செவ்வாய், 2 ஜூன், 2015

சுழல்சுடியும் தோட்டாவும்.

http://sivamaalaa.blogspot.sg/2015/06/blog-post.html


தொடுதல் என்பதன் பொருளை முன் இடுகையில் குறித்திருந்தேன்.  இவை நீங்கள் நன்கு அறிந்தனவே . தோண்டுதல் என்ற பொருளும் அங்கு சொல்லப்பட்டதேயாம் .  "தொட்டனைத் தூறும் மணற்கேணி " எனத் தொடங்கும் தெள்ளுதமிழ் வள்ளுவனாரின் குறளையும் நீங்கள்  ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும்.  இது (தொடுதல்) பல்வேறு பொருட்சாயல்கள் உள்ள சொல் என்பதறிக.

கேணி தோண்டினர் என்பதைக்  கேணி தொட்டனர் என்று உயர்தரத் தமிழில் எழுதலாம். இப்போது இது புரியாது போகலாம். உரை தேவைப்படும்.   மண் தொட்டேன், நீர் சுரந்தது என்றால்,   I touched the soil and water gushed forth  என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டு  இவள் ஒரு மந்திரவாதச் சாமியார் போலும் என்றும் கூறப்படும் சாய்கூறு  தோன்றலாம். நிற்க .

தோண்டினால் (தொட்டால்)  தொட்டபொருள் காதாக இருந்தால்,  துருவப்படும். துவாரம் அல்லது துளை உண்டாகும்.  அதில் அணியும் பொன் நகையை "தோடு" என்கிறோம்.

தொடு >  தோடு.

மண்ணில் தோண்டப்பெற்ற துளை  பாம்பு பூச்சிகள் முதலியன நுழைந்து கொள்ள  இடந்தரும்.  காதணிக்குத் தோண்டிய துளை போல் துருவி மறுபக்கம் வெளி வர இயலாது. அந்தத் தோட்டின் இறுதி மண்ணிற்குள் அமையும்.  இத்தகைய துளையும் "தோடு"  என்று சொல்லப்படும்

இதில்   நீங்கள்  கவனிக்க வேண்டியது:   தோடு என்ற சொல், துளைக்கும் பெயர்.  ( எ-டு : மண் தோடு )    துளையில் அணியும் அணிக்கும் பெயராகிறது.  இப்போது அணிகலன் குறிக்கும் தோடு என்பது மெல்ல மறைந்து வருகிறது. 

Revolver என்ற  சுழல்சுடியில் பன்னிரண்டு தோடுகள் உள்ளன. இவற்றுக்குள்  தோட்டாக்கள் நிரப்பப் பெற்று (loading revolver with ammunition)  கருவி சுடத் தயாராகிவிடும்.  For safety, just load 11,  say experts.  

தோட்டிற்குள் வைக்கப்படுவது "தோட்டா ".

தோடு >  தோடு+ ஆ =  தோட்டா.

"ஆ " என்பது தொழிற்பெயர் விகுதி.   கல் >  கலா.   உண்>  உணா.   நில் >  நிலா.  இவற்றை ஈண்டு விரித்தல் ஆகாது.

ஆ என்பது விகுதியாக இருப்பதோடு ஆதல் என்று குறிப்பால் உணர்த்துவதால்,  தோட்டிற்கு ஆவது தோட்டா என்று விரித்துணர்க.

=========================================================


toTu-tal01 1. to touch, come in contact with, feel or perceive by the touch; 2. to handle, take hold of use; 3. to be connected, united with or joined to; 4. to put on, as a ring, clothes; 5. to dig, scoop out, excavate; 6. to pierce through; 7. to begin; 8. to discharge, as an arrow or other missile; 9. to eat; 10. to think; 11. to play, as a musical instrument; to beat, as a drum; 12. to fasten, insert; 13. to strike, beat; 14. to strain, squeeze out, as juice; 15. to swear upon; 16. to take up, lift; 17. to wash, as clothes; 18. to have illicit intercourse, as with another's wife; 19. to wear, as shoes; to occur, happen, come into being   (Tamil Lexicon )

திங்கள், 1 ஜூன், 2015

சாக்கடை மூடி திருடி

சாக்-கடை மூ-டிகட்-கு  நல்ல  விலை!யே----  அவை
திரு-டியே விற்-பது-வும் என்ன கலையே!
பார்க்-கிற சாலையிரு பக்கம் வேட்டை --- அரசு
பணக்குவை நேர்தலையில் வீசும் சாட்டை.

காவல் துறைமாந்தர் கொண்ட விழிப்பு --- கள்ளர்
தமக்கு விளைத்திட்ட  கம்பி அழைப்பு
மேவும் பொதுவார்க்கு வந்த நலமே  -  நாடு
மேலில் செல்லல்குறிக்  கின்ற  புலமே.


https://sg.news.yahoo.com/red-handed-father-daughter-drain-cover-thieves-caught-224600645.html

Red-handed! Father-and-daughter drain cover thieves caught in the act

the root thodu and its offsprings

தொடு என்பதோர் அழகிய தமிழ்ச் சொல். இதுபோலும் பல சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் வாழ்கின்றன.  மனிதர்கள்  போலும் அவை  குடும்பமாக வாழ்கின்றன.  ஆகையால் ஒரு சொல்லின் குடும்பத்தை அறிந்துகொண்டால் அச்சொல் எந்த மொழிக்குரிய சொல் என்று  அறிந்துகொள்ளலாம் . குடும்பத்தை அறிய  அடிச்சொல் ஆய்வில் முனைந்து  ஈடுபடுதல் வேண்டும் .

தொடு>.தொடர்

தொடுதல் என்னும் நிகழ்ச்சி பலவாறு நிகழலாம்.  \தொடுகின்ற இடத்திலிருந்து  நீண்டு செல்வதை  தொடர்தல் என்கிறோம்.  அர்  என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  இச்சொல் அமைந்துள்ளது.   இப்படி அமைந்த சொற்கள் பலவாம் .   இடு >  இடர்; படு >படர் ;   அடு > அடர்;   அர்  என்பது  பெயர்ச்சொல்லிலும்  வரும் 

தொடு  >  தொடை.

இது  ஐ என்னும் இறுதியைப் பெற்று அமைந்த சொல். உடம்பிலிருந்து தொடர்வது தொடை.
அசை , சீர், தளை  :   தொடுக்கப்படுவது தொடை.  

தொடு  தொ டி

கைகளைத் தொட்டு  நிற்பதுபோல் அணியப்படுவது தொடி  அல்லது வளையல். அன்றித்    தொடுதல் என்பது  தோண்டுதல் என்றும் பொருள்  பெறும் ஆதலின்  தோண்டப் பெற்று வளையமாக்கப் பட்டது  என்றும் பொருள் அமைதல் கூடும்.   நடுவில் உள்ளதைத் தோண்டி எடுத்துவிட்டால் சுற்றி இருப்பதோ வளையமாகிவிடும். இதற்கு மூங்கில் போலும் வட்டமான பொருள் வேண்டும் , பண்டையர் எப்படித்  தொடிகளைச் செய்தனர் என்பதை  இதிலிருந்து சொல்லலாம்  குறுக்கில் அறுத்து நடுவில் உள்ளீடுகளைத் தோண்டி எடுத்திட வேண்டும் .

தொடர்வோம்