்

மகிழ்கொள்ளக் கவிபாடத் தமிழே   போல

முகிழ்த்துவரும் கருத்துகளை  முன்சொரி கின்ற

உலகமொழி  ஒன்றிரண்டு  உண்டே  என்பேன்

எலாம்தந்த  இப்படமும் களிப்பீர் கண்டே.




படத்தில் தோன்றுபவர்:  அ.மா. மணி

கவிதை தந்தவர்:  சிவமாலா.

படத்துடன் கவிதை சுவைத்துமகிழ்வீர்/