செவ்வாய், 22 ஏப்ரல், 2014

uthayam உதயம்

அ , இ , உ  என்பன சுட்டுக்கள். இவற்றிலிருந்து அது, இது உது என்பனவும் அவை, இவை, உவை  என்னும்  அவற்றின்  பன்மை வடிவங்களும் தோன்றின.
மொழியில் உது, உவை என்பன இருப்பினும், நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை; அதற்கான இயல்பான வாய்ப்பும் ஏற்படுவதில்லை.

அ , இ , உ  என்பன  பல சொற்களுக்குத் தாயானவை. இவற்றுள் "உ" மிகப்பல சொற்களுக்குத் தாய்.  உ - ஒரு மக்களைப் பெற்ற மகராசி.

காலை முன் எழுவித்து ஒரு பொருளை சற்று கடினமாகத் தொட்டால்,  உது  என்பதிலிருந்து உதை என்ற சொல் பிறந்து, அச்செயலைக் குறிக்கின்றது.

பிற மொழிகள் பெரும்பாலும் தமிழ்ச்  சொல்லின் இரண்டாம் 3எழுத்தை முதலாக்கி அதிலிருந்து சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.

எடுத்துக்காட்டு:

உது > உதை  (தமிழ் )  பேச்சு வழக்கு : உத - ஓத
உதை  > ஒத  >  த >  தி(ண்டாங்)  (மலாய்)..

You have to make a research into many similar words to ascertain what is ("ண்") ("டாங்")

அரு > அருமை  (தமிழ்)
அரு>  ரேர்  (  rare)  ஆங்கிலம். "re" is hardly pronounced or not stressed.

இப்படிப் பல முன்  காட்டியுள்ளேன். அறிஞர்  பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

 சரி, இப்போது உதயம் என்ற சொல்லுக்கு வருவோம்.

உ  (முன்னிலை )

உது  >  உத > உதயம் .   (முன் னெழுதல்)

பல்லாயிரம் ஆண்டுகள் மொழிகள் தனித்தனி வளர்ச்சி  கண்டு உருப்பெற்றதனால்,   சொற்களின் ஒற்றுமை  குன்றியும் வேற்றுமை விரிந்துமே  காணப்பெறும். தொடர்நோக்கின்  (prolonged and focused examination)  பயனாகவே உண்மை உணரலாகும்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

தேவை & தேள்வை

தேவை என்ற சொல்லைச் சிலர் தேள்வை என்றே சொல்வர்.

இவற்றின் தொடர்பினை ஆய்வு செய்வோம்.

நீள் என்ற சொல்,  நீடு எனறும் தோன்றும்.

நீள் + அம் =  நீளம்;

நீடு + அம் =  நீட்டம்.

நீள் =  நீடு.  நீளுதல் ‍    நீடுதல்.   நீள் >  நீடு.

எனவே,  தேள்  >  தேடு.   

தேவை என்பதில் வை என்பது விகுதி. --- மூலம்  தே என்பது.

தே >  தேள் > தேடு.

தே+ வை = தேவை.

தேள் + வை = தேள்வை.

எனவெ, தேள் எனபதில்   ளகர  ஒற்று  குறைந்திருக்கலாம். தே என்றாகியிருக்கலாம்.

அல்லது தே என்பது ள் பெற்று நீண்டிருக்கலாம்.

எனவே,  தேள்வை என்பதும் ஏற்றுக்கொள்ளற்பாலதென்போம். 

பேய்விரட்டும் மந்திரச்சொல்

பின்னல்பாய்  தேங்காய்கள் இவற்றை வைத்துப்
பேய்விரட்டும் மந்திரச்சொல் பிசகா நிற்ப‌
முன்னிவரும் வானூர்தி முயன்றார் காண
முனிவுகொண்ட மக்கள்சிலர் முழுவீச் சாக
என்ன இது! ஏய்ப்பதென எதிர்ப்புக் கொண்டார்
எங்கு சென்று வீழ்ந்ததுவோ எழில்வா  னூர்தி,
அன்னநிகழ் வோடிவரும் அயர்ந்தார் என்றே
அனைவரும்ஓய்ந்  திருந்தார் இவ்  அழகு நாட்டில். 

சின்னாட்கள் முன்பாகச் சிங்கு (1)  மாண்ட‌
செல்வழியே சேர்சாலை இடத்தில் பேய்கள்
இன்னும்தாம் இருப்பவையே என்று கூறி
இவர்மீண்டும் மந்திரம் செய்  நிகழ்வில் நின்றார்
மின்னொளிபோல் புகழ்கூட்டும் செய்கை ஈண்டு
மீள இவர் ஆகாதே என்பர் பல்லோர்
பன்னுமொரு செய்திதனைப் படித்து  நீங்கள்
பாரில்மந்   திரவாதத் துண்மை சொல்வீர்.  


Raja Bomoh spouting mumbo-jumbo again

Magic to chase away spirits

Note:  Recently there was a road accident in which a famous lawyer Kirpal Singh(1)  died.  Now a bomoh (Malay magician) claims that the accident was caused by spirits which he wanted to drive way with his magic.
The poem is on this topic  To get a clearer picture, you may wish to also read the news at the link above.


On a related topic:
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_18.html