புதன், 4 செப்டம்பர், 2019

கைவலி ( வெண்பா)

கணுக்கையின் நோவால் பணிக்கின்று தாழ்வே
தணிக்கவும்  யாதுசெய அந்தோ--துணிக்கொன்று
வந்தபயன் கண்டீர் வலித்துயான் கட்டினேன்
நொந்தநிலை மாற்றிற் றது.

16.8.2019

கையில் வந்த வலிக்கு   ஒரு துணி  கட்டியதில்  வலி  குறைந்தது.
துணிக்கும் ஒரு நல்ல பயன்  ஆயிற்று. இந்தப் பாட்டு
அதைப்பற்றியது.

அரும்பொருள்:

நோவு -   துன்பம்,
தாழ்வே  -  மந்த நிலைதான்.
தணிக்க -  வேதனை குறைக்க
அ ந்தோ  -  ஐயோ.
வலித்து  -  இழுத்து  இறுக்கமாக.
நொந்த  -  துன்புற்ற,

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கடினத்தில் எளிமை

கடுமையை. உடையதாய் இருந்த மரத்திலிருந்து உருவான தாள்  சிறப்பாய் அமைந்துவிட்டது.

அதுதான் கடுதாசி.

கடுமையைக் குறிப்பது  கடு என்னும் முதனிலை..

தா என்பது உண்மையில் தாள் என்ற சொல்லின் கடைக்குறை.

தாள்  என்பது நெற்பயிர்களில் உள்ள தாள்.. அதுபோலும் பிற தாள்களையும் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:   வெங்காயத் தாள்.  பூண்டுத் தாள். பிற்காலத்தில்
காகிதத் தாளையும் குறித்தது.  "பேபிரஸ்"  என்னும்  இலை குறித்த சொல்லே பின் பேப்பர் என்ற ஆங்க்கிலச்சொல்லுக்கும் அடியாய் அமைந்தது,

எனவே  கடுதாசிக்குள்  தாவரத் தாள் புகுந்ததில் வியத்தற்கு ஒன்றுமில்லை.

கடு + தாள் + சி.>  கடு + தா(ள்) + சி.

ளகர ஒற்று மறைந்து சொல் தடை ஒலி ஏதுமின்றி ஒழுகுவதுபோல் அமைந்தது  ஒரு திரிந்துசிறத்தலே  ஆகும்.

சி என்பது விகுதி.   இதைச் சிறப்புக்கு அடையாளமாகக் கொள்ளுதலில் தவறில்லை.  சொல் அமைத்த ஒருவரோ  புழங்கிய   ஊர்மக்களோ  இவ்வாறு
ஒலித்தடையை விலக்கிக் குறித்த பொருளின் உயர்வை உணர்த்தி  யிருக்கலாம்..  கடுதாளி என்பதே கடுதாசி எனல் ஒருபுறம் இருக்க.


 திருத்தம் பின்,  (தட்டச்சு)

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

விருந்தாளியும் விருந்தாடியும்.

விருந்தாளி  என்ற சொல்  விருந்தாடி என்றும் உலக வழக்கில் வரும்.  உலக வழக்கு எனல் செய்யுள் வழக்கு அல்லாதது.

இங்கு  யாம் சுட்டிக்காட்ட விரும்பியது  ளகர டகரத் திரிபுகள்.

ஒன்றை ஆளுதல் அதை  நிறுவி நடத்துதலே ஆகும். எனவே  விருந்தாளுதல்  விருந்து ஏற்பாடு செய்து  அதில் பிறர்  பங்கு பெறச்  செய்தல்.  பங்கு பற்றியோர் விருந்தாளிகள்  ஆவர்.

ஆள்  என்பதை  இவ்வாறு உரைக்காமல் நபர் என்று கொள்ளுதலும்  கூடும்.

எவ்வாறாயினும் ஆளி  என்பது  ஆடி என்று திரிகிறது.

இவற்றைக் கவனியுங்கள்.

மள்  >   மாள். ( வினைச்சொல் )  பொருள்:  இறந்துபோ,  உயிர் குறைபடல் ஆகு,
மள்  >   (  மடு  ) >  மடி.   இறந்துபோ,
இன்னொரு காட்டு:  விள் >  விடி.
மள்  >  ( மளி  )  மளிகை   :    உயிரற்ற  விலைப்பொருட்கள்.
மள்குதல்  -  குறைதல்   மள் > மழு>   மழுங்குதல்.
மள் >  மர்
மள்  >   மர்  >  மரி  >   ,மரித்தல்  :  இறத்தல்.
மள் >  மர் >  மரணித்தல்.
மர்  >  மரி  >   மரணம்.
மர் >  மார் >  மாரகம்.

பின்னொருகால் விளக்குவோம்.