செவ்வாய், 4 ஜூலை, 2017

அனுமான்

இன்று அனுமான் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

அனு என்ற முன்னொட்டினை முதலில் அறிவது நலம்.
அனு என்பது அடுத்து நிற்பது என்னும் கருத்தினை உடைய
சொல்.   இது அணு>  அணுகு > அணுகுதல் என்ற
சொல்லினோடு உறவுடைய சொல் ஆம்.  அணுகு என்ற
வினைச்சொல்லில் கு  என்பது  வினையாக்க விகுதி.
அணு என்பதே அடிச்சொல்.   அணு என்பதில் இறுதி உ.
ஒரு சொல்லாக்க விகுதியே.  பளு என்ற சொல்லில் உ
 நிற்பதுபோலவே இங்கு  உள்ளது.

அணு > அணுகு > அணுகுதல்.

அணு =   அனு.

அனு -  அனுப ந்தம் ;
அனு -  அனுசரணை.
அனு - அனுகூலம்.
அனு - அனுபவம்.

இவைபோன்ற பல சொற்களில் அனு என்பது
முன்னொட்டாக நின்றது.

மன் -  மனிதன் என்பதன் அடிச்சொ.ல்
மன் - மான்  - மான் தன் -  மாந்தன்.
மன் - மன்+தி =  மந்தி.  தி - விகுதி.

இவற்றை இங்கு எடுத்துக்காட்டினோம். விளக்கம் பின்.
மற்றும் பழைய இடுகைகளிலும் காணலாம்.

அனு + மன்:  அனுமன். அதாவது மனிதனுக்கு அடுத்த
நிலையினன் என்று பொருள்.  அனுமான் எனினும் அது .

மன் =  மான் .

இது விரிந்து அனுமன் தன் > அனுமந்தன் என்றுமாகும்.

இவை முன் (  ஐந்து  ஆண்டுகளின் முன் )  விளக்கம்பெற்ற
சொற்களே. அவற்றைப் பகைவர் அழித்தனர் என்று தெரிகிறது.

Will edit. Paragraphs could not be justified.







ர்

ஞாயிறு, 2 ஜூலை, 2017

On blogs pretending to be our blog

பொய்வலைப் பூக்கள் பூத்தன இணையத்தில்;
கைவலை போலும்  கயவர் புனைந்தவை
மெய்வலம் போவதை மிதித்துத் துவைத்திட
உய்விலர் ஊத்தையர்  உவந்து விளைத்தவை.

கைவலை :   பக்கவலை;  கூடுதலாக ஏற்படுத்திய இணைய வலை;
ஊத்தை :   அழுக்கு. இங்கு தீயமனம் காட்டுகிறது;

சனி, 1 ஜூலை, 2017

தோற்புக்கரணம் > தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் என்பது எளிதாக அமைப்பறியக்கூடிய
சொல்தான்.

தோப்பு என்பதன் மூலச் சொல் " தொல்" என்பதாகும். இது
பழமை என்று பொருள்தருவதுடன்,  காலக்கழிவினால் இப்போது அடைய எட்டாத நிலையையும் காட்டும்.

தொல் -  தொலை.
தொலை - தொலைத்தல்.
தொலை > தொலைவு.
தொலைதல் (தன்வினை), தொலைத்தல் (பிறவினை).

தொல்லை என்பது, மிக்கப் பழமையினால் இடர்ப்பாடு ஏற்படுதலைக் குறித்தது. இப்போது இடர் என்ற பொதுப்பொருளில் மட்டும் வழங்குகிறது.

தொல் >  தோல் என்று முதனிலை நீண்டது.

தோல் - தோல்வி.  (வெற்றியைத் தொலைத்தல்).
தோல் > தோற்பு  = தோல்வி.

தோற்புக்கரணம்  > தோப்புக்கரணம்.
தோல்வியடைந்தவர் போடும் "கரணம்".

இது மிகவும் சுருக்கமான விளக்கம். பலவற்றை விடவேண்டியதாயிற்று --  நீட்டம் தவிர்க்க.

படித்து இன்புறுங்கள்.