புதன், 28 நவம்பர், 2018

Tea and Allergy நீங்கள் தேநீர் குடிப்பவரா? - படியுங்கள்.

தேநீருக்குக் கொழுந்துநீர் என்பது மொழிபெயர்ப்பாகத் தரப்பட்டுள்ளது.

இந்நாள் தேநீர் (  ~ குடிப்போர் தொகை உலகில் அதிகம் என்று நினைக்கிறேன் ) என்பது பெரிதும்  விரும்பப்படும் பானம் ஆகிவிட்டது.  அதனால் கெடுதல் உண்டு என்றும் நன்மை உண்டு என்றும் பலவாறாகச் செய்திகள் நம் செவிகளை எட்டுகின்றன.

வயிற்றுப் போக்குக்கு வெறும் தேநீரை (  பால் இனிப்பு முதலிய இல்லாமல்) இளஞ்சூடாக இரண்டு மூன்று முறை அருந்தினால் அது கட்டுக்குள் வரும் என்பதும் பலர் கூறுகின்றனர்.  நுகர்வில் இது உண்மை என்று அறிகிறோம்.  தேநீரைக் குடித்தால் இரவில் தூக்கம் வருவதில்லை என்பதும் கூறப்படுகின்றது.  இதுவும் உண்மையென்றே கருதும்படி நமது நுகர்வறிவு நமக்குப் புலப்படுத்துகின்றது.  நம் சீன மலாய் அன்பர்களும் இதை நம்புகின்றனர்.

மிகுதியான தாகத்துக்கு ( நீர்விடாய்)  குளிர்க்கட்டிகளை இட்டுத் தேநீர் அருந்தினால் ( பால் சீனி இல்லாமல்)  அந்தத் தாகம் நின்றுவிடும் என்று சிலர் நம்புவர்.

ஒவ்வாமை விளைவிக்கும் பானவகைகளில் தேநீரும் ஒன்று ஆகும்.   இதைப் பற்றிய பலரின் பட்டறிவுரைகள் இங்குக் கிட்டுகின்றன. இதைச் சொடுக்கி வாசிக்கவும்:

Comments for Tea and Allergy - Cause Sore Tongue?

https://www.amazing-green-tea.com/tea-and-allergy-cause-sore-tongue-comments.html 

 

விரைவில் சந்திப்போம்.



 

செவ்வாய், 27 நவம்பர், 2018

கடாட்சம் என்ற சொல் அமைப்பு.

அம்மையின் அருளை வணங்கி வந்த பற்றர்கள் ( பக்தர்கள் )  எவ்வாறாயினும்  அம்மையே இறுதியில் ஆள்பவள் என்ற  உணர்நிலையை எய்தினர்.   இக்கருத்து  எந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்று  பெரும்பாலான மக்களைப் பிணித்து நின்றதோ அக்காலத்திற்றான் கடாட்சம் என்ற சொல்லும் அமைந்திருத்தல் வேண்டும் என்பது எடுத்துச்சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

வரலாற்றுத் தெளிபதிவுகள் இல்லாத இந்தியரிடத்தும் குறிப்பாகத் தமிழரிடத்தும் இதனை ( வரலாற்றை) ஆய்ந்தே காணல்வேண்டும்;  மற்றும் உரையும் எதிருரையும் இன்றி முடிவினை எட்டிவிடுதலும் எளிதன்று.

ஆனால் யாம் இங்கு உரைப்பது சொல்லமைவே; சொல் வரலாறு அன்று.

கடைசியில் ஆள்பவள் அம்மை.

இக்கருத்தைச் சொல்லாக்குவோம்.

கடை + ஆட்சி + அம்
அம் என்பது விகுதி.
கடை என்பதில் ஐகாரம் விலக்கப்படுகிறது:  மீதம் கட அல்லது கட்.

இனி  ஆட்சி என்பதில்  இகரம் விலக்கப்படுகின்றது:   ஆட்ச் என்பது மீதம்.

கட + ஆட்ச் + அம் =  கடாட்சம். புணர்ச்சியில்  கட என்பது கட் என்றேமாறி,  கட்+ ஆ = கடா என்றாகும்.   அகரத்தை முதலிலே விலக்கினும் அப்புறம் விலக்கினும் காணுமொரு வேறுபாடின்மை உணர்க. இறுதிவிளைவு கடாட்சம் என்பதே.

இறுதியாட்சியில் அம்மை அருள்மழை பொழிவாள். என்றலின் இஃது இறுதியருள்,  பேரருள் என்று பொருள்புகட்டும் சொல்லாயிற்று. 

தமிழிலும் வழக்குடைய சொல்லே.  ஆனால் சங்கதத்தில் சொலிக்கும் சொல்லாம்.




வருடம் சொல்

வருதல் என்னும் வினையினடிப்படையில் உண்டாகி உலவும் சொற்கள் பலவாகும்.  இவற்றில் சிலவற்றையாவது அணுக்கமாக நோக்கின், அவை வருதலடிப்படையின என்பது தெற்றெனப் புலனாகும். வேறு சொற்களை அடியாகப் பிறழ உணர்ந்து அயர்ந்தோர் சிலர் உள்ளனர்.

ஆங்கில வருடக் கணக்கு, அறுபதாண்டு சுழல்வட்டத்தில்  அடங்காதது. இன்னும் மூவாயிரமாம் ஆண்டு நாலாயிரமாம் ஆண்டு என்று போய்க்கொண்டிருக்க வல்லது ஆகும். ஆனால் தமிழ் மாதங்கள் என்று சொல்லப்படுபவை அறுபது எனப்படும்; மற்றும் ஒரு சுழற்சியில் அறுபதும் முடிந்துவிட்டால் மீண்டும் ஒன்றாம் ஆண்டிலிருந்து தொடங்குபவையான ஆண்டுகள்   என்பது நீங்கள் அறிந்ததே.  இதிலென்ன இடர் என்றால் ஒரு மன்னன் எந்தக் காலத்தான் என்று பார்ப்பதற்கு எத்தனை சுழற்சிகள் என்று அறிந்தாலே கணக்கிடலாகும்.

ஆண்டு என்பது வருடம் எனப்படும்.  இது வருஷம் எனவும்  சொல்லப்படும்.  இது மழையின் தொடர்பாக அமைந்த சொல் என்பர்.

மழையும் வருவதுதான்;  அதேபோல் ஆண்டுகளும் ஒன்று முடிய இன்னொன்று வருபவைதாம்..

வரு+ உடம்=   வருடம் >  வருஷம்.

மழையினுடன் வருவது வருடம்.   உடம் என்பது உடன் என்பதே.

உடம்படு மெய் என்பதில் உடன்படுத்தும் மெய் என்பதே பொருள்.

வருஷம் எனபது திரிபு.

அம் என்று முடியும் சில அன் என்றும் முடியும்.

அறம் > அறன் என்பது காண்க.


இதையும் வாசித்து மிக்கது அறிக:

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_0.html

திருத்தம் பின்.