பல சுவைக் கவிதைகளில் இப்போது ஓர் அழகிய இனிய பாடலைப் பதிவுசெய்வோம். இப்பாடலை எழுதிய கவிஞர் , இசைமேதை பாப நாசம் சிவன் என்று அறிகிறோம்.

அன்னையும் தந்தையும் தானே --- பாரில்
அண்டசரா சரம் கண்கண்ட தெய்வம்;

தாயினும் கோயிலிங் கேது -- ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திரமேது;
சேயின் கடன் அன்னை தொண்டு -- புண்ணிய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதிலுண்டு!

தாயுடன் தந்தையின் பாதம் --- என்றும்
தலை வணங் காதவன் நாள்தவறாமல்
கோயிலில் சென்றென்ன காண்பான் --- நந்த
கோபாலன் வேண்டும் வரம்தருவானோ?

பொன்னுடன் ஒண்பொருள் பூமி ---- பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வு,
அன்னை பிதாவின்றி ஏது -- மரம்
ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது