ஞாயிறு, 12 ஜூலை, 2009

பகு >>

பகு > பகவு> பகவன்; அல்லது
பகு > பகம் > பகம்+அன் = பக+அன் = பகவன்;
பகு > பங்கு > பங்கன்;
பகு > பாகு > பாகன்;
பகு > பாகு > பங்கு > பாங்கன்.

பகம் என்ற சொல்லுக்கு இறைவனின் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அடைவுகள் (சிறப்பியல்புகள் ) என்ற பொருள் மட்டுமின்றி, வேறு பொருள்களுமுண்டு. மனித உறுப்பு, கொக்கு, குருவி என்ற பொருள்களும் கூறப்படும். ஆதலின், பகவு+ அன் எனப் பிரிப்பதே குழப்பமொன்றுமில்லாததாம்.

செவ்வாய், 7 ஜூலை, 2009

MJackson

ஓடியும் ஆடியும் பாடியும் இந்த
உலகை மகிழ்வித்த வித்தகன், இன்று
நாடியின் துடிப்பு நின்றிட்ட தாலே
ஞால மக்களைத் துயரினில் ஆழ்த்தினன்!

துயர்வயப் பட்டவர் அயர்வினில் வீழ்ந்தவர்
துவண்டவர் தம்நிலை குலைந்தவர் யார்க்கும்
இசைநடம் வழங்கித் தேற்றிய இனியவன்
இன்றுநாம் தாங்கொணாத் துன்பத்தைத் தந்து
இவ்வுல கந்தனை அகன்றது கொடுமை!

என்றினி இவன்போல் இசைப்பெரு மனிதனை
இப்புவி வாழ்வினில் கண்டிடக் கூடும்?
வாழும் ஆண்டுகள் இன்னும் பலவாய்ச்
சூழ நின்றிடும் வேளையில் சென்றது
ஊழ்வலி என்றே அமைவதும் அரிதே
தனியொரு மனிதனாய்த் தணியாத் துன்பம்
பலப்பல கண்டும் துவண்டிட மறுத்தவன்
இனியும் வருவேன் என்றவன் மறைந்தான்
முயற்சி உடையார்க்கு இகழ்ச்சி இல்லென
முன்னோர் உரைத்ததை முன்வந்து நிறுவ
பயிற்சி மேவினன் பரிவொன் றின்றி
அவனையோ காலன் கொல்வது? ............
தவப்பெரு மகன்புகழ் தரணியில் வாழ்கவே!!

வெள்ளி, 12 ஜூன், 2009

பகு சொல்லாய்வு

நல்ல ஆர்வத்துடன் செயல்படுவது தெரிகிறது. நன்று.


இப்போது "பகு" என்பதையே பார்ப்போமே!

Kurukh: paxna
Malto: pakme
Kuruba bata (cf)
Telugu payu

பகு > பகல் > பால்

Tamil. pa-l part, portion, share, section, dividing; எ-டு: அறத்துப்பால்
(pa-n_mai : portion, share; nature.)
Malayalam. pal part.
Kodagi (?). palm (obl. palt-) portion, division.
Toda. polm (obl. polt-) share; subdivision of patrilineal sib.
Kannada: . pal

ஆங்கிலம்: part.

பாற்று = பார்ட் (ஆங்.) ?

பால் + து = பாற்று.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று (திருக்.)


இன்னும் ஏனை மொழிகளிலும் தேடிக் கண்டுபிடித்தால், ஒரு வேளை பயனுடைய நல்ல கருத்து உருவாகலாம்.

திராவிடமொழி ஒப்பாய்வுகள் சென்ற 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இப்போது எண்ணிறந்த நூல்களும் கட்டுரைகளும் உள்ளன.
பல ஆய்வு நிலையங்களும் செயல்படுகின்றன.

உங்கள் கருத்துகளைக் கேட்க ஆவல்.