செவ்வாய், 24 நவம்பர், 2015

இலுப்பை மற்றும் இனிமை


==========================

இலுப்பைக்கும் இனிமைக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்வோம்.

இலுப்பைக் காய் பழுத்தவுடன் சர்க்கரை போலும் ஓர் இனிமை இதில் உள்ளது. யாம் சுவைத்துப் பார்த்தவை வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாட்டில் விளைந்தவை. இதை மலாய் மொழியில் "சிக்கு"   chiku என்பார்கள்.  chiku  not siku. Do not mispronounce.  Now written as ciku. 

இலுப்பை என்ற சொல்லின் அடி, இல் என்பது. அது சிதைவு அடையாமல் சொல்லில் இன்னும் வாழ்கின்றது.

இனிமை என்ற சொல்லின் அடி இன் என்பது. இது, இன்> இனி> இனிமை என்று அமைந்தது. இன்மை (இல்லாமை) என்பதில் வரும் இன் - சந்தியில் தோன்றியதாகையால் அது வேறு என்க.


இல் என்பது இன் என்று மாறும். இவ்விரண்டில் இல் என்பதே மூலம். இல் என்பது பல்பொருள் கொண்ட ஓர் மூலச்சொல். இதன் எல்லாப் பரிமாணங்களின் உள்ளும் இங்கு யாம் புக முற்படவில்லை, பரிமாணம் ஆவது பரிந்து சிறப்பது. அதாவது தோன்றிப் போல இருப்பவற்றினின்று அழகுற்று வேறுபடுவது,, தோன்றிப் போன்மையின் வேறுபடல். மாணுதல் = சிறத்தல். மாண்> மாணு > மாணம். எனவே பரிமாணம். பரிதல் - வெளிப்படுதல். பரி > பரிதி. முன் வெளிப்பட்டதாகிய சூரியன். அதிலிருந்து வெளிப்பட்டன ஏனைக் கோள்கள். காற்றுப் பரிதல் ( வெளிப்படல்) என்னும் பேச்சு வழக்கை நோக்குக.. இத் தடப் பெயர்வு நிற்க



இல் = இன். l and n interchangeable  and not language-specific,
இல் >இலுப்பை
இன் > இனிப்பு.

இல்> இலுப்பு> இலுப்பை.
இன் > இனுப்பு > இனிப்பு.
இலுப்பு> இனுப்பு > இனிப்பு.

இனிப்பு என்பதைப் பேச்சில் இனுப்பு என்று பலுக்குவோர் பலர் உளர். அது இனிப்புக்கு முந்திய வடிவம்.

தமிழில் இனுப்பு என்பதை இனுப்பு என்றே பேசினோரும் அதை இனிப்பு என்று பேசினோரும் என இருசாரார் இருக்க, இனிப்பு என்பதே எழுத்தில் முதலில் வந்து நிலைத்துவிட்டது;

மொழி ஆய்வு வேறு. மொழியை தற்கால நிலைப்படி மரபு காத்தல் என்பது வேறு. பேச்சுக்குப் பிந்தியது எழுத்து. விரி வரிக்க - விவரிக்கத் தேவை இல்லை.


Shall meet and greet again.  Pl stay tuned.

Learn more:   பின் து  > பிந்து   முன் து >  முந்து;  மன் + திறம்  மந்திரம்   திறம் >  திரம் Said long ago a few times ........Enjoy.

திங்கள், 23 நவம்பர், 2015

Ancient Tamils:ஆசீவக மதம்

:திரு காந்தி வாண்டையார்   ஆசீவகம்  என்ற சமயம்  பற்றி  எழுதிய சில வரிகள்  இங்கு மீள்பதிவு  செய்யப்பட்டுள்ளன .   நமது  இவ்விடுகைக்கு  இது போதுமானது.  தமிழகத்தில் தோன்றி வளர்ந்த  இந்த  ஆசீவக  மதம்  தன்  சிறப்பியல்புகளில்  சிலவற்றைச்   சமண  (ஜயன )  மதத்திற்கு  வழங்கியுள்ளது.  இதன் கொள்கை ஒற்றுமையின் காரணமாக ஆசீவகத்தைச்  சமணம் என்று  மயங்குவர்  சிலர் .    வெளி  மாநிலம்  ஒன்றில்  முழுவளர்ச்சி  அடைந்த நிலையில்  சமணம் பின் தமிழகத்திற் புகுந்தது. (ACE_or After the Christian Era.) 

#370

F.S.Gandhi vandayar  F.S.G   

Tolkappiam & Thirukkural explicit the   ":Asivagam" 
and this religion was created by tamil 'Aasiriyans'. 

This religion was the base for all traditions in India. Even Buddha learnt Asivakam and included 

some of the concpets into his fold. Jainism never came into being in tamil land before common era. 

Jains also sweeped some of the concepts of Asivakam. All the Stone layouts in tamil land was 

belonging to Asivakam and not jainism. 

The athinathar Jains temples were created during 400 ACE and all of them were turned into siva 

temples now. 

The theory of Jainism in tamil land has been wrongly concluded so far. This has been re-

researched and latest conclusions have been made by scholars. Tamil Iyyanar tradition is the first 

form of Asivakam. 

A detailed topic shall be written by me after some time.

f.s.gandhi  3rd November 2006, 11:37 PM

ஆசீவகம்  பற்றி  மணிமேகலைக்  காப்பியத்திற்   குறிப்பிடப் படுகிறது 


ஆசீவகம்  என்ற சொல்லைப் பார்ப்போம் .


ஆசு  +  ஈவு  +  அகம்,

ஆசு  =  பற்றுக்கோடு;   ஆதரவு,  பற்றி  நிற்பது.

ஈவு  =   தருவது;   இது  ஈதல்  என்ற சொல்லிலிருந்து  அமைந்தது. 

அகம்  -   வீடு;  இங்கு  அமைப்பைக் குறிக்கிறது.

பற்றிக்கொள்ள  ஒன்றும்  கிடைக்காத  மனிதன்  பற்றி  நிற்க இடம்தரும்  கொள்கையமைப்பு.
ஆசிரியன்  என்ற சொல்லும்   ஆசு என்பதினின்றே  தோன்றியுள்ளது. 

இனி  முதற் பதமான  ஆசு என்பதைப்  பார்ப்போம்.

ஆதல் :   தொடங்குதல்,   உண்டாகுதல்.   அமைதல்.  சரியாகுதல், விளைதல்,  முடிதல்.

ஆ >  ஆசு .  சு என்பது  தொழிற்பெயர் விகுதி. 

மா >  மாசு :   அழுக்கு.    மா  என்பது   கருப்புக்கு  அணிமையானது  என்று பொருள் படும்.

வினை அல்லாத சொல்லிலும்  சு  விகுதி  வந்தது.

மா  > மால்.   கருப்பனான  சாமி,
மா  - மா நிறம்
" கரிய மால்  உந்தியில்  வந்தோன்."     :     ஔவையார் 
.

இவ்வாறு  ஆசீவகம் என்ற சொல்லையும்  சொற்பொருளையும்  அறிந்து மகிழ்வீர் . 

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்க......

திருவள்ளுவர்  எந்த மதத்தைச் சார்ந்தவர்  என்பதுபற்றி  சில \ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாதம் நடந்தது.  அதில்  நானும் கலந்துகொண்டு  எழுதினேன்.  அங்கு எழுதியது:  29th August 2006, 10:02 PM

ஆய்வு என்றால் என்ன?

கவிஞர் பாபநாசம் சிவன், திருவள்ளுவரின் வழியைப் பின்பற்றித் தம் பாடல்களின்வாயிலாகப் பல நல்லறங்களைப் போதித்துள்ளார்!!
ஆனால், சிவனின் மதத்தை அவர் பாடல்களின் வழி நாம் நிறுவினால், PhD வாங்குவதுடன், உலகப் புகழும் அடைந்துவிடலாம்.

காந்தியைப் பற்றி எழுதிய சிவன். " அகிம்சைதனிலே புத்தரவர்" என்று ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்.

இன்னொரு பாடலில் "புத்தரைப் போற்றுதல் நம் கடனே" என்றும் பாடியுள்ளார்.

ஆகவே, அவர் பௌத்தர் அல்லது, புத்த மதத்தின்பால் மனச்சாய்வு உள்ளவர்.

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்கச்  சிலர் கையாண்டுள்ள வழியைப் பின்பற்றி, எல்லாருடைய மதங்களையும் கண்டுபிடித்துவிடலாம்.

இதற்காக ஒரு தனித்திரி தொடங்கினால் பௌத்தர்கள் மகிழ்வார்கள். எப்படி என் கண்டுபிடிப்பு? ஆய்வு என்றால் இதன்றோ ஆய்வு

------------------------------------------------------------------
கீய்வு


அப்படியானால் பாடலை வைத்து, வள்ளுவன் என்ன மதம், இளங்கோ என்ன மதம், பாபநாசம் சிவன் என்ன மதம், கம்பதாசன் என்ன மதம், கண்ணதாசன் என்ன மதம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று நீங்கள் கூறுவதுபோல் தெரிகிறதே?

அப்படியானால், இங்கு நடந்துவரும் ஆய்வு உங்களுக்கு உடன்பாடில்லை என்கிறீர்களோ?

ஒரு பாடலை வைத்து, பாரதிதாசன் என்ன மதம் என்று கண்டுபிடித்துவிட்ட நிலையில், இது ஒரு பின்னடைவுதான்!!

பாருங்கள்:

"பின்னை ஒரு கடவுளைப் பேண நினையார்,
பேரொளியைக் காணுவாரென் றாடு பாம்பே!"

என்று பாரதிதாசன் பாடியுள்ளதால், அவர் பௌத்தர் என்று முடிவு செய்யலாம் என்றலவோ எண்ணிக்கொண்டிருந்தேன்!! பேரொளி என்றால் புத்தர்!! The Light of Asia என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்!!

கம்பதாசன்  - கண்ணதாசன் கிறிஸ்தவர்கள்!!
காளிதாசன் மட்டும் காளிபக்தர்!

பாரதி மட்டும் எந்த மதத்திலும் இல்லைபோலும். அவர்:

""யாரும் பணிந்திடும் தெயவம் -- பொருள்
யாவினும் நின்றிடும் தெயவம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டா!"

என்று பாடி, எல்லா மதமும் ஒன்றுதான் என்கிறார்.

எப்படி என் ஆய்வு?

name as indicator of religion

என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என் சொந்தக்காரன் ஒருவன் - பெயர் சுப்ரமணியந்தான். ஒரு மலாய்ப்பெண்ணை மணந்துகொண்டான். இரகசியப் பெயர் ஹாசான் அப்துல்லா!! அலுவலகத்தில், வெளியில் பெயர் சுப்ரமணியன். மலாய்க்காரி (விரிவுரையாளர் ) மனைவி: "abang hasan! abang hasan" என்று கூப்பிடுவாள்.

இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இவனை விடக்கூடாது என்று நாங்கள் கோயில் பூசைக்கு வரி கேட்டோம். 61 மலேசிய வெள்ளி கொடுத்தான். கோவிலுக்கு வந்து எங்களைப் பார்த்து "ஹலோ" சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாடறியாத, இறுதி நாளில் வெளிப்பட்ட மதமாற்றங்கள் பல உள்ளன.

இந்திய நாடு போற்றிய ஒரு பெருந்தலைவர், திருமணத்தின்போது மதமாறிக்கொண்டார், பின்னர் அது மறைக்கப்பட்டது என்று இணைய தளத் தகவல்களில் முன் வந்தது அறிவேன்.

பெயர் ஓர் அடையாளக் குறியாகலாம். ஆனால், முற்றிலும் நம்பத் தகுந்தது அன்று.

இப்படி எழுதியபின் வாதம் ஓரளவு அடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பதாசன் :   அருள்தாரும் தேவமாதாவே என்ற  புகழ்பெற்ற பாடலை  எழுதியவர்.

கண்ணதாசன் :  ஏசு  காவியம் பாடினார் .