வியாழன், 6 நவம்பர், 2008

ஒரு திரைப்பாடற் கருத்து - வெண்பாவாக.

பூமிக் கொளிபாயும் கோமகள் கண்விழித்து;
பூவிற் கவள்முகம் மண்ணியதால் --- மேவுபனி; 
பல்லைத் துலக்கின் நுரையாம்் பரவைக்கே; 
என்னைத் தழுவின் மழை.


நண்பர் ் போட்டிருந்த சொற்களையே கூடுமான வரை
வைத்துக்கொண்டு இப்படி மாற்றினேன்்.


 கோதைகண் ஊடொளியால் இவ்வுலகு வெட்டமுற 
வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை 
அதழில் பனிநீர் நுரைகடலாய் ஆழ்ந்தே 
இதழ்வாய் அணைக்கும் மழை. 

 வெட்டம் = வெளிச்சம்; ( ஒரு நண்பருக்காக எழுதிக் கொடுத்தது).

புதன், 5 நவம்பர், 2008

கவிதையைச் சிதைத்து வந்த வெண்பா...!

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும் மதி.

என்ன பா?

வெண்பாவா மாற்றியே வீட்டுமேற் கூரைக்குள்
கண்பாரா நல்லிடத் துள்கரந்து --- நண்பரே!
என்பால் இவண்வந்து இசைத்ததுவும் எப்பாவோ?
அன்போ டெனக்குரைப் பீர்.

வெண்பா என்று நினைத்து வேறொரு பா வரைந்த நண்பருக்குப் பாடியது.