செவ்வாய், 9 செப்டம்பர், 2014

Prabakaran

சண்டைவிட்டுச் சரண்புகுந்த பிரபா நல்லோன் ‍‍---கைதி
சாக்குழியுள் வீழ்த்தினவன் என்ன மாந்தன்?
குண்டைவிட்டுக் கொலைபுரிந்த கூன்மூளைக்குள் ---ஒரு
குணமிகுந்த நெஞ்சிரக்கம் தோன்ற லுண்டோ

கப்பலொன்றைத்  தீவுக்குச் செலப்பணித்து---- ‍‍‍உயிர்கள்
காப்பாற்ற முயன்றவம ரிக்கர் மேலோர்  
செப்பலுண்டே இதயமென்றே இல்லை ஆயின்--- ‍‍அன்னோன்
செய்ததெலாம் வன்கொடுமை சீர்கேடன்றோ.

Kashmir floods


அள்ளா இயற்கையால் ஆழ்கடல்போல் சேர்ந்துவிட்ட‌
வெள்ளப் பெருக்கினால் வேதனைக்குள்--- ‍‍‍ தள்ளப்பட்டு,
எல்லாம் இழந்தார்  இடர்பெரிதே  காசுமீரம்
சொல்லால்தேற் றொண்ணாத்  துயர்.

இவ்வளவு நீரையும்  இயற்கை  கொஞ்சம்  கொஞ்சமாய்   எடுத்து  மேகங்க்களாக்கி  வேறிடங்களில்  பெய்திருக்கவேண்டுமே :  அதனால்  "அள்ளா  இயற்கை ".

திங்கள், 8 செப்டம்பர், 2014

மலேசியா தேர்ந்த நாடே!

அரசினரின் தொல்லைகளோ ஒன்றும் இல்லை;
அழகான நல்லமைதி ஆர்க்கும் நாடே!
வெறுசினத்துக் கொள்ளைஎனில் ஒன்றி ரண்டு!
வீணர்சிலர் நிகழ்த்துவன  எங்கே இல்லை?
தருகனத்த ஊர்க்காவல் தாக்கம் கட்டும்!
தக்கபடி மக்களாட்சி ஊக்கிச் சுட்டும்;
திருகனத்த மலேசியா தேர்ந்த நாடே!
தேடினிது  போல்சிலவே ஞால மீதில்.